ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
160 : 7

وَقَطَّعْنٰهُمُ اثْنَتَیْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ— وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اِذِ اسْتَسْقٰىهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ— فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَیْنًا ؕ— قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ؕ— وَظَلَّلْنَا عَلَیْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

அவர்களைப் பன்னிரெண்டு சந்ததிகளாக கூட்டங்களாகப் பிரித்தோம். மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம் - அவருடைய சமுதாயம் அவரிடம் தண்ணீர் கேட்டபோது - “உமது தடியால் கல்லை அடிப்பீராக! என்று.” அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பீறிட்டன. எல்லா மக்களும் தங்கள் அருந்துமிடத்தை அறிந்து கொண்டார்கள். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்கள் மீது ‘மன்னு’ ‘ஸல்வா’வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் (உணவு) அளித்தவற்றில் நல்லவற்றை உண்ணுங்கள்.” அவர்கள் நமக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்கே அநீதியிழைப்பவர்களாக இருந்தனர். info
التفاسير:

external-link copy
161 : 7

وَاِذْ قِیْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْیَةَ وَكُلُوْا مِنْهَا حَیْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّغْفِرْ لَكُمْ خَطِیْٓـٰٔتِكُمْ ؕ— سَنَزِیْدُ الْمُحْسِنِیْنَ ۟

“நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். நீங்கள் நாடிய இடத்தில் புசியுங்கள். ‘ஹித்ததுன்’ (பாவம் நீங்கட்டும்!) என்று கூறுங்கள். சிரம் தாழ்த்தியவர்களாக (ஊர்) வாசலில் நுழையுங்கள். நாம் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நல்லறம் புரிவோருக்கு (நற்கூலியை) அதிகப்படுத்துவோம்.” info
التفاسير:

external-link copy
162 : 7

فَبَدَّلَ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَیْرَ الَّذِیْ قِیْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَظْلِمُوْنَ ۟۠

அவர்களில் அநீதியிழைத்தவர்கள் அவர்களுக்குக் கூறப்பட்டது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை இறக்கினோம். info
التفاسير:

external-link copy
163 : 7

وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْیَةِ الَّتِیْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِ ۘ— اِذْ یَعْدُوْنَ فِی السَّبْتِ اِذْ تَاْتِیْهِمْ حِیْتَانُهُمْ یَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّیَوْمَ لَا یَسْبِتُوْنَ ۙ— لَا تَاْتِیْهِمْ ۛۚ— كَذٰلِكَ ۛۚ— نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

(நபியே) கடலுக்கருகில் இருந்த ஊர் (மக்களைப்) பற்றி அவர்களிடம் விசாரிப்பீராக. சனி(க்கிழமை)யில் அவர்கள் வரம்பு மீறியபோது. அவர்களின் சனிக்கிழமையில் அவர்களுடைய மீன்கள் தலைகளை நீட்டியவையாக அவர்களிடம் வந்தபோது. அவர்கள் சனி(க் கிழமை)யில் இல்லாத (மற்ற) நாளில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் இவ்வாறு அவர்களை சோதித்தோம். info
التفاسير: