លេខ​ទំព័រ:close

external-link copy
63 : 33

یَسْـَٔلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِ ؕ— قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ ؕ— وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِیْبًا ۟

மக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கின்றனர். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கின்றது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா? info
التفاسير: |

external-link copy
64 : 33

اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِیْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِیْرًا ۟ۙ

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை (மறுமையில்) ஏற்படுத்தினான். info
التفاسير: |

external-link copy
65 : 33

خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۚ— لَا یَجِدُوْنَ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۚ

அவர்கள் அதில் எப்போதும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். (தங்களுக்கு) பொறுப்பாளரையோ உதவியாளரையோ காணமாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
66 : 33

یَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِی النَّارِ یَقُوْلُوْنَ یٰلَیْتَنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا ۟

அவர்களது முகங்கள் நெருப்பில் புரட்டப்படுகின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வுக்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! ரசூலுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!” info
التفاسير: |

external-link copy
67 : 33

وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِیْلَا ۟

அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோருக்கும் கீழ்ப்படிந்தோம் அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர். info
التفاسير: |

external-link copy
68 : 33

رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَیْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِیْرًا ۟۠

எங்கள் இறைவா! இருமடங்கு வேதனையை அவர்களுக்கு கொடு! அவர்களை பெரிய சாபத்தால் சபிப்பாயாக! info
التفاسير: |

external-link copy
69 : 33

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ اٰذَوْا مُوْسٰی فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ— وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِیْهًا ۟

நம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்த குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக சிறப்பிற்குரியவராக இருந்தார். info
التفاسير: |

external-link copy
70 : 33

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟ۙ

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நேர்மையான பேச்சை பேசுங்கள். info
التفاسير: |

external-link copy
71 : 33

یُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَیَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ— وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِیْمًا ۟

அவன் (-அல்லாஹ்) உங்கள் அமல்களை உங்களுக்கு சீர்படுத்துவான். உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் கீழ்ப்படிகின்றாரோ திட்டமாக அவர் மகத்தான வெற்றி பெறுவார். info
التفاسير: |

external-link copy
72 : 33

اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَیْنَ اَنْ یَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْاِنْسَانُ ؕ— اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۟ۙ

நிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்கக் கட்டளையை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. அதனால் அவை பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கின்றான். info
التفاسير: |

external-link copy
73 : 33

لِّیُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِیْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِیْنَ وَالْمُشْرِكٰتِ وَیَتُوْبَ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

நயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் அவனது கட்டளைகளை கொடுத்து சோதிக்கின்றான்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கின்றான். info
التفاسير: |