ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
70 : 6

وَذَرِ الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ ۖۗ— لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ ۚ— وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا یُؤْخَذْ مِنْهَا ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ— لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠

(நபியே!) உலக வாழ்க்கை அவர்களை மயக்கி, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டவர்களை (விட்டு) விடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானவர்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் வேதனையும் இவர்களுக்கு உண்டு. info
التفاسير: