Check out the new design

وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان سوره‌تی: النساء   ئایه‌تی:
وَاللّٰهُ یُرِیْدُ اَنْ یَّتُوْبَ عَلَیْكُمْ ۫— وَیُرِیْدُ الَّذِیْنَ یَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِیْلُوْا مَیْلًا عَظِیْمًا ۟
4.27. அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான். உங்கள் குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட விரும்புகிறான். தங்களின் மனஇச்சைகளைப் பின்பற்றுபவர்கள், நீங்கள் நேர்த்தியான பாதையை விட்டும் மிகத்துரமாகிச் செல்வதையே விரும்புகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّخَفِّفَ عَنْكُمْ ۚ— وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِیْفًا ۟
4.28. அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டங்களில் இலகுவை ஏற்படுத்த விரும்புகிறான். உங்களால் செய்யமுடியாதவற்றை அவன் உங்கள்மீது சுமத்தவில்லை. ஏனெனில் மனிதன் தனது தோற்றத்திலும் பண்புகளிலும் பலவீனமானவன் என்பதை அவன்அறிவான்.
تەفسیرە عەرەبیەکان:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۫— وَلَا تَقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟
4.29.அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளை அபகரித்தல், திருடுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற தவறான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆயினும் நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் அளிக்கும் வியாபாரப் பொருள்களைத்தவிர. அவற்றை உண்பதும் பயன்படுத்திக் கொள்வதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மற்றவரைக் கொலை செய்யாதீர்கள். தம்மைத் தாமே கொலை செய்து உங்களை அழிவில் போட்டுக்கொள்ளாதீர். அல்லாஹ் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். உங்களின் உயிர்களையும் செல்வங்களையும் மானங்களையும் கண்ணியப்படுத்தியதும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِیْهِ نَارًا ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟
4.30. பிறரது செல்வத்தை உண்ணுதல், கொலை அல்லது அதுபோன்றவற்றின் மூலம் பிறர் மீது அத்துமீறுதல் ஆகிய நான் தடுத்தவற்றை தெரியாத்தனமாகவோ,மறதியாகவோயன்றி அறிந்துகொண்டும் வேண்டுமென்றும் யார் செய்கிறாரோ மறுமைநாளில் நான் அவனை நரகத்தில் புகுத்துவேன். அதன் வெப்பத்தையும் வேதனையையும் அவன் அனுபவிப்பான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதானது. அவன் எல்லாவற்றின்மீதும் சக்தியுடையவன்.
تەفسیرە عەرەبیەکان:
اِنْ تَجْتَنِبُوْا كَبَآىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِیْمًا ۟
4.31. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குதல், பெற்றோருக்கு மாறுசெய்தல், கொலை செய்தல், வட்டி வாங்குதல் போன்ற பெரும் பாவங்களை விட்டும் நீங்கள் தவிர்ந்து கொண்டால் நாம் உங்களின் சிறிய பாவங்களை பரிகாரம் வழங்கிஅழித்துவிடுவதன் மூலம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்க இடமான சுவனத்தில் நாம் உங்களை பிரவேசிக்கச் செய்வோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ ؕ— لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ— وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ؕ— وَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟
4.32. நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலரை சிலரை விட அல்லாஹ் மேன்மையாக்கியுள்ள விஷயங்களில் ஆசைகொள்ளாதீர்கள். அது கோபத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தும். அல்லாஹ் ஆண்களுக்கு பிரத்யேகமாக வழங்கியுள்ள சிறப்புகளில் ஆசைகொள்வது பெண்களுக்கு உகந்ததல்ல. ஒவ்வொரு சாராருக்கும் கூலியில் அவரவருக்குப் பொருத்தமான பங்குண்டு. தனது அருட்கொடையிலிருந்து அதிகரித்து வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.எனவேதான் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதை அவன் வழங்கியுள்ளான்.
تەفسیرە عەرەبیەکان:
وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِیَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ— وَالَّذِیْنَ عَقَدَتْ اَیْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِیْبَهُمْ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟۠
4.33. உங்களில் ஒவ்வொருவருக்கும் தாய்தந்தையர், உறவினர் விட்டுச்சென்ற சொத்தில் பங்குகளைப் பெறும் அனந்தரக்காரர்களை ஆக்கியுள்ளோம். யாருடன் நீங்கள் உறுதிமிக்க சத்தியங்கள் ஊடாக உதவி மற்றும் கூட்டிணைப்பு என்பவற்றுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களின் அனந்தரப் பங்கினையும் அவர்களுக்கு அளித்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களது இந்த சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் அவன் கவனித்துக்கொண்டே இருக்கிறான். கூட்டினையப்பின் காரணமாக அனந்தரச் சொத்து பெறுவது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் அது ரத்துச்செய்யப்பட்டுவிட்டது.
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• سعة رحمة الله بعباده؛ فهو سبحانه يحب التوبة منهم، والتخفيف عنهم، وأما أهل الشهوات فإنما يريدون بهم ضلالًا عن الهدى.
1. அல்லாஹ் தன் அடியார்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அவர்களின் பாவங்களை மன்னிப்பதை, அவர்களுக்கு இலகுவை ஏற்படுத்துவதை அவன் விரும்புகிறான். மனஇச்சையைப் பின்பற்றுபவர்கள் நல்லடியார்கள் நேர்வழியை விட்டும் பிறழ்ந்துவிடுவதையே விரும்புகிறார்கள்.

• حفظت الشريعة حقوق الناس؛ فحرمت الاعتداء على الأنفس والأموال والأعراض، ورتبت أعظم العقوبة على ذلك.
2. மார்க்கம் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. அவர்களின் உயிர்கள், செல்வங்கள், மானங்கள் ஆகியவற்றின் மீது வரம்புமீறுவதை தடைசெய்துள்ளது. அதற்கு கடும் தண்டனைகளையும் விதித்துள்ளது-

• الابتعاد عن كبائر الذنوب سبب لدخول الجنة ومغفرة للصغائر.
3. பெரும் பாவங்களை விட்டு விலகியிருப்பது சுவனம் செல்வதற்கும் சிறுபாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றது.

• الرضا بما قسم الله، وترك التطلع لما في يد الناس؛ يُجنِّب المرء الحسد والسخط على قدر الله تعالى.
4. அல்லாஹ் தனக்கு வழங்கியதை ஏற்றுக்கொண்டு மக்களிடம் இருக்கும் பொருள்களில் ஆசைகொள்ளாமல் இருப்பது பொறாமையையும் அல்லாஹ்வின் விதியின் மீது அதிருப்தியுறுவதையும் தடுக்கிறது.

 
وه‌رگێڕانی ماناكان سوره‌تی: النساء
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز - پێڕستی وه‌رگێڕاوه‌كان

بڵاوكراوەتەوە لە لایەن ناوەندی تەفسیر بۆ خوێندنە قورئانیەکان.

داخستن