Check out the new design

Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. * - Vertimų turinys


Reikšmių vertimas Aja (Korano eilutė): (31) Sūra: Al-An’am
قَدْ خَسِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ ؕ— حَتّٰۤی اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا یٰحَسْرَتَنَا عَلٰی مَا فَرَّطْنَا فِیْهَا ۙ— وَهُمْ یَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰی ظُهُوْرِهِمْ ؕ— اَلَا سَآءَ مَا یَزِرُوْنَ ۟
6.31. மறுமை நாளில் மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்து, அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை சாத்தியமற்றது எனக் கருதியவர்கள் இழப்படைந்துவிட்டார்கள். முன்னறிவித்தலின்றி திடீரென்று மறுமைநாள் அவர்களிடம் வந்துவிடும் போது பெரும் கைசேதப்பட்டுக் கூறுவார்கள், “எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, மறுமை நாளுக்காக எந்த முன்னேற்பாடும் செய்யாது அல்லாஹ்வின் விடயத்தில் பொடுபோக்காக இருந்துவிட்டோமே!.” அவர்கள் தங்களின் பாவங்களை முதுகுகளில் சுமப்பார்கள். அவர்கள் சுமக்கும் பாவங்கள் எவ்வளவு மோசமானது! என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• من عدل الله تعالى أنه يجمع العابد والمعبود والتابع والمتبوع في عَرَصات القيامة ليشهد بعضهم على بعض.
1. வணங்கியவன், வணங்கப்பட்டவன், பின்பற்றியவன், பின்பற்றப்பட்டவன் என அனைவரையும் அல்லாஹ் மறுமை நாளில் - அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பொருட்டு - ஒன்றுதிரட்டுவான். இது அல்லாஹ் வழங்கும் நீதியாகும்.

• ليس كل من يسمع القرآن ينتفع به، فربما يوجد حائل مثل ختم القلب أو الصَّمَم عن الانتفاع أو غير ذلك.
2. குர்ஆனைச் செவியுறும் அனைவரும் பயனடைவார்கள் என்பதில்லை. உள்ளங்களிலும் செவிகளிலும் அடைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் குர்ஆனிலிருந்து பயனயோ அல்லது வேறு எதாவது ஒன்றையோ அடைய முடியாது.

• بيان أن المشركين وإن كانوا يكذبون في الظاهر فهم يستيقنون في دواخلهم بصدق النبي عليه الصلاة والسلام.
3. இணைவைப்பாளர்கள் வெளிப்படையாக நபியவர்களை பொய்யர் என்று கூறினாலும் அவர் உண்மையாளர் என்பதை உள்ளத்தில் உறுதியாக அறிந்திருந்தார்கள்.

• تسلية النبي عليه الصلاة والسلام ومواساته بإعلامه أن هذا التكذيب لم يقع له وحده، بل هي طريقة المشركين في معاملة الرسل السابقين.
4. இணைவைப்பாளர்கள் உம்மை மட்டும் புறக்கணிக்கவில்லை. மாறாக முந்தைய தூதர்களுடனும் இணைவைப்பாளர்கள் இவ்வாறே நடந்துகொண்டார்கள். என்று அறிவித்து நபியவர்களுக்கு ஆறுதல் கூறப்பட்டுள்ளது.

 
Reikšmių vertimas Aja (Korano eilutė): (31) Sūra: Al-An’am
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. - Vertimų turinys

Išleido Korano studijų interpretavimo centras.

Uždaryti