Check out the new design

وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (264) سوره‌تی: البقرة
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُبْطِلُوْا صَدَقٰتِكُمْ بِالْمَنِّ وَالْاَذٰی ۙ— كَالَّذِیْ یُنْفِقُ مَالَهٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— فَمَثَلُهٗ كَمَثَلِ صَفْوَانٍ عَلَیْهِ تُرَابٌ فَاَصَابَهٗ وَابِلٌ فَتَرَكَهٗ صَلْدًا ؕ— لَا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّمَّا كَسَبُوْا ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْكٰفِرِیْنَ ۟
2.264. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் செய்த தர்மங்களின் நன்மைகளை தர்மம் பெற்றவரிடம் சொல்லிக்காட்டியும், அவருக்கு தொல்லைகொடுத்தும் வீணாக்கிவிடாதீர்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக தன் செல்வங்களைச் செலவு செய்பவனைப்போன்றது. அவன் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளனாவான். அதற்கு உதாரணம் ஒரு வழுக்குப்பாறையில் இருக்கும் மண்ணைப்போன்றதாகும். அதன்மீது பெருமழை பெய்து பாறையில் இருந்த மண்ணை முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டது. இவ்வாறுதான் மக்களிடம் காட்டுவதற்காக செலவுசெய்பவர்களது நன்மைகளும் அடிபட்டுச்சென்றுவிடும். அல்லாஹ்விடம் எதனையும் பெறமாட்டார்கள். அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களுக்கு தான் விரும்பும் விஷயங்களின் பக்கமும் அவர்களுக்கு பயனுள்ளவற்றிற்கும் வழிகாட்ட மாட்டான்.
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• مراتب الإيمان بالله ومنازل اليقين به متفاوتة لا حد لها، وكلما ازداد العبد نظرًا في آيات الله الشرعية والكونية زاد إيمانًا ويقينًا.
1. அல்லாஹ்வின்மீது கொண்ட ஈமானின் படித்தரங்கள் ஏற்றத்தாழ்வானவை. அவற்றிற்கு எல்லையே கிடையாது. அல்லாஹ்வின் சட்டவசனங்களிலும், பிரபஞ்ச அத்தாட்சிகளிலும் அடியான் கவனம் செலுத்த, செலுத்த அவனுடைய ஈமானும் உறுதியும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

• بَعْثُ الله تعالى للخلق بعد موتهم دليل ظاهر على كمال قدرته وتمام عظمته سبحانه.
2. அல்லாஹ் படைப்புகளை அவை மரணித்த பின்னரும் உயிர்த்தெழச்செய்வது அவனுடைய பரிபூரணமான ஆற்றல் மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும்.

• فضل الإنفاق في سبيل الله وعظم ثوابه، إذا صاحبته النية الصالحة، ولم يلحقه أذى ولا مِنّة محبطة للعمل.
3. தூய எண்ணத்துடன் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் தர்மம் ஏராளமான நன்மைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கியது.அதனுடன் தொல்லையும் நன்மையைப் போக்கிவிடும் சொல்லிக்காட்டுதலும் இருக்கக்கூடாது.

• من أحسن ما يقدمه المرء للناس حُسن الخلق من قول وفعل حَسَن، وعفو عن مسيء.
4. ஒரு மனிதன் மக்களுக்கு வழங்குபவற்றில் மிகச்சிறந்தது நற்குணமிக்க சொல்லும் செயலும் தவறிழைத்தவனை மன்னிப்பதுமாகும்.

 
وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (264) سوره‌تی: البقرة
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز - پێڕستی وه‌رگێڕاوه‌كان

بڵاوكراوەتەوە لە لایەن ناوەندی تەفسیر بۆ خوێندنە قورئانیەکان.

داخستن