காஃப்

external-link copy
1 : 50

قٓ ۫— وَالْقُرْاٰنِ الْمَجِیْدِ ۟ۚ

காஃப், கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்) info
التفاسير: |

external-link copy
2 : 50

بَلْ عَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا شَیْءٌ عَجِیْبٌ ۟ۚ

மாறாக, (அவர்களோ) அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆகவே, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்த)னர். (அப்போது உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று நபி அவர்களை எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:) info
التفاسير: |

external-link copy
3 : 50

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۚ— ذٰلِكَ رَجْعٌ بَعِیْدٌ ۟

நாங்கள் இறந்து, மண்ணாக ஆகிவிட்டாலுமா (-மீண்டும் உயிருடன் நாங்கள் எழுப்பப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவோம்)? அது (-இறந்தபின் எழுப்பப்படுவது) தூரமான மீட்சியாகும். info
التفاسير: |

external-link copy
4 : 50

قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْاَرْضُ مِنْهُمْ ۚ— وَعِنْدَنَا كِتٰبٌ حَفِیْظٌ ۟

அவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். நம்மிடம் (நன்கு) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்படுகிறது. அது மிக்க பாதுகாப்பானது.) info
التفاسير: |

external-link copy
5 : 50

بَلْ كَذَّبُوْا بِالْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِیْۤ اَمْرٍ مَّرِیْجٍ ۟

மாறாக, அவர்கள் உண்மையை (-இந்த குர்ஆனை), அது அவர்களிடம் வந்தபோது பொய்ப்பித்தனர். அவர்கள் குழப்பமான ஒரு விஷயத்தில் இருக்கின்றனர். info
التفاسير: |

external-link copy
6 : 50

اَفَلَمْ یَنْظُرُوْۤا اِلَی السَّمَآءِ فَوْقَهُمْ كَیْفَ بَنَیْنٰهَا وَزَیَّنّٰهَا وَمَا لَهَا مِنْ فُرُوْجٍ ۟

அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, நாம் அதை எப்படி படைத்தோம்? அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (-கீறல்கள், வெடிப்புகள்) இல்லை என்பதை (அவர்கள்) பார்க்கவில்லையா? info
التفاسير: |

external-link copy
7 : 50

وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَیْنَا فِیْهَا رَوَاسِیَ وَاَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟ۙ

இன்னும் பூமியை நாம் விரித்தோம். அதில் பெரிய மலைகளை அமைத்தோம். இன்னும் அதில் அழகான எல்லா வகையான தாவரங்களை முளைக்க வைத்தோம். info
التفاسير: |

external-link copy
8 : 50

تَبْصِرَةً وَّذِكْرٰی لِكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟

(அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் (அவர்கள் இறை அத்தாட்சிகளை) உற்று நோக்குவதற்காகவும் (அவற்றின் மூலம்) படிப்பினை பெறுவதற்காகவும் (நமது வசனங்களை விவரிக்கின்றோம்). info
التفاسير: |

external-link copy
9 : 50

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَكًا فَاَنْۢبَتْنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِیْدِ ۟ۙ

நாம் வானத்தில் இருந்து அருள் நிறைந்த நீரை இறக்கினோம். அதன் மூலம் தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்க வைத்தோம். info
التفاسير: |

external-link copy
10 : 50

وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِیْدٌ ۟ۙ

இன்னும் உயரமான பேரித்த மரங்களையும் (நாம் முளைக்க வைத்தோம்). அவற்றில் அடர்த்தியான குலைகள் இருக்கின்றன. info
التفاسير: |

external-link copy
11 : 50

رِّزْقًا لِّلْعِبَادِ ۙ— وَاَحْیَیْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ؕ— كَذٰلِكَ الْخُرُوْجُ ۟

அடியார்களுக்கு உணவாக இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும். info
التفاسير: |

external-link copy
12 : 50

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّاَصْحٰبُ الرَّسِّ وَثَمُوْدُ ۟ۙ

இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் ஸமூது சமுதாய மக்களும் (தூதர்களைப்) பொய்ப்பித்தனர். info
التفاسير: |

external-link copy
13 : 50

وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍ ۟ۙ

இன்னும், ஆது சமுதாய மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (தூதர்களைப்) பொய்ப்பித்தனர். info
التفاسير: |

external-link copy
14 : 50

وَّاَصْحٰبُ الْاَیْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ؕ— كُلٌّ كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیْدِ ۟

தோட்டக்காரர்களும் துப்பஃ உடைய மக்களும் (இவர்கள்) எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, என் எச்சரிக்கை உறுதியாகிவிட்டது. info
التفاسير: |

external-link copy
15 : 50

اَفَعَیِیْنَا بِالْخَلْقِ الْاَوَّلِ ؕ— بَلْ هُمْ فِیْ لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِیْدٍ ۟۠

முதல் முறை படைத்ததினால் நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? (இல்லையே). மாறாக, அவர்கள் (இறந்தபின் மறுமையில்) புதிதாக படைக்கப்படுவதில் குழப்பத்தில் இருக்கின்றனர். info
التفاسير: |