ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அந்நஜ்ம்

external-link copy
1 : 53

وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ

(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது, info
التفاسير: |

external-link copy
2 : 53

مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ

உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.) info
التفاسير: |

external-link copy
3 : 53

وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕۚ

(இந்த குர்ஆனை) மன இச்சையால் அவர் பேச மாட்டார். info
التفاسير: |

external-link copy
4 : 53

اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ

இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர வேறு இல்லை. info
التفاسير: |

external-link copy
5 : 53

عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ

ஆற்றலால் வலிமை மிக்கவர் (-ஜிப்ரீல்) இவருக்கு இதை கற்பித்தார். info
التفاسير: |

external-link copy
6 : 53

ذُوْ مِرَّةٍ ؕ— فَاسْتَوٰی ۟ۙ

அவர் (வலிமையும்) அழகிய தோற்றமு(ம் உ)டையவர். ஆக, அவர் (நபியை நேருக்கு நேர்) சமமாக சந்தித்தார். info
التفاسير: |

external-link copy
7 : 53

وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ

(தூதரான) அவரும் (வானவரான ஜிப்ரீலும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்). info
التفاسير: |

external-link copy
8 : 53

ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ

பிறகு, அவர் (அவருக்கு) நெருக்கமானார். இன்னும் மிக அதிகமாக (அவரை) நெருங்கினார். info
التفاسير: |

external-link copy
9 : 53

فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ

அவர் (அவருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக நெருக்கமாக ஆகிவிட்டார். info
التفاسير: |

external-link copy
10 : 53

فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ

அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார். info
التفاسير: |

external-link copy
11 : 53

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟

(நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.) info
التفاسير: |

external-link copy
12 : 53

اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟

அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா? info
التفاسير: |

external-link copy
13 : 53

وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ

திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார், info
التفاسير: |

external-link copy
14 : 53

عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟

“ஸித்ரத்துல் முன்தஹா” என்ற இடத்தில். info
التفاسير: |

external-link copy
15 : 53

عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ

அங்குதான் அல்மஃவா சொர்க்கம் இருக்கின்றது. (ஸித்ரதுல் முன்தஹா -இறுதி இடத்தில் உள்ள இலந்தை மரம்.) info
التفاسير: |

external-link copy
16 : 53

اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ

எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த ஸித்ராவை (-இலந்தை மரத்தை) சூழ்ந்து கொள்ளும் போது (அவர் அவரை மற்றொரு முறை பார்த்தார்). info
التفاسير: |

external-link copy
17 : 53

مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟

(நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவில்லை, (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை. info
التفاسير: |

external-link copy
18 : 53

لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟

திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார். info
التفاسير: |

external-link copy
19 : 53

اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ

லாத், உஸ்ஸா பற்றி நீங்கள் அறிவியுங்கள்! info
التفاسير: |

external-link copy
20 : 53

وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟

இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றி அறிவியுங்கள்! (-இவை, அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?) info
التفاسير: |

external-link copy
21 : 53

اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الۡاُنۡثٰى‏ ۟

உங்களுக்கு (நீங்கள் விரும்புகின்ற) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கின்ற) பெண் பிள்ளையுமா? (இப்படியா நீங்கள் கற்பனை செய்கின்றீர்கள்)! info
التفاسير: |

external-link copy
22 : 53

تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟

அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும். info
التفاسير: |

external-link copy
23 : 53

اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ— وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ

இவை எல்லாம் வெறும் பெயர்களே தவிர வேறில்லை. இவற்றுக்கு நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் வைத்தீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புகின்றதையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி திட்டவட்டமாக வந்துள்ளது (அதாவது இவற்றை வணங்குவது கூடாது, வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே தவிர வேறு யாருக்கும் தகுதியாகாது.) info
التفاسير: |

external-link copy
24 : 53

اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ

மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா? info
التفاسير: |

external-link copy
25 : 53

فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠

மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது. info
التفاسير: |

external-link copy
26 : 53

وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟

வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் வேதனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகின்ற, அவன் விரும்புகின்றவருக்கு (மட்டுமே பலன் தரும்). info
التفاسير: |