external-link copy
217 : 2

یَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِیْهِ ؕ— قُلْ قِتَالٌ فِیْهِ كَبِیْرٌ ؕ— وَصَدٌّ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَكُفْرٌ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ ۗ— وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ— وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ؕ— وَلَا یَزَالُوْنَ یُقَاتِلُوْنَكُمْ حَتّٰی یَرُدُّوْكُمْ عَنْ دِیْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ— وَمَنْ یَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَیَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

(இந்த) புனித மாதம் அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (பாவத்தால் அதைவிட) மிகப்பெரியதாகும்." இணைவைத்தல் (பாவத்தால்) கொலையைவிட மிகப் பெரியதாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்களை உங்கள் மார்க்கத்தைவிட்டு அவர்கள் திருப்பிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள். info
التفاسير: |

அல்பகரா