ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்இன்ஸான்

external-link copy
1 : 76

هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟

காலத்தில் இருந்து ஒரு நேரம் மனிதனுக்கு வரவில்லையா, (அந்த காலத்தில்) நினைவு கூரப்படுகின்ற ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை? info
التفاسير: |

external-link copy
2 : 76

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ— نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟ۚ

நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண்ணுடைய இந்திரியத்தில் இருந்து) கலக்கப்பட்ட விந்துத் துளியிலிருந்து படைத்தோம். அவனை நாம் சோதிக்கின்றோம். ஆகவே, அவனை செவியுறுபவனாக, பார்ப்பவனாக ஆக்கினோம். info
التفاسير: |

external-link copy
3 : 76

اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟

நிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு, அல்லது நன்றி கெட்டவனாக இருப்பதற்கு. info
التفاسير: |

external-link copy
4 : 76

اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟

நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களுக்கு (அவர்களின் கை, கால்களை கட்டுவதற்கு) சங்கிலிகளையும் (கைகளுக்கு) விலங்குகளையும் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் தயார் செய்துள்ளோம். info
التفاسير: |

external-link copy
5 : 76

اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ

நிச்சயமாக நல்லவர்கள் ஒரு மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும். info
التفاسير: |