លេខ​ទំព័រ:close

external-link copy
20 : 47

وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ— فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِیْهَا الْقِتَالُ ۙ— رَاَیْتَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یَّنْظُرُوْنَ اِلَیْكَ نَظَرَ الْمَغْشِیِّ عَلَیْهِ مِنَ الْمَوْتِ ؕ— فَاَوْلٰى لَهُمْ ۟ۚ

(இந்த எதிரிகளிடம் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை அடங்கிய) ஓர் அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா என்று நம்பிக்கையாளர்கள் கூறுகின்றார்கள். (சட்டங்கள்) உறுதி செய்யப்பட்ட ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் (எதிரிகளிடம்) போர் (செய்யுங்கள் என்ற கட்டளை) கூறப்பட்டால் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் மரண பயத்தால் மயக்கமுற்றவர்கள் பார்ப்பது போல் அவர்கள் உம் பக்கம் பார்ப்பார்கள். அவர்களுக்கு கேடுதான். info
التفاسير: |

external-link copy
21 : 47

طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ ۫— فَاِذَا عَزَمَ الْاَمْرُ ۫— فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَیْرًا لَّهُمْ ۟ۚ

(போர் செய்வது அவசியமாகி விட்டால் இறைத் தூதருக்கு) கீழ்ப்படிவதும், (உங்களுடன் போருக்கு புறப்படுவோம் என்று) நேர்மையாக பேசுவதும்தான் (உங்கள் செயலாக இருந்தது). ஆனால், (போருக்கு புறப்பட வேண்டும் என்று) கட்டளை உறுதியாகிவிட்டால்... (அதை வெறுத்து போரை சிரமமாக பார்க்கிறீர்கள். அப்படி செய்யாமல்,) அவர்கள் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்திருந்தால் (அதுதான்) அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். info
التفاسير: |

external-link copy
22 : 47

فَهَلْ عَسَیْتُمْ اِنْ تَوَلَّیْتُمْ اَنْ تُفْسِدُوْا فِی الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ ۟

(அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் விலகிவிட்டால் பூமியில் குழப்பம் செய்வீர்கள்தானே! உங்கள் இரத்த உறவுகளை துண்டித்து விடுவீர்கள்தானே! (அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு விலகக்கூடியவர் பூமியில் கலகம் செய்து உறவுகளை துண்டிப்பவராக ஆகிவிடுவார்.) info
التفاسير: |

external-link copy
23 : 47

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰۤی اَبْصَارَهُمْ ۟

அவர்கள்தான் அல்லாஹ் அவர்களை சபித்தான்; அவர்களை அவன் செவிடாக்கி விட்டான்; அவர்களின் பார்வைகளை குருடாக்கி விட்டான். info
التفاسير: |

external-link copy
24 : 47

اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰی قُلُوْبٍ اَقْفَالُهَا ۟

குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? (அவர்களது) உள்ளங்கள் மீது அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன? info
التفاسير: |

external-link copy
25 : 47

اِنَّ الَّذِیْنَ ارْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدَی ۙ— الشَّیْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ— وَاَمْلٰی لَهُمْ ۟

(முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களில்) நிச்சயமாக தங்களுக்கு நேர்வழி தெளிவானதற்குப் பின்னர் தங்களது பின் புறங்களின் மீதே திரும்பிச் சென்றவர்கள் - ஷைத்தான் அவர்களுக்கு (கெட்ட செயலை செய்யத் தூண்டி அதை) அலங்கரித்தான். (அல்லாஹ்) அவர்களை (சிறிது காலம்) விட்டு வைத்துள்ளான். info
التفاسير: |

external-link copy
26 : 47

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِیْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِیْعُكُمْ فِیْ بَعْضِ الْاَمْرِ ۚ— وَاللّٰهُ یَعْلَمُ اِسْرَارَهُمْ ۟

இது ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கியதை வெறுத்தவர்களிடம் (நயவஞ்சகர்களிடம்), “சில விஷங்களில் உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். இவர்கள் தங்களுக்குள் பேசுவதை அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير: |

external-link copy
27 : 47

فَكَیْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۟

அவன் எப்படி அறியாமல் இருப்பான்! வானவர்கள் அவர்களை உயிர் வாங்கும் போது அவர்களின் முகங்களையும் அவர்களின் பின் புறங்களையும் அடிப்பார்கள். info
التفاسير: |

external-link copy
28 : 47

ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟۠

இது (வானவர்கள் இப்படி அடிப்பது) ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விற்கு கோபமூட்டியதை பின்பற்றினார்கள். அவனது பொருத்தத்தை வெறுத்தார்கள். ஆகவே, அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான். info
التفاسير: |

external-link copy
29 : 47

اَمْ حَسِبَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ یُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ۟

தங்களது உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் எண்ணிக் கொண்டார்களா “அல்லாஹ் அவர்களின் குரோதங்களை (நம்பிக்கையாளர்களுக்கு) வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று?” info
التفاسير: |