ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
72 : 11

قَالَتْ یٰوَیْلَتٰۤی ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِیْ شَیْخًا ؕ— اِنَّ هٰذَا لَشَیْءٌ عَجِیْبٌ ۟

“என் துக்கமே! நானுமோ கிழவியாகவும், என் கணவராகிய இவரோ வயோதிகராகவும் இருக்க நான் பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!” என்று கூறினாள். info
التفاسير:

external-link copy
73 : 11

قَالُوْۤا اَتَعْجَبِیْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَیْكُمْ اَهْلَ الْبَیْتِ ؕ— اِنَّهٗ حَمِیْدٌ مَّجِیْدٌ ۟

“(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
74 : 11

فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ

இப்ராஹீமை விட்டு திடுக்கம் சென்று, அவருக்கு நற்செய்தி வந்தபோது, லூத்துடைய மக்கள் விஷயத்தில் நம்மிடம் தர்க்கித்தார். info
التفاسير:

external-link copy
75 : 11

اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ ۟

நிச்சயமாக இப்ராஹீம் சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர், (நம் பக்கமே) திரும்பக்கூடியவர் ஆவார். info
التفاسير:

external-link copy
76 : 11

یٰۤاِبْرٰهِیْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ— اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ— وَاِنَّهُمْ اٰتِیْهِمْ عَذَابٌ غَیْرُ مَرْدُوْدٍ ۟

இப்ராஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டு புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. நிச்சயமாக அவர்கள், தடுக்கப்பட முடியாத வேதனை அவர்களுக்கு வரும். info
التفاسير:

external-link copy
77 : 11

وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا یَوْمٌ عَصِیْبٌ ۟

நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் சிரமத்திற்குள்ளானார். அவர்களால் மனம் சுருங்கினார் “இது மிகக் கடுமையான நாள்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
78 : 11

وَجَآءَهٗ قَوْمُهٗ یُهْرَعُوْنَ اِلَیْهِ ؕ— وَمِنْ قَبْلُ كَانُوْا یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ؕ— قَالَ یٰقَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِیْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِیْ ضَیْفِیْ ؕ— اَلَیْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِیْدٌ ۟

அவருடைய மக்கள் அவர் பக்கம் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீயவற்றை செய்பவர்களாகவே இருந்தனர். “என் மக்களே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். அவர்கள் உங்களுக்கு மிக்க சுத்தமானவர்கள். (அவர்களை மணம்புரிந்து சுகமனுபவியுங்கள்). ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். என் விருந்தினர் விஷயத்தில் என்னை அவமானப்படுத்தாதீர்கள். நல்லறிவுள்ள ஓர் ஆடவர் உங்களில் இல்லையா?” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
79 : 11

قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِیْ بَنَاتِكَ مِنْ حَقٍّ ۚ— وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِیْدُ ۟

“உம் பெண் பிள்ளைகளிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை நீர் அறிந்து கொண்டீர்; நாங்கள் நாடுவதையும் நிச்சயமாக நீர் உறுதிபட அறிவீர்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
80 : 11

قَالَ لَوْ اَنَّ لِیْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِیْۤ اِلٰی رُكْنٍ شَدِیْدٍ ۟

“எனக்கு உங்களிடம் (சண்டையிட) பலம் இருக்க வேண்டுமே! அல்லது வலிமையான ஓர் ஆதரவாளரின் பக்கம் நான் ஒதுங்கவேண்டுமே!” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
81 : 11

قَالُوْا یٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ یَّصِلُوْۤا اِلَیْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ ؕ— اِنَّهٗ مُصِیْبُهَا مَاۤ اَصَابَهُمْ ؕ— اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ؕ— اَلَیْسَ الصُّبْحُ بِقَرِیْبٍ ۟

“லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் தூதர்கள். (இவர்கள்) அறவே உம் பக்கம் (வந்து) சேரமாட்டார்கள். ஆகவே, இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தைக் கொண்டு செல்வீராக; உம் மனைவியைத் தவிர. உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற (வேதனையான)து நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக இவர்களின் வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?” என்று கூறினார்கள். info
التفاسير: