Check out the new design

Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. * - Vertimų turinys


Reikšmių vertimas Aja (Korano eilutė): (232) Sūra: Al-Bakara
وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ یَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَیْنَهُمْ بِالْمَعْرُوْفِ ؕ— ذٰلِكَ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— ذٰلِكُمْ اَزْكٰی لَكُمْ وَاَطْهَرُ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
2.232. கணவர்கள் மனைவியரை மூன்றுமுறைக்கு குறைவாக விவாகரத்து அளித்து, மனைவியர் தங்களின் தவணையை நிறைவுசெய்துவிட்டால் - பொறுப்பாளர்களே! அவர்கள் மீண்டும் தம் கணவர்களோடு புதிதாக மணமுடித்துக் கொள்வதை விரும்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள். உங்களில் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவர்களைத் தடுப்பது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. இதுதான் உங்களிடையே நன்மைகளை அதிகமாக வளர்த்தெடுக்கும். உங்களின் மானத்தையும் செயல்களையும் அழுக்குகளிலிருந்து பாதுகாத்து தூய்மைப்படுத்தும். விஷயங்களின் உண்மை நிலையையும் பின்விளைவுகளையும் அல்லாஹ் நன்கறிவான். அவற்றை நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• نهي الرجال عن ظلم النساء سواء كان بِعَضْلِ مَوْلِيَّتِه عن الزواج، أو إجبارها على ما لا تريد.
1. தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்யவிடாது தடுப்பதன் மூலமோ அவள் விரும்பாததின் மீது அவளை வற்புறுத்துவதன் மூலமோ பெண்களுக்கு ஆண்கள் அநீதி இழைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

• حَفِظَ الشرع للأم حق الرضاع، وإن كانت مطلقة من زوجها، وعليه أن ينفق عليها ما دامت ترضع ولده.
2. பாலூட்டும் உரிமையை மார்க்கம் தாய்க்கு அளிக்கிறது, அவள் விவாகரத்து அளிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரியே. அவள் பாலூட்டும்வரை அவளுடைய செலவீனங்களைப் பொறுப்பெடுத்துக் கொள்வது குழந்தையின் தந்தை மீதுள்ள கடமையாகும்.

• نهى الله تعالى الزوجين عن اتخاذ الأولاد وسيلة يقصد بها أحدهما الإضرار بالآخر.
3. அல்லாஹ் கணவன் மனைவி இருவரையும் பிள்ளைகளைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பதை விட்டும் தடுத்துள்ளான்.

• الحث على أن تكون كل الشؤون المتعلقة بالحياة الزوجية مبنية على التشاور والتراضي بين الزوجين.
4. திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் ஆலோசனை மற்றும் பரஸ்பரம் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

 
Reikšmių vertimas Aja (Korano eilutė): (232) Sūra: Al-Bakara
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. - Vertimų turinys

Išleido Korano studijų interpretavimo centras.

Uždaryti