Check out the new design

Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. * - Vertimų turinys


Reikšmių vertimas Sūra: Al-Bakara   Aja (Korano eilutė):
وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِیَارِكُمْ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ۟
2.84. நீங்கள் ஒருவரையெருவர் கொல்லக்கூடாது; உங்களில் சிலர் சிலரை தங்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். இது குறித்து நாம் உங்களிடம் வாங்கிய வாக்குறுதிக்கு நீங்களே சாட்சிகளாக இருந்து ஒத்துக் கொண்டீர்கள்.
Tafsyrai arabų kalba:
ثُمَّ اَنْتُمْ هٰۤؤُلَآءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِیْقًا مِّنْكُمْ مِّنْ دِیَارِهِمْ ؗ— تَظٰهَرُوْنَ عَلَیْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ ؕ— وَاِنْ یَّاْتُوْكُمْ اُسٰرٰی تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَیْكُمْ اِخْرَاجُهُمْ ؕ— اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍ ۚ— فَمَا جَزَآءُ مَنْ یَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْیٌ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ یُرَدُّوْنَ اِلٰۤی اَشَدِّ الْعَذَابِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
2.85. பிறகு நீங்களே இந்த வாக்குறுதிக்கு மாறாக நடந்தீர்கள். உங்களில் சிலர் சிலரைக் கொலைசெய்தீர்கள். எதிரிகளின் உதவியுடன் உங்களிலுள்ள ஒரு பிரிவினரை அநியாயமாக அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்கள் உங்கள் எதிரிகளிடம் கைதிகளாகப் பிடிப்பட்டால் பிணைத்தொகை கொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை ஊர்களிலிருந்து வெளியேற்றுவதே உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததே? கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தவ்ராத்தில் கூறப்பட்ட ஒருபகுதியை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கொலைசெய்யக்கூடாது, ஊரிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று தவ்ராத்தில் உள்ள மறுபகுதியை மறுக்கிறீர்களா? வேதத்தின் சில விஷயங்களை ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவருக்கு இவ்வுலகில் இழிவையும் கேவலத்தையும் தவிர வேறொன்றும் கிடைக்காது. மறுமையில் அவர்கள் கடுமையான வேதனையின் பக்கம் தள்ளப்படுவார்கள். நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. மாறாக அவன் அவற்றை நன்கறிவான். அவற்றிற்கேற்ப உங்களுக்கு கூலியும் வழங்குவான்.
Tafsyrai arabų kalba:
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؗ— فَلَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟۠
2.86. இவர்கள்தாம் மறுமைக்குப் பகரமாக இவ்வுலகை வாங்கிக் கொண்டார்கள்; நிலையானதை விட்டுவிட்டு அழியக்கூடியதை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். மறுமையில் இவர்களுக்கு அளிக்கப்படும் வேதனை குறைக்கப்படாது. அந்நாளில் இவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யாரும் இருக்க மாட்டார்கள்.
Tafsyrai arabų kalba:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَقَفَّیْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ ؗ— وَاٰتَیْنَا عِیْسَی ابْنَ مَرْیَمَ الْبَیِّنٰتِ وَاَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ ؕ— اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰۤی اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ— فَفَرِیْقًا كَذَّبْتُمْ ؗ— وَفَرِیْقًا تَقْتُلُوْنَ ۟
2.87. நாம் மூஸாவுக்கு தவ்ராத்தை வழங்கினோம். அவருக்குப் பின்னால் பல தூதர்களை தொடர்ந்து வரச்செய்தோம். ஈசாவுக்கு, அவருடைய நம்பகத்தன்மையைத் தெளிவுபடுத்தக்கூடிய தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார்; பிறவிக்குருடர்களையும், தொழுநோயாளிகளையும் குணப்படுத்தினார். ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக அவரை பலப்படுத்தினோம். இஸ்ராயீலின் மக்களே! உங்கள் மனம் விரும்பாததை தூதர்கள் கொண்டுவந்த போதெல்லாம் சத்தியத்தையும் அல்லாஹ்வின் தூதர்களையும் எதிர்த்து ஆணவம் கொள்கிறீர்களா? அவர்களில் ஒருபிரிவினரை நிராகரித்து விட்டீர்கள்; ஒரு பிரிவினரை கொன்று விட்டீர்கள்?!
Tafsyrai arabų kalba:
وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ ؕ— بَلْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِیْلًا مَّا یُؤْمِنُوْنَ ۟
2.88. எங்களுடைய உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால் நீர் கூறும் எந்த விஷயமும் புரியப்போவதில்லை என்ற யூதர்களின் கூற்றே அவர்கள் முஹம்மதைப் பின்பற்றாமல் இருப்பதற்கான சான்றாகக் காணப்பட்டது. ஆனால் உண்மை நிலை அவர்கள் கூறும் காரணமல்ல. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனால் அவன் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். எனவே அவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சிலவற்றைத் தவிர வேறு எதனையும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• من أعظم الكفر: الإيمان ببعض ما أنزل الله والكفر ببعضه؛ لأن فاعل ذلك قد جعل إلهه هواه.
1. அல்லாஹ் இறக்கிய சிலவற்றை ஏற்றுக்கொண்டு சிலவற்றை நிராகரிப்பது கடுமையான நிராகரிப்பாகும். ஏனெனில் இவ்வாறு செய்யக்கூடியவன் தன் மனஇச்சையை தான் வணங்கும் இறைவனாக ஆக்குகிறான்.

• عِظَم ما بلغه اليهود من العناد، واتباع الهوى، والتلاعب بما أنزل الله تعالى.
2. பிடிவாதம், மனஇச்சையைப் பின்பற்றுதல், அல்லாஹ் இறக்கியவற்றில் கையடித்தல் போன்றவற்றில் யூதர்கள் துறைபோனவர்கள்.

• فضل الله تعالى ورحمته بخلقه، حيث تابع عليهم إرسال الرسل وإنزال الكتب لهدايتهم للرشاد.
3. தன் அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ் அருளாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருப்பதால், நேர்வழிக்கு அவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு தொடர்ந்து தூதர்களை அனுப்பி, வேதங்களையும் இறக்கினான்.

• أن الله يعاقب المعرضين عن الهدى المعاندين لأوامره بالطبع على قلوبهم وطردهم من رحمته؛ فلا يهتدون إلى الحق، ولا يعملون به.
4. நேர்வழியைப் புறக்கணித்து அல்லாஹ்வுடைய கட்டளைகளை நிராகரிப்பவர்களைத் தண்டிப்பதற்காக அவர்களது உள்ளத்தில் அவன் முத்திரையிட்டு விடுகிறான்; அவர்களை தன் அருளை விட்டுத் தூரமாக்கிவிடுகிறான். எனவே அவர்களால் சத்தியத்தை அடையவும் முடியாது; அதன்படி செயல்படவும் முடியாது.

 
Reikšmių vertimas Sūra: Al-Bakara
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. - Vertimų turinys

Išleido Korano studijų interpretavimo centras.

Uždaryti