وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (140) سوره‌تی: سورەتی النساء
وَقَدْ نَزَّلَ عَلَیْكُمْ فِی الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰیٰتِ اللّٰهِ یُكْفَرُ بِهَا وَیُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖۤ ۖؗ— اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ؕ— اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَالْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَا ۟ۙ
4.140. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்குப் பின்வரும் விஷயத்தை இறக்கியுள்ளான்: நீங்கள் ஒரு அவையில் இருக்கும்போது அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் செவியுற்றால் அந்த அவையைவிட்டு வெளியேறிவிடுங்கள். அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும்வரை அங்கு அமர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அதனைச் செவியுற்ற பிறகும் நீங்கள் அங்கு அமர்ந்திருந்தால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் நீங்களும் அவர்களைப் போன்றவர்கள்தாம். ஏனெனில் அவர்கள் தமது நிராகரிப்பின் மூலம் மாறுசெய்ததைப்போன்று அவர்களுடன் சேர்ந்து அமர்ந்ததின் மூலம் நீங்கள் மாற்றம்செய்துவிடுகிறீர்கள். இஸ்லாத்தை வெளிப்படுத்தி நயவஞ்சகத்தை மறைத்திருக்கும் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பாளர்களையும் மறுமைநாளில் நரக நெருப்பில் ஒன்றுசேர்த்திடுவான்.
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• وجوب العدل في القضاء بين الناس وعند أداء الشهادة، حتى لو كان الحق على النفس أو على أحد من القرابة.
1. மக்களிடையே தீர்ப்பளிக்கும்போதும் சாட்சி சொல்லும்போதும் நீதியுடன் செயல்பட வேண்டும். அது தனக்கு எதிராகவோ தன் நெருங்கிய உறவினருக்கு எதிராகவோ இருந்தாலும் சரியே.

• على المؤمن أن يجتهد في فعل ما يزيد إيمانه من أعمال القلوب والجوارح، ويثبته في قلبه.
2. நம்பிக்கையாளன் தன் ஈமானை அதிகப்படுத்தி உள்ளத்தில் அதனை உறுதிப்படுத்தும் உள, உடல் ரீதியான செயல்களில் ஈடுபடுவதற்கு முழுமுயற்சி செய்ய வேண்டும்.

• عظم خطر المنافقين على الإسلام وأهله؛ ولهذا فقد توعدهم الله بأشد العقوبة في الآخرة.
3. நயவஞ்சகர்கள் மூலமாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பாரிய ஆபத்துண்டு. எனவேதான் அவர்களுக்கு மறுமையில் கடுமையான வேதனை உண்டு என எச்சரிக்கப்பட்டுள்ளது.

• إذا لم يستطع المؤمن الإنكار على من يتطاول على آيات الله وشرعه، فلا يجوز له الجلوس معه على هذه الحال.
4. அல்லாஹ்வின் வசனங்களுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எதிராக பேசப்படுவோருக்கு மறுப்புத்தெரிவிக்கச் சக்தியற்ற ஒரு நம்பிக்கையாளன், அதேநிலையில் அவர்களுடன் அமர்ந்திருக்கக்கூடாது.

 
وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (140) سوره‌تی: سورەتی النساء
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - پێڕستی وه‌رگێڕاوه‌كان

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

داخستن