وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (15) سوره‌تی: سورەتی محمد
مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— فِیْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَیْرِ اٰسِنٍ ۚ— وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ یَتَغَیَّرْ طَعْمُهٗ ۚ— وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۚ۬— وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّی ؕ— وَلَهُمْ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ؕ— كَمَنْ هُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوْا مَآءً حَمِیْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ ۟
47.15. -தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி- தன்னை அஞ்சக்கூடியவர்களை அல்லாஹ் நுழைவிப்பதாக வாக்களித்துள்ள சுவனத்தின் வர்ணனை இதுதான்: “நீண்ட நாட்கள் சென்றாலும் மாறாத மணமும் சுவையும் உடைய நீரினைக் கொண்ட ஆறுகள் இருக்கும். மாறாத சுவையுடைய பாலாறுகளும் அருந்துபவர்களுக்குச் சுவையான மது ஆறுகளும் கலப்படமற்ற தூய்மையான தேனாறுகளும் இருக்கும். அங்கு அவர்களுக்கு தாங்கள் விரும்பும் அனைத்துவகையான கனிகளும் கிடைக்கும். இத்தனைக்கும் மேல் அல்லாஹ் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் போக்கி விடுவான். அவற்றிற்காக அவன் அவர்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். இவ்வாறு கூலியைப் பெறுபவர், வெளியேற முடியாதபடி நிரந்தரமாக நரகத்தில் தங்கி, கடும் சூடான நீர் புகட்டப்பட்டு, அதன் கடுமையான சூட்டினால் வயிற்றிலுள்ள குடல்கள் துண்டுதுண்டாக்கப்படுபவருக்குச் சமமாவாரா?
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• اقتصار همّ الكافر على التمتع في الدنيا بالمتع الزائلة.
1. அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதே நிராகரிப்பாளனின் குறுகிய நோக்கமாகும்.

• المقابلة بين جزاء المؤمنين وجزاء الكافرين تبيّن الفرق الشاسع بينهما؛ ليختار العاقل أن يكون مؤمنًا، ويختار الأحمق أن يكون كافرًا.
2. நம்பிக்கையாளர்களும் நிராகரிப்பாளர்களும் பெறும் கூலியை ஒப்பிடுவது இரண்டுக்கும் மத்தியில் உள்ள பாரிய இடைவெளியைத் தெளிவுபடுத்துகிறது. அறிவாளி தான் நம்பிக்கையாளனாக இருப்பதையும் மூடன் நிராகரிப்பாளனாக இருப்பதையும் தெரிவுசெய்வதற்காகவே இது தெளிவுபடுத்தபட்டுள்ளது.

• بيان سوء أدب المنافقين مع رسول الله صلى الله عليه وسلم.
3. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஒழுக்கயீனமாக நடந்துகொள்வதைத் தெளிவுபடுத்தல்.

• العلم قبل القول والعمل.
4. பேசுவதற்கும் செயல்படுவதற்கும் முன்னர் கற்றுக்கொள்ள வேண்டும்.

 
وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (15) سوره‌تی: سورەتی محمد
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - پێڕستی وه‌رگێڕاوه‌كان

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

داخستن