ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
32 : 42

وَمِنْ اٰیٰتِهِ الْجَوَارِ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ؕ

கடலில் மலைகளைப் போன்று மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான். info
التفاسير:

external-link copy
33 : 42

اِنْ یَّشَاْ یُسْكِنِ الرِّیْحَ فَیَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰی ظَهْرِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟ۙ

அவன் நாடினால் காற்றுகளை அமைதியாக்கி விடுவான். அவை (-அந்த கப்பல்கள் முன்னேறிச் செல்லாமல்) அதன் மீதே (-அந்த தண்ணீரின் மீதே) அசையாமல் நிற்கக்கூடியதாக ஆகிவிடும். பெரும் பொறுமையாளர்கள், நன்றி உள்ளவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. info
التفاسير:

external-link copy
34 : 42

اَوْ یُوْبِقْهُنَّ بِمَا كَسَبُوْا وَیَعْفُ عَنْ كَثِیْرٍ ۟ۙ

அல்லது (பாவங்களில்) அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவற்றை அவன் அழித்து விடுவான். இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் மன்னித்து (உங்களை தண்டிக்காமல் விட்டு) விடுகிறான். info
التفاسير:

external-link copy
35 : 42

وَّیَعْلَمَ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِنَا ؕ— مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟

நமது வசனங்களில் தர்க்கிப்பவர்களை அவன் நன்கறிவான். தப்பிக்கும் இடம் ஏதும் அவர்களுக்கு இல்லை. info
التفاسير:

external-link copy
36 : 42

فَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی لِلَّذِیْنَ اٰمَنُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚ

நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் இன்பமாகும். நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே சார்ந்திருப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் (மறுமையில்) எது உள்ளதோ அதுதான் மிகச் சிறந்ததும் மிக நிரந்தரமானதும் ஆகும். info
التفاسير:

external-link copy
37 : 42

وَالَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ یَغْفِرُوْنَ ۟ۚ

இன்னும் அவர்கள் பெரும் பாவங்களை விட்டும், மானக்கேடான விஷயங்களை விட்டும் விலகி விடுவார்கள். அவர்கள் கோபப்படும் போது மன்னித்து விடுவார்கள். info
التفاسير:

external-link copy
38 : 42

وَالَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ ۪— وَاَمْرُهُمْ شُوْرٰی بَیْنَهُمْ ۪— وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ۚ

அவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளித்து (அவனை மட்டுமே வணங்கி, இணைவைத்தலை விட்டு விலகி) தொழுகையை நிலை நிறுத்துவார்கள். அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள். info
التفاسير:

external-link copy
39 : 42

وَالَّذِیْنَ اِذَاۤ اَصَابَهُمُ الْبَغْیُ هُمْ یَنْتَصِرُوْنَ ۟

அவர்களுக்கு அநியாயம் நிகழ்ந்தால் அவர்கள் (நீதமாக) பழி வாங்குவார்கள். info
التفاسير:

external-link copy
40 : 42

وَجَزٰٓؤُا سَیِّئَةٍ سَیِّئَةٌ مِّثْلُهَا ۚ— فَمَنْ عَفَا وَاَصْلَحَ فَاَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟

தீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான். info
التفاسير:

external-link copy
41 : 42

وَلَمَنِ انْتَصَرَ بَعْدَ ظُلْمِهٖ فَاُولٰٓىِٕكَ مَا عَلَیْهِمْ مِّنْ سَبِیْلٍ ۟ؕ

யார் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்குவாரோ அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை. info
التفاسير:

external-link copy
42 : 42

اِنَّمَا السَّبِیْلُ عَلَی الَّذِیْنَ یَظْلِمُوْنَ النَّاسَ وَیَبْغُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

குற்றமெல்லாம் மக்களுக்கு அநியாயம் செய்பவர்கள் மீதும், பூமியில் அநியாயமாக வரம்பு மீறுகிறவர்கள் மீதும்தான். அவர்களுக்கு வலிதரக்கூடிய வேதனை உண்டு. info
التفاسير:

external-link copy
43 : 42

وَلَمَنْ صَبَرَ وَغَفَرَ اِنَّ ذٰلِكَ لَمِنْ عَزْمِ الْاُمُوْرِ ۟۠

யார் பொறுமையாக இருப்பாரோ, இன்னும் மன்னிப்பாரோ நிச்சயமாக அது மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும். info
التفاسير:

external-link copy
44 : 42

وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ وَّلِیٍّ مِّنْ بَعْدِهٖ ؕ— وَتَرَی الظّٰلِمِیْنَ لَمَّا رَاَوُا الْعَذَابَ یَقُوْلُوْنَ هَلْ اِلٰی مَرَدٍّ مِّنْ سَبِیْلٍ ۟ۚ

யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) எந்தப் பாதுகாவலரும் அவனுக்கு இல்லை. (நபியே!) நீர் (மறுமையில்) பாவிகளைக் காண்பீர்! அவர்கள் வேதனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று கூறுவார்கள். info
التفاسير: