Check out the new design

Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. * - Vertimų turinys


Reikšmių vertimas Sūra: Al-Isra’   Aja (Korano eilutė):
وَاِنْ كَادُوْا لَیَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِیُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا یَلْبَثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِیْلًا ۟
17.76. நிராகரிப்பாளர்கள் உம்மை மக்காவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக தங்களின் பகைமையால் உம்மைத் துன்புறுத்த முயன்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் நீர் புலம்பெயரும் வரை உம்மை அவர்கள் வெளியேற்றாமல் அவர்களை அவன் தடுத்தான். அவர்கள் உம்மை வெளியேற்றியிருந்தால் உமக்குப் பின்னர் சிறிது காலமே அன்றி வாழ்ந்திருக்க மாட்டார்கள்.
Tafsyrai arabų kalba:
سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِیْلًا ۟۠
17.77. உமக்குப் பின்னர் அவர்கள் சிறிது காலமே தங்கியிருப்பார்கள் என்ற தீர்ப்பு உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள் விஷயத்திலும் நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அது, ஒரு சமூகம் தம் தூதரை வெளியேற்றினால் அவர்களிடையே அல்லாஹ் வேதனையை இறக்குவான் என்பதாகும். -தூதரே!- நம்முடைய வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். மாறாக அதனை நிலையானதாகக் காண்பீர்.
Tafsyrai arabų kalba:
اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰی غَسَقِ الَّیْلِ وَقُرْاٰنَ الْفَجْرِ ؕ— اِنَّ قُرْاٰنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا ۟
17.78. சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்ததிலிருந்து ளுஹ்ர், அஸ்ர் இரவின் இருள் வரை இதில் மஃரிப், இஷா தொழுகையை பரிபூரணமான முறையில் அதற்குரிய நேரங்களில் நிலைநாட்டுவீராக. ஃபஜ்ர் என்னும் அதிகாலைத் தொழுகையையும் நிறைவேற்றுவீராக. அதில் (குர்ஆன்) ஓதுவதை அதிகப்படுத்துவீராக. ஃபஜ்ர் தொழுகையில் இரவின் வானவர்களும் பகலின் வானவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
Tafsyrai arabų kalba:
وَمِنَ الَّیْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ۖۗ— عَسٰۤی اَنْ یَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا ۟
17.79. -தூதரே!- மறுமை நாளின் மக்களுக்கு ஏற்படும் அமளிதுமளிகளிலிருந்து விடுதலைக்காக அவர்களுக்கு பரிந்துரை செய்பவராக உம்மை உமது இறைவன் எழுப்புவதை எதிர்ப்பார்த்தவராக இரவின் ஒரு பகுதியில் எழுந்து தொழுவீராக. அதனால் உமது அந்தஸ்துகள் அதிகம் உயரும். முன்னோர்களும் பின்னோர்களும் புகழக்கூடிய மகத்தான பரிந்துரை செய்யும் பெரும் பாக்கியம் உமக்குக் கிடைக்கும்.
Tafsyrai arabų kalba:
وَقُلْ رَّبِّ اَدْخِلْنِیْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِیْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّیْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِیْرًا ۟
17.80. -தூதரே!- நீர் கூறுவீராக: இறைவா “நான் நுழையுமிடம், வெளியேறுமிடம் அனைத்தையும் உனக்கு வழிபடுவதிலும், உன் திருப்பொருத்தத்திலும் ஆக்கிவிடுவாயாக. என் எதிரிக்கு எதிராக எனக்கு உதவி செய்யும் தெளிவான ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு வழங்குவாயாக.
Tafsyrai arabų kalba:
وَقُلْ جَآءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ؕ— اِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا ۟
17.81. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “இஸ்லாம் வந்துவிட்டது. தான் உதவுவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேறி விட்டது. நிராகரிப்பும் இணைவைப்பும் அழிந்து விட்டன. நிச்சயம் அசத்தியம் சத்தியத்திற்கு முன்னால் நிற்க முடியாமல் அழிந்துவிடக் கூடியதே.”
Tafsyrai arabų kalba:
وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۙ— وَلَا یَزِیْدُ الظّٰلِمِیْنَ اِلَّا خَسَارًا ۟
17.82. அறியாமை, நிராகரிப்பு, சந்தேகம் ஆகியவற்றிலிருந்து உள்ளங்களுக்கு நிவாரணியை நாம் குர்ஆனில் இறக்குகின்றோம். அதனைக் கொண்டு ஒதிப்பார்த்தால் உடல் ரீதியான நோய்களுக்கும் அதில் நிவாரணி உண்டு. அது நம்பிக்கைகொண்டு, அதன்படி செயல்படும் நம்பிக்கையாளர்களுக்கு அதில் அருளும் உண்டு. இந்தக் குர்ஆன் நிராகரிப்பாளர்களுக்கு அழிவைத்தான் அதிகப்படுத்தும். ஏனெனில் நிச்சயமாக அதனைச் செவியுறுவதே அவர்களுக்குக் கோபமூட்டுகிறது. அது அவர்கள் பொய்பிப்பதையும் புறக்கணிப்பதையும் அதிகப்படுத்துகிறது.
Tafsyrai arabų kalba:
وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ— وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ یَـُٔوْسًا ۟
17.83. நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடை வழங்கினால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தாமல், அவனுக்குக் கட்டுப்படாமல் புறக்கணிக்கிறான். கர்வத்தினால் தூரவிலகிச் செல்கிறான். அவனுக்கு நோயோ, வறுமையோ அல்லது வேறு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அவன் அல்லாஹ்வின் அருளை விட்டும் ஒரேயடியாக நம்பிக்கையிழந்து விடுகிறான்.
Tafsyrai arabų kalba:
قُلْ كُلٌّ یَّعْمَلُ عَلٰی شَاكِلَتِهٖ ؕ— فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰی سَبِیْلًا ۟۠
17.84. -தூதரே!- நீர் கூறுவீராக: “ஒவ்வொருவரும் நேர்வழி மற்றும் வழிகேட்டில் தம் நிலையை ஒத்த வழிமுறைப்படியே செயல்படுகிறார்கள். சத்தியத்தின்பால் நேரான வழியை அடைந்தவர்கள் யார் என்பதை உங்கள் இறைவன் நன்கறிவான்.
Tafsyrai arabų kalba:
وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِ ؕ— قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّیْ وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِیْلًا ۟
17.85. -தூதரே!- வேதக்காரர்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் ஆன்மாவின் உண்மை நிலையைக்குறித்து உம்மிடம் வினவுகிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: “ஆன்மாவின் உண்மை நிலை குறித்து அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அல்லாஹ்வின் அறிவுடன் ஒப்பிடுகையில் உங்களுக்கும் படைப்புகள் அனைத்திற்கும் சிறிதளவேதான் அறிவு வழங்கப்பட்டுள்ளது.
Tafsyrai arabų kalba:
وَلَىِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهٖ عَلَیْنَا وَكِیْلًا ۟ۙ
17.86. -தூதரே!- நாம் உமக்கு இறக்கிய வஹியை உள்ளங்களிலிருந்தும் ஏடுகளிலிருந்தும் அழித்து நாம் நீக்க விரும்பினால் அதனை நீக்கிவிடுவோம். பின்னர் உமக்கு உதவிசெய்யக்கூடிய, அதனைத் திரும்பப் பெற்றுத் தரும் யாரையும் நீர் பெற்றுக்கொள்ளமாட்டீர்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• في الآيات دليل على شدة افتقار العبد إلى تثبيت الله إياه، وأنه ينبغي له ألا يزال مُتَمَلِّقًا لربه أن يثبته على الإيمان.
1. அடியான் தன்னை அல்லாஹ் உறுதிப்படுத்திவைப்பதன் பக்கம் அதிகத் தேவையுள்ளவன் என்பதோடு, நிச்சயமாக தன்னை நம்பிக்கையில் உறுதிப்படுத்துமாறு அல்லாஹ்விடம் மன்றாடிக்கொண்டே இருப்பது அவசியமாகும் என்பதற்கு மேற்கூறிய வசனங்களில் ஆதாரம் உண்டு.

• عند ظهور الحق يَضْمَحِل الباطل، ولا يعلو الباطل إلا في الأزمنة والأمكنة التي يكسل فيها أهل الحق.
2. சத்தியம் வெளிப்பட்டுவிட்டால் அசத்தியம் அழிந்துவிடும். சத்தியவாதிகள் சோர்வாக உள்ள காலங்கள், இடங்களில்தான் அசத்தியத்தின் ஆதிக்கம் இருக்கும்.

• الشفاء الذي تضمنه القرآن عام لشفاء القلوب من الشُّبَه، والجهالة، والآراء الفاسدة، والانحراف السيئ والمقاصد السيئة.
3. குர்ஆன் உள்ளடக்கியுள்ள நிவாரணம் உள்ளத்தில் தோன்றக்கூடிய சந்தேகம், அறியாமை, தீய கொள்கைகள், தீய சிந்தனைகள், தீய நோக்கங்கள் போன்ற அனைத்து நோய்களுக்கும் பொதுவானது.

• في الآيات دليل على أن المسؤول إذا سئل عن أمر ليس في مصلحة السائل فالأولى أن يعرض عن جوابه، ويدله على ما يحتاج إليه، ويرشده إلى ما ينفعه.
4. கேள்வி கேட்பவர் தனக்குப் பலனளிக்காத ஒரு விடயத்தைப் பற்றிக்கேட்டால் கேள்வி கேட்கப்பட்டவர் அதற்குப் பதிலளிக்காமல் புறக்கணித்து அவருக்கு அவசியமான பயனுள்ள விடயத்தின் பக்கம் வழிகாட்ட வேண்டும் என்பதற்கு மேற்கூறிய வசனங்களில் ஆதாரம் உண்டு.

 
Reikšmių vertimas Sūra: Al-Isra’
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. - Vertimų turinys

Išleido Korano studijų interpretavimo centras.

Uždaryti