ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
157 : 7

اَلَّذِیْنَ یَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِیَّ الْاُمِّیَّ الَّذِیْ یَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِی التَّوْرٰىةِ وَالْاِنْجِیْلِ ؗ— یَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَیَنْهٰىهُمْ عَنِ الْمُنْكَرِ وَیُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَیُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ وَیَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِیْ كَانَتْ عَلَیْهِمْ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَاتَّبَعُوا النُّوْرَ الَّذِیْۤ اُنْزِلَ مَعَهٗۤ ۙ— اُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟۠

அவர்கள் தங்களிடமுள்ள தவ்றாத் இன்னும் இன்ஜீலில் குறிப்பிடப்பட்டவராக தாங்கள் காண்கின்ற எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியான இத்தூதரை பின்பற்றுவார்கள். (இத்தூதர்) அவர்களுக்கு நன்மையை ஏவுவார், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார். அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட ஒளியை (குர்ஆனை) பின்பற்றுகிறவர்கள் அவர்கள்தான் வெற்றியாளர்கள். info
التفاسير: