ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

நூஹ்

external-link copy
1 : 71

اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) அனுப்பினோம், நீர் உமது மக்களை வலி தரக்கூடிய தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் எச்சரிப்பீராக! info
التفاسير: |

external-link copy
2 : 71

قَالَ یٰقَوْمِ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ

அவர் கூறினார்: என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன். info
التفاسير: |

external-link copy
3 : 71

اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِیْعُوْنِ ۟ۙ

அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! எனக்கு கீழ்ப்படியுங்கள்! info
التفاسير: |

external-link copy
4 : 71

یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرْكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا یُؤَخَّرُ ۘ— لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே! info
التفاسير: |

external-link copy
5 : 71

قَالَ رَبِّ اِنِّیْ دَعَوْتُ قَوْمِیْ لَیْلًا وَّنَهَارًا ۟ۙ

அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன். info
التفاسير: |

external-link copy
6 : 71

فَلَمْ یَزِدْهُمْ دُعَآءِیْۤ اِلَّا فِرَارًا ۟

எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்த வில்லை (அவர்கள் எனது அழைப்பை விட்டு) விரண்டு ஓடுவதைத் தவிர. info
التفاسير: |

external-link copy
7 : 71

وَاِنِّیْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِیَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ۟ۚ

நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும் (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். இன்னும் பெருமையடித்தனர். info
التفاسير: |

external-link copy
8 : 71

ثُمَّ اِنِّیْ دَعَوْتُهُمْ جِهَارًا ۟ۙ

பிறகு, நிச்சயமாக நான் அவர்களை உரக்க (பகிரங்கமாக) அழைத்தேன். info
التفاسير: |

external-link copy
9 : 71

ثُمَّ اِنِّیْۤ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۟ۙ

பிறகு நிச்சயமாக நான் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக, இரகசியமாகப் பேசினேன். info
التفاسير: |

external-link copy
10 : 71

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ۫— اِنَّهٗ كَانَ غَفَّارًا ۟ۙ

நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான். info
التفاسير: |

external-link copy
11 : 71

یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا ۟ۙ

அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான். info
التفاسير: |

external-link copy
12 : 71

وَّیُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَیَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّیَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًا ۟ؕ

இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான். info
التفاسير: |

external-link copy
13 : 71

مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا ۟ۚ

உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை நீங்கள் பயப்படுவதில்லை? info
التفاسير: |

external-link copy
14 : 71

وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا ۟

திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான். info
التفاسير: |

external-link copy
15 : 71

اَلَمْ تَرَوْا كَیْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۟ۙ

ஏழு வானங்களை அடுக்கடுக்காக அல்லாஹ் எப்படி படைத்தான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? info
التفاسير: |

external-link copy
16 : 71

وَّجَعَلَ الْقَمَرَ فِیْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ۟

அவற்றில் சந்திரனை ஒளியாக அவன் ஆக்கினான். இன்னும், சூரியனை விளக்காக ஆக்கினான். info
التفاسير: |

external-link copy
17 : 71

وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۟ۙ

அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (மண்ணிலிருந்து உருவாக்கினான்.) info
التفاسير: |

external-link copy
18 : 71

ثُمَّ یُعِیْدُكُمْ فِیْهَا وَیُخْرِجُكُمْ اِخْرَاجًا ۟

பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும் (அதிலிருந்து) அவன் உங்களை வெளியேற்றுவான். info
التفاسير: |

external-link copy
19 : 71

وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًا ۟ۙ

அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். info
التفاسير: |

external-link copy
20 : 71

لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ۟۠

அதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக. info
التفاسير: |

external-link copy
21 : 71

قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ

நூஹ் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர். (வசதிபடைத்த தலைவர்களைத்தான் அவர்கள் பின்பற்றினார்கள்.) info
التفاسير: |

external-link copy
22 : 71

وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا ۟ۚ

இன்னும் மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள். info
التفاسير: |

external-link copy
23 : 71

وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ۬— وَّلَا یَغُوْثَ وَیَعُوْقَ وَنَسْرًا ۟ۚ

இன்னும் கூறினார்கள்: நீங்கள் நிச்சயமாக உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். இன்னும் வத்து, சுவாஃ, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகிய தெய்வங்களை விட்டு விடாதீர்கள். info
التفاسير: |

external-link copy
24 : 71

وَقَدْ اَضَلُّوْا كَثِیْرًا ۚ۬— وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا ضَلٰلًا ۟

அவர்கள் (-சமுதாயத் தலைவர்கள்) பலரை வழி கெடுத்தனர். (இறைவா!) அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர நீ அதிகப்படுத்தாதே! info
التفاسير: |

external-link copy
25 : 71

مِمَّا خَطِیْٓـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ۙ۬— فَلَمْ یَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا ۟

அவர்களுடைய பாவங்களால் அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டார்கள். பிறகு, நரகத்தில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவியாளர்களை காணவில்லை. info
التفاسير: |

external-link copy
26 : 71

وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟

நூஹ் கூறினார்: என் இறைவா! நிராகரிப்பாளர்களில் வசிக்கின்ற எவரையும் பூமியில் நீ (அழிக்காமல்) விட்டு விடாதே! info
التفاسير: |

external-link copy
27 : 71

اِنَّكَ اِنْ تَذَرْهُمْ یُضِلُّوْا عِبَادَكَ وَلَا یَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا ۟

நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டு விட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (தாங்கள் பெற்றெடுக்கின்ற பிள்ளைகளையும் வழிகெடுத்து விடுவார்கள்.) info
التفاسير: |

external-link copy
28 : 71

رَبِّ اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِمَنْ دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا تَبَارًا ۟۠

என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்து விட்டவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர அதிகப்படுத்தாதே! info
التفاسير: |