ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
32 : 34

قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْۤا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰی بَعْدَ اِذْ جَآءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِیْنَ ۟

பெருமை அடித்தவர்கள் (-தலைவர்கள்) பலவீனர்களுக்கு (-தங்களை பின்பற்றியவர்களுக்கு) கூறுவார்கள்: நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பாவிகளாக) இருந்தீர்கள். info
التفاسير: |

external-link copy
33 : 34

وَقَالَ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّیْلِ وَالنَّهَارِ اِذْ تَاْمُرُوْنَنَاۤ اَنْ نَّكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗۤ اَنْدَادًا ؕ— وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ؕ— وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِیْۤ اَعْنَاقِ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

பலவீனர்கள் பெருமை அடித்தவர்களுக்கு கூறுவார்கள்: மாறாக, (இது) இரவிலும் பகலிலும் (நீங்கள் எங்களுக்கு) செய்த சூழ்ச்சியாகும். நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் அவனுக்கு இணை (தெய்வங்)களை நாங்கள் ஏற்படுத்துவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் (அனைவரும்) வேதனையை கண்ணால் காணும்போது துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். நிராகரித்தவர்களின் கழுத்துகளில் விலங்குகளை நாம் ஆக்குவோம். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர (வேறு எதற்கும்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா? info
التفاسير: |

external-link copy
34 : 34

وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟

ஓர் ஊரில் நாம் எச்சரிப்பாளரை அனுப்பவில்லை, அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம் என்று (அவர்களிடம்) கூறியே தவிர. (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கின்றனர்.) info
التفاسير: |

external-link copy
35 : 34

وَقَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ— وَّمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟

அவர்கள் கூறினர்: நாங்கள் செல்வங்களாலும் பிள்ளைகளாலும் (உங்களை விட இவ்வுலகில்) அதிகமானவர்கள். (இது எங்கள் மீது இவ்வுலகில் இறைவன் செய்த அருள்.) ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம். info
التفاسير: |

external-link copy
36 : 34

قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக தருகின்றான். (நாடுகின்றவர்களுக்கு) சுருக்கி கொடுக்கின்றான். என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மை தத்துவத்தை) அறியமாட்டார்கள். info
التفاسير: |

external-link copy
37 : 34

وَمَاۤ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِیْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰۤی اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ؗ— فَاُولٰٓىِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِی الْغُرُفٰتِ اٰمِنُوْنَ ۟

உங்கள் செல்வங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை எங்களிடம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக இல்லை. எனினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததற்கு பகரமாக இரு மடங்கு கூலி உண்டு. அவர்கள் (சொர்க்கத்தில் கோபுர) அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள். info
التفاسير: |

external-link copy
38 : 34

وَالَّذِیْنَ یَسْعَوْنَ فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ فِی الْعَذَابِ مُحْضَرُوْنَ ۟

எவர்கள் நமது வசனங்களில் (அவற்றை பொய்ப்பித்து, நம்மை பலவீனப்படுத்த முயல்வார்களோ அவர்கள் (நரக) வேதனைக்கு கொண்டுவரப்படுவார்கள். info
التفاسير: |

external-link copy
39 : 34

قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ— وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَیْءٍ فَهُوَ یُخْلِفُهٗ ۚ— وَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟

(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகின்றான். இன்னும் (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகின்றான். நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அதற்கு அவன் (நல்ல) பகரத்தை ஏற்படுத்துவான். உணவளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன். info
التفاسير: |