Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಅಅ್ ರಾಫ್   ಶ್ಲೋಕ:
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
7.121. சூனியக்காரர்கள் கூறினார்கள்: “அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனின் மீது நாங்கள் நம்பிக்கைகொண்டோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
7.122. அவன்தான் மூஸா மற்றும் ஹாரூனின் இறைவன். போலியான தெய்வங்கள் அல்லாமல் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ— اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِی الْمَدِیْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
7.123. அவர்கள் அல்லாஹ் ஒருவனின் மீது நம்பிக்கை கொண்ட பிறகு பிர்அவ்ன் அவர்களை மிரட்டியவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவை நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? மூஸா கொண்டுவந்ததன் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கை மக்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்று வேலைதான். இந்த நகர மக்களை வெளியேற்றுவதற்காக நீங்களும் மூஸாவும் போட்ட இரகசிய திட்டமே இது. சூனியக்காரர்களே! உங்களுக்குக் கிடைக்கும் தண்டனையை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟
7.124. உங்களில் ஒவ்வொருவரின் வலது கையையும் அவரின் இடது காலையும், அல்லது அவரின் இடது கையையும் அவரின் வலது காலையும் வெட்டிவிடுவேன். பின்னர் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் தண்டனையாக அமையும் பொருட்டும் இந்நிலைமையில் உங்களைப் பார்ப்பவர்களுக்கு பயமுறுத்தும் விதமாகவும் உங்கள் அனைவரையும் பேரீச்சை மரத்தின் தண்டுகளில் தொங்கவிடுவேன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَالُوْۤا اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
7.125. சூனியக்காரர்கள் பிர்அவ்னின் மிரட்டலுக்குப் பதிலளித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவனின் பக்கமே நாங்கள் திரும்பக் கூடியவர்கள். உம்முடைய மிரட்டலை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَا تَنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰیٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ— رَبَّنَاۤ اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِیْنَ ۟۠
7.126. பிர்அவ்னே! அல்லாஹ்வின் சான்றுகள் மூஸாவின் மூலமாக எங்களிடம் வந்த போது நாங்கள் அவற்றின் மீது நம்பிக்கை கொண்ட எமது செயலைத்தான் நீ எங்களிடம் தவறாகக் காண்கிறாய். அது பழிக்கப்படும் குற்றமாக இருந்தால் அது நாங்கள் செய்த குற்றம்தான். பின்னர் அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடியவர்களாக பிரார்த்தனை செய்தார்கள்: இறைவா “எங்களை சத்தியத்தின் மீது உறுதிப்படுத்துவதற்காக எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக. உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக, உன் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக, உன் தூதரைப் பின்பற்றியவர்களாக எங்களை மரணிக்கச் செய்வாயாக.”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰی وَقَوْمَهٗ لِیُفْسِدُوْا فِی الْاَرْضِ وَیَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ— قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْیٖ نِسَآءَهُمْ ۚ— وَاِنَّا فَوْقَهُمْ قٰهِرُوْنَ ۟
7.127. பிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பெரியவர்களும் பிர்அவ்னை மூஸாவுக்கும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களுக்கும் எதிராகத் தூண்டியவர்களாகக் கூறினார்கள்: பிர்அவ்னே! மூஸாவையும் அவரது சமூகத்தையும் பூமியில் குழப்பம் விளைவிப்பதற்கும் உம்மையும் உம்தெய்வங்களையும் விட்டுவிடுவதற்கும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதன் பக்கம் அழைப்பதற்கும் விட்டுவிடுகிறீரா?” பிர்அவ்ன் கூறினான்: “இஸ்ராயீலின் மக்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிடுவோம். அவர்களின் பெண்களை பணிவிடை செய்வதற்காக விட்டுவைப்போம். நிச்சயமாக நாம் அடக்குமுறையினாலும் அதிகாரத்தினாலும் அவர்களை மிகைத்தவர்களாவோம்.”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اسْتَعِیْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ— اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ۫— یُوْرِثُهَا مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ— وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
7.128. மூஸா தம் சமூகத்தாருக்கு அறிவுரை வழங்கியவராகக் கூறினார்: “என் சமூகமே! உங்களை விட்டு தீங்கை அகற்றி நன்மையைக் கொண்டுவர அல்லாஹ்விடமே உதவிதேடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையில் பொறுமையாக இருங்கள். பூமி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. பிர்அவ்ன் தான் நினைத்தவாறு அதில் இயங்க அதுவொன்றும் அனுக்கோ ஏனையோருக்கோ சொந்தமானதல்ல. அல்லாஹ் மக்களிடையே தன் நாட்டப்படி மாறிமாறி வழங்குகிறான். ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு பூமியில் நல்ல முடிவு காத்திருக்கின்றது. அவர்கள் சோதனைகளாலும் கஷ்டங்களாலும் பாதிக்கப்பட்டாலும் பூமி அவர்களுக்குச் சொந்தமானதே.”
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
قَالُوْۤا اُوْذِیْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِیَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا ؕ— قَالَ عَسٰی رَبُّكُمْ اَنْ یُّهْلِكَ عَدُوَّكُمْ وَیَسْتَخْلِفَكُمْ فِی الْاَرْضِ فَیَنْظُرَ كَیْفَ تَعْمَلُوْنَ ۟۠
7.129. மூஸாவின் சமூகத்தவரான இஸ்ரவேலர்கள் அவரிடம் கூறினார்கள்: “மூசாவே! நீர் எங்களிடம் வருவதற்கு முன்பும் பின்பும் எங்களின் ஆண்மக்கள் கொல்லப்பட்டு பெண்மக்கள் உயிருடன் விடப்பட்டு பிர்அவ்னால் நாங்கள் சோதிக்கப்பட்டோம்.” மூஸா அவர்களுக்கு அறிவுரை வழங்கியவராக, விடுதலையைக் கொண்டு நற்செய்தி வழங்கியவராகக் கூறினார்: “உங்களின் இறைவன் உங்களின் எதிரியான பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் அழித்துவிடலாம். அதன்பிறகு பூமியில் உங்களுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கி, அதன் பின் நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா அல்லது நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறீர்களா என்பதைப் பார்ப்பான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِیْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
7.130. பிர்அவ்னைச் சார்ந்தவர்களை பஞ்சத்தாலும் வரட்சியாலும் தண்டித்தோம். விளைச்சல்களில் குறைவை ஏற்படுத்தி அவர்களைச் சோதித்தோம். இது, தங்களுக்குக் கிடைத்த இந்த தண்டனை தங்கள் நிராகரிப்பினால்தான் ஏற்பட்டது என்பதை உணர்ந்து அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்பதற்காகத்தான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• موقف السّحرة وإعلان إيمانهم بجرأة وصراحة يدلّ على أنّ الإنسان إذا تجرّد عن هواه، وأذعن للعقل والفكر السّليم بادر إلى الإيمان عند ظهور الأدلّة عليه.
1. சூனியக்காரர்களின் நிலைப்பாடும், தமது நம்பிக்கையை துணிவுடனும் தெளிவாகவும் அறிவித்தமையும், மனிதன் தன் மனஇச்சையிலிருந்து நீங்கி ஆரோக்கியமான பகுத்தறிவுக்கும் சிந்தனைக்கும் கட்டுப்பட்டால், ஆதாரங்கள் தௌிவாகும் போது அவன் ஈமானின் பக்கமே விரைவான் என்பதைக் காட்டுகிறது.

