அல்ஜாஸியா

external-link copy
1 : 45

حٰمٓ ۟ۚ

ஹா, மீம். info
التفاسير: |

external-link copy
2 : 45

تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது. info
التفاسير: |

external-link copy
3 : 45

اِنَّ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰیٰتٍ لِّلْمُؤْمِنِیْنَ ۟ؕ

நிச்சயமாக வானங்கள், இன்னும் பூமியில் பல அத்தாட்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு இருக்கின்றன. info
التفاسير: |

external-link copy
4 : 45

وَفِیْ خَلْقِكُمْ وَمَا یَبُثُّ مِنْ دَآبَّةٍ اٰیٰتٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟ۙ

உங்களைப் படைத்திருப்பதிலும் உயிரினங்களை (பூமியில் பல பாகங்களில்) பரப்பி இருப்பதிலும் உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير: |

external-link copy
5 : 45

وَاخْتِلَافِ الَّیْلِ وَالنَّهَارِ وَمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ السَّمَآءِ مِنْ رِّزْقٍ فَاَحْیَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِیْفِ الرِّیٰحِ اٰیٰتٌ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதிலும் காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير: |

external-link copy
6 : 45

تِلْكَ اٰیٰتُ اللّٰهِ نَتْلُوْهَا عَلَیْكَ بِالْحَقِّ ۚ— فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَ اللّٰهِ وَاٰیٰتِهٖ یُؤْمِنُوْنَ ۟

இவை அல்லாஹ்வின் வசனங்களாகும். இவற்றை உம்மீது உண்மையாகவே நாம் ஓதுகிறோம். அல்லாஹ்(வின் செய்திக்குப் பின்னர்,) இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு பின்னர் எந்த செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்? info
التفاسير: |

external-link copy
7 : 45

وَیْلٌ لِّكُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ

பொய் பேசுகின்ற பாவிகள் எல்லோருக்கும் நாசம்தான். info
التفاسير: |

external-link copy
8 : 45

یَّسْمَعُ اٰیٰتِ اللّٰهِ تُتْلٰی عَلَیْهِ ثُمَّ یُصِرُّ مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ یَسْمَعْهَا ۚ— فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِیْمٍ ۟

அவன் அல்லாஹ்வின் வசனங்கள் தன் மீது ஓதப்படுவதை செவியுறுகின்றான். பிறகு, பெருமை பிடித்தவனாக (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் காட்டுகின்றான் அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல. அவனுக்கு வலி தரக்கூடிய வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுங்கள்! info
التفاسير: |

external-link copy
9 : 45

وَاِذَا عَلِمَ مِنْ اٰیٰتِنَا شَیْـَٔا ١تَّخَذَهَا هُزُوًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟ؕ

நமது வசனங்களில் எதையும் அவன் அறிந்துகொண்டால் அதை கேலியாக எடுத்துக்கொள்கிறான். இவர்களுக்கு இழிவுதரும் வேதனை உண்டு. info
التفاسير: |

external-link copy
10 : 45

مِنْ وَّرَآىِٕهِمْ جَهَنَّمُ ۚ— وَلَا یُغْنِیْ عَنْهُمْ مَّا كَسَبُوْا شَیْـًٔا وَّلَا مَا اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ ۚ— وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ؕ

இவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கின்றது. அவர்கள் சம்பாதித்தது அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் வேதனையில்) எதையும் தடுக்காது. அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களை விட்டும் அல்லாஹ்வின் வேதனையில் எதையும் தடுக்காது.) அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு. info
التفاسير: |

external-link copy
11 : 45

هٰذَا هُدًی ۚ— وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟۠

இதுதான் நேர்வழியாகும். தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்தவர்கள் - அவர்களுக்கு வலி தரக்கூடிய தண்டனையின் வேதனை உண்டு. info
التفاسير: |

external-link copy
12 : 45

اَللّٰهُ الَّذِیْ سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِیَ الْفُلْكُ فِیْهِ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟ۚ

அல்லாஹ்தான் உங்களுக்கு கடலை வசப்படுத்தினான், அதில் அவனது கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், அவனுடைய அருளில் இருந்து நீங்கள் (சம்பாதிக்க) தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும். info
التفاسير: |

external-link copy
13 : 45

وَسَخَّرَ لَكُمْ مَّا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ جَمِیْعًا مِّنْهُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் -இவை அனைத்தையும் அவன் உங்களுக்கு தன் புறத்திலிருந்து வசப்படுத்தினான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير: |