ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

លេខ​ទំព័រ:close

external-link copy
111 : 6

وَلَوْ اَنَّنَا نَزَّلْنَاۤ اِلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتٰی وَحَشَرْنَا عَلَیْهِمْ كُلَّ شَیْءٍ قُبُلًا مَّا كَانُوْا لِیُؤْمِنُوْۤا اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ یَجْهَلُوْنَ ۟

(அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை அல்லாஹ் நாடினால் தவிர. எனினும் நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
112 : 6

وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا شَیٰطِیْنَ الْاِنْسِ وَالْجِنِّ یُوْحِیْ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا ؕ— وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا یَفْتَرُوْنَ ۟

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு அலங்காரமான சொல்லை ஏமாற்றுவதற்காக அறிவிக்கின்றனர். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டுவதையும் விட்டுவிடுவீராக. info
التفاسير:

external-link copy
113 : 6

وَلِتَصْغٰۤی اِلَیْهِ اَفْـِٕدَةُ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِیَرْضَوْهُ وَلِیَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ ۟

மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் அதன் பக்கம் செவிசாய்ப்பதற்காகவும், அதை அவர்கள் திருப்தி கொள்வதற்காகவும், அவர்கள் செய்(யும்) ப(ாவமான)வற்றை செய்வதற்காகவும் (ஷைத்தான்கள் அவர்களை ஏமாற்றினர்). info
التفاسير:

external-link copy
114 : 6

اَفَغَیْرَ اللّٰهِ اَبْتَغِیْ حَكَمًا وَّهُوَ الَّذِیْۤ اَنْزَلَ اِلَیْكُمُ الْكِتٰبَ مُفَصَّلًا ؕ— وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟

"தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா (நான்) தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு வேதத்தை நன்கு விவரிக்கப்பட்டதாக இறக்கினான்.” (என்று நபியே! கூறுவீராக). (இதற்கு முன்னர்) நாம் வேதம் கொடுத்தவர்கள், நிச்சயமாக, இது உம் இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர். info
التفاسير:

external-link copy
115 : 6

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلًا ؕ— لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

(நபியே!) உம் இறைவனின் வாக்கு உண்மையாலும் நீதத்தாலும் முழுமையாகியது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் அறவே இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
116 : 6

وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِی الْاَرْضِ یُضِلُّوْكَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟

இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுப்பார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையை பின்பற்றுவோராக) அவர்கள் இல்லை. info
التفاسير:

external-link copy
117 : 6

اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ یَّضِلُّ عَنْ سَبِیْلِهٖ ۚ— وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟

(நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுபவரை மிக அறிந்தவன். அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன். info
التفاسير:

external-link copy
118 : 6

فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَیْهِ اِنْ كُنْتُمْ بِاٰیٰتِهٖ مُؤْمِنِیْنَ ۟

ஆகவே, நீங்கள் அவனு (அல்லாஹ்வு)டைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள். info
التفاسير: