Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಸ್ಸಾಫ್ಫಾತ್   ಶ್ಲೋಕ:
فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ
37.103. இருவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அறுக்குமாறு ஏவப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக இப்ராஹீம் தம் மகனை முகங்குப்புற கிடத்தி வைத்த போது,
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ
37.104. அவர் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இஸ்மாயீலை அறுக்க நெருங்கிய போது “இப்ராஹீமே” என்று நாம் அவரை அழைத்தோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ— اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
37.105. உமது மகனை அறுக்க உறுதி பூண்டதன் மூலம் நீர் கண்ட கனவை உண்மைப்படுத்திக் காட்டினீர். -இந்த மாபெரும் சோதனையிலிருந்து நாம் உம்மை விடுவித்து கூலி வழங்கியது போன்றே- நிச்சயமாக நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம். சோதனைகளிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் அவர்களை விடுவிக்கின்றோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟
37.106. நிச்சயமாக இது தெளிவான சோதனையாகும். இப்ராஹீம் அதில் வெற்றி பெற்றுவிட்டார்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟
37.107. இஸ்மாயீலுக்குப் பகரமாக அறுக்கப்படுவதற்கு பரிகாரமாக ஒரு பெரும் செம்மறியாட்டை வழங்கினோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗ
37.108. பின்னர் தோன்றிய தலைமுறைகளில் இப்ராஹீமிற்கு நற்பெயரை நிலைத்திருக்கச் செய்தோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟
37.109. அவருக்கு அல்லாஹ்வின் வாழ்த்தும் எல்லா வகையான தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் பிரார்த்தனையும் கிடைக்கட்டும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
37.110. நாம் இப்ராஹீமுக்குக் அவரது கட்டுப்பாட்டுக்குக் கூலி வழங்கியது போன்றே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
37.111. நிச்சயமாக இப்ராஹீம் அல்லாஹ்வின் அடிமைத்துவத்துக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்றும் நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் உள்ளவராக இருந்தார்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
37.112. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தம் ஒரே மகனான இஸ்மாயீலை அறுக்க துணிந்ததற்குக் கூலியாக நாம் அவருக்கு இன்னொரு குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினோம். அக்குழந்தை நபியாகவும் நல்லடியாராகவும் மாறும். அவர்தான் இஸ்ஹாக் ஆவார்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ— وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠
37.113. நாம் அவர் மீதும் அவருடைய மகன் இஸ்ஹாக் மீதும் அருள் வளங்களை இறக்கினோம். அவர்கள் இருவருக்கும் ஏராளமான அருட்கொடைகளை வழங்கினோம். அவற்றில் அவர்கள் இருவருக்கும் அதிகமான குழந்தைகள் வழங்கப்பட்டதும் அடங்கும். அவர்கள் இருவரின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நற்செயல் புரிபவர்களும் இருந்தார்கள். அவர்களில் நிராகரித்து பாவங்கள் புரிந்து தமக்குத் தாமே தெளிவாக அநீதி இழைப்பவர்களும் இருந்தார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ
37.114. நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரர் ஹாரூனுக்கும் நபித்துவத்தை வழங்கி அவர்கள் மீது அருள்புரிந்தோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ
37.115. அவர்கள் இருவரையும் அவர்களின் சமூகமான இஸ்ராயீலின் மக்களையும் ஃபிர்அவ்னின் அடிமைத்தனத்திலிருந்தும் மூழ்குவதிலிருந்தும் நாம் காப்பாற்றினோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ
37.116. ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய படையினருக்கும் எதிராக நாம் அவர்களுக்கு உதவிபுரிந்தோம். அவர்களே தமது எதிரிகளை விட மேலோங்கி நின்றார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ
37.117. நாம் மூஸாவுக்கும் அவரது சகோதரர் ஹாரூனுக்கும் தவ்ராத்தை அல்லாஹ்விடமிருந்து சந்தேகமற்ற தெளிவான வேதமாக வழங்கினோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ
37.118. அவர்களுக்கு கோணலற்ற நேரான வழியைக் காட்டினோம். அது படைத்தவனின் திருப்தியைப் பெற்றுத்தரும் இஸ்லாம் எனும் மார்க்கத்தின் வழியாகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙۖ
37.119. பின்னால் வந்த தலைமுறைகளில் அவர்கள் இருவருக்கும் நற்பெயரையும் நற்புகழையும் நிலைத்திருக்கும்படிச் செய்தோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟
37.120. அவர்கள் இருவருக்கும் அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் தீங்கான எல்லா விஷயங்களை விட்டும் தப்புவதற்கான துஆவும் உண்டு.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
37.121. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் இந்த அழகிய கூலியை வழங்கியது போன்றே தங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நற்செயல் புரிபவர்களுக்குக் நிச்சயமாக கூலி வழங்குகின்றோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟
37.122. நிச்சயமாக மூஸாவும் ஹாரூனும் தமது மார்க்கத்தின்படி செயல்பட்ட நம்பிக்கைகொண்ட நம் அடியார்களில் உள்ளவர்களாக இருந்தார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ
37.123. நிச்சயமாக இல்யாஸ் தம் இறைவனிடமிருந்து வந்த தூதர்களில் ஒருவராக இருந்தார். அல்லாஹ் அவருக்கு நபித்துவத்தை, தூதுத்துவத்தை அளித்து அருள்புரிந்தான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟
37.124. அவர் தூதுராக அனுப்பப்பட்ட தம் சமூகமான இஸ்ராயீலின் மக்களிடம் கூறினார்: “என் சமூகமே! நீங்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்ச மாட்டீர்களா?” ஏகத்துவம் அவனது கட்டளையில் உள்ளதாகும். இணைவைப்பு அவனால் தடைசெய்யப்பட்டவைகளில் உள்ளதாகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ
37.125. நீங்கள் மிகச் சிறந்த படைப்பாளனான அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு பஃல் என்னும் உங்களின் சிலையை வணங்குகிறீர்களா?
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
37.126. அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் முன்னோர்களையும் படைத்த இறைவன். அவனே வணக்கத்திற்குத் தகுதியானவன். பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகள் அல்ல.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• قوله: ﴿فَلَمَّآ أَسْلَمَا﴾ دليل على أن إبراهيم وإسماعيل عليهما السلام كانا في غاية التسليم لأمر الله تعالى.
1. “இருவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்த போது” என்ற அல்லாஹ்வின் வார்த்தை நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகிய இருவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்தார்கள் என்பதற்கு ஆதாரமாகும்.

• من مقاصد الشرع تحرير العباد من عبودية البشر.
2. அடியார்களை மனித அடிமைத்துவத்திலிருந்து விடுவிப்பது மார்க்கத்தின் இலக்குகளில் ஒன்றாகும்.

• الثناء الحسن والذكر الطيب من النعيم المعجل في الدنيا.
3. நற்புகழும், நற்பெயரும் உலகில் விரைவாகக் கிடைக்கும் இன்பங்களில் உள்ளதாகும்.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಸ್ಸಾಫ್ಫಾತ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಪ್ರಕಾಶನ - ಕುರ್‌ಆನ್ ತಫ್ಸೀರ್ ಸ್ಟಡಿ ಸೆಂಟರ್

ಮುಚ್ಚಿ