• أهل الإيمان بالله واليوم الآخر هم أشدّ الناس حزمًا، وأكثرهم شجاعة وصبرًا في أوقات الأزمات والمحن والحروب.
2. அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களே, நெருக்கடிகள், சோதனைகள், யுத்த காலகட்டங்களின் போது மக்களில் மிக உறுதியானவர்களாகவும் தைரியமானவர்களாவும், பொறுமையாளர்களாகவும் இருப்பார்கள்.

• المنتفعون من السّلطة يُحرِّضون ويُهيِّجون السلطان لمواجهة أهل الإيمان؛ لأن في بقاء السلطان بقاء لمصالحهم.
3. அதிகாரத்திலிருந்து பயனடைபவர்கள் அரசனை நம்பிக்கையாளர்களுக்கு எதிராகத் தூண்டுகிறார்கள். ஏனெனில் அரசன் நிலைத்திருப்பதில்தான் அவர்களின் நலன்கள் உள்ளன.

• من أسباب حبس الأمطار وغلاء الأسعار: الظلم والفساد.
4. அநியாயமும் குழப்பமும் மழையைத் தடுக்கும், விலையை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கின்றது.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಅಲ್- ಅಅ್ ರಾಫ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಪ್ರಕಾಶನ - ಕುರ್‌ಆನ್ ತಫ್ಸೀರ್ ಸ್ಟಡಿ ಸೆಂಟರ್

ಮುಚ್ಚಿ