وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (90) سوره‌تی: سورەتی التوبة
وَجَآءَ الْمُعَذِّرُوْنَ مِنَ الْاَعْرَابِ لِیُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ الَّذِیْنَ كَذَبُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— سَیُصِیْبُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
9.90. மதீனாவிலும் அதைச் சுற்றிலும் இருக்கின்ற நாட்டுப்புற அரபிகள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதற்காக சாக்குப்போக்குகள் கூறி அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதிகோர வந்தார்கள். மற்றொரு கூட்டத்தினரோ அல்லாஹ் அளித்த வாக்குறுதியின் மீது நம்பிக்கையின்மையினாலும் தூதரை உண்மைப்படுத்தாததனாலும் சாக்குப்போக்குகள்கூட கூறாமல் பின்தங்கிவிட்டார்கள். இவர்களின் இந்த நிராகரிப்பினால் வேதனைமிக்க தண்டனை இவர்களை அடையும்.
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• المجاهدون سيحصِّلون الخيرات في الدنيا، وإن فاتهم هذا فلهم الفوز بالجنة والنجاة من العذاب في الآخرة.
1. முஜாஹிதுகள் இவ்வுலகிலேயே நன்மைகளைப் பெறுவார்கள். இவ்வுலகில் அவர்களுக்கு அது தவறினாலும் மறுமையில் அவர்களுக்கு சுவன வெற்றியும் மறுமையின் தண்டனையிலிருந்து பாதுகாப்பும் உண்டு.

• الأصل أن المحسن إلى الناس تكرمًا منه لا يؤاخَذ إن وقع منه تقصير.
2. மேலதிகமாக மக்களுக்கு நன்மை செய்பவர்களிடம் ஏற்படும் குறை தண்டனைக்குரியதல்ல என்பதே அடிப்படையாகும்.

• أن من نوى الخير، واقترن بنيته الجازمة سَعْيٌ فيما يقدر عليه، ثم لم يقدر- فإنه يُنَزَّل مَنْزِلة الفاعل له.
3. ஒருவர் நன்மையை உறுதியாக செய்ய நாடி அதற்காக தன்னாலான முயற்சியும் செய்தும் அவரால் அந்த செயலைச் செய்ய முடியவில்லையெனில் அவர் அந்த செயலைச் செய்தவரைப் போன்றே கணக்கிடப்படுவார்.

• الإسلام دين عدل ومنطق؛ لذلك أوجب العقوبة والمأثم على المنافقين المستأذنين وهم أغنياء ذوو قدرة على الجهاد بالمال والنفس.
4. இஸ்லாம் நீதியான தர்க்க ரீதியான மார்க்கமாகும். எனவேதான் செல்வங்களாலும் உயிர்களாலும் போரிடுவதற்கு வசதியும் வலிமையும் இருந்தும் பின்தங்குவதற்கு அனுமதி கேட்கும் நயவஞ்சகர்களுக்கு தண்டனையையும் பாவத்தையும் அது விதியாக்கியுள்ளது.

 
وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (90) سوره‌تی: سورەتی التوبة
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - پێڕستی وه‌رگێڕاوه‌كان

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

داخستن