அல்பையினாஹ்

external-link copy
1 : 98

لَمْ یَكُنِ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِیْنَ مُنْفَكِّیْنَ حَتّٰی تَاْتِیَهُمُ الْبَیِّنَةُ ۟ۙ

வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கை யிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை. info
التفاسير: |

external-link copy
2 : 98

رَسُوْلٌ مِّنَ اللّٰهِ یَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةً ۟ۙ

(அந்தச் சான்று) பரிசுத்தமான ஏடுகளை ஓதுகின்ற அல்லாஹ் விடமிருந்து (அனுப்பப்பட்டுள்ள முஹம்மது எனும்) தூதர் ஆவார். info
التفاسير: |

external-link copy
3 : 98

فِیْهَا كُتُبٌ قَیِّمَةٌ ۟ؕ

அவற்றில் (அந்த வேத ஏடுகளில்) நேரான (நீதியான) சட்டங்கள் உள்ளன. info
التفاسير: |

external-link copy
4 : 98

وَمَا تَفَرَّقَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنَةُ ۟ؕ

வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களிடம் தெளிவான சான்று வந்த பின்னர் தவிர (நபியைப் பின்பற்றுவோம் என்ற தங்கள் கொள்கையிலிருந்து) பிரியவில்லை. info
التفاسير: |

external-link copy
5 : 98

وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۙ۬— حُنَفَآءَ وَیُقِیْمُوا الصَّلٰوةَ وَیُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِ ۟ؕ

இணைவைப்பை விட்டு விலகியவர்களாக, வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர (வேறெதற்கும்) அவர்கள் ஏவப்படவில்லை. இதுதான் நேரான (நீதியான சட்டங்களுடைய) மார்க்கமாகும். info
التفاسير: |