Check out the new design

Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. * - Vertimų turinys


Reikšmių vertimas Sūra: At-Taubah   Aja (Korano eilutė):
قَاتِلُوْهُمْ یُعَذِّبْهُمُ اللّٰهُ بِاَیْدِیْكُمْ وَیُخْزِهِمْ وَیَنْصُرْكُمْ عَلَیْهِمْ وَیَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِیْنَ ۟ۙ
9.14. -நம்பிக்கையாளர்களே!- இந்த இணைவைப்பாளர்களுடன் போரிடுங்கள். நீங்கள் அவர்களுடன் போரிட்டால் உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். நீங்கள் அவர்களைக் கொல்வதன் மூலம் அது நிகழும். அவர்களைத் தோல்வியுறச் செய்து கைதிகளாக்கி இழிவுபடுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு வெற்றியை அளிப்பான். இதன் மூலம் யுத்தத்தில் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையாளர்களை வெற்றிபெற வைத்து, எதிரிகளுக்கு தோல்வியை கொடுத்து, அவர்களை சிறைபிடித்து போரில் கலந்து கொள்ளாத நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் உள்ள நோயை குணப்படுத்துவான்.
Tafsyrai arabų kalba:
وَیُذْهِبْ غَیْظَ قُلُوْبِهِمْ ؕ— وَیَتُوْبُ اللّٰهُ عَلٰی مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
9.15. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களுக்கு வெற்றியை அளித்து அவர்களின் உள்ளங்களிலுள்ள கோபத்தை நீக்குவான். இந்த பிடிவாதக்காரர்கள் மக்கா வெற்றியின் போது சில மக்காவாசிகள் செய்தது போல் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் தான் நாடியவர்களை அவன் மன்னிப்பான். உண்மையாகவே மன்னிப்புக் கோரக்கூடியவர்களை அவன் நன்கறிவான். தன் படைப்பில், தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவனாக இருக்கின்றான்.
Tafsyrai arabų kalba:
اَمْ حَسِبْتُمْ اَنْ تُتْرَكُوْا وَلَمَّا یَعْلَمِ اللّٰهُ الَّذِیْنَ جٰهَدُوْا مِنْكُمْ وَلَمْ یَتَّخِذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ وَلَا رَسُوْلِهٖ وَلَا الْمُؤْمِنِیْنَ وَلِیْجَةً ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
9.16. -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களை சோதிக்காமல் விட்டுவிடுவான் என்று எண்ணிக் கொண்டீர்களா? சோதிப்பது அவனுடைய நியதியாகும். உங்களில் உளத் தூய்மையுடன் ஜிஹாது செய்யக்கூடியவர்களையும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கையாளர்களையும் விடுத்து நிராகரிப்பாளர்களை நெருக்கமானவர்களாகவும் உற்ற நண்பர்களாகவும் ஆக்கிக்கொள்ளாதவர்களையும் அவன் வெளிப்படையாக அறியும் வரை நிச்சயம் உங்களை சோதிப்பான். நீங்கள் செய்யக் கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
Tafsyrai arabų kalba:
مَا كَانَ لِلْمُشْرِكِیْنَ اَنْ یَّعْمُرُوْا مَسٰجِدَ اللّٰهِ شٰهِدِیْنَ عَلٰۤی اَنْفُسِهِمْ بِالْكُفْرِ ؕ— اُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ ۖۚ— وَفِی النَّارِ هُمْ خٰلِدُوْنَ ۟
9.17. நிராகரிப்பை வெளிரங்கமாகச் செய்வதன் மூலம் தாம் நிராகரிப்பாளர்களே என ஏற்றுக்கொண்டுள்ள இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் ஆலயங்களை பல்வேறுபட்ட வணக்க வழிபாடுகளைக் கொண்டு பராமரிக்க முடியாது. செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையான ஈமான் இன்மையினால் அவர்களின் செயல்கள் அனைத்தும் வீணாகி விட்டன. மறுமை நாளில், அவர்களில் மரணிக்கும் முன்னரே பாவமன்னிப்புக் கோரியவர்களைத் தவிர மற்றவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அங்கு நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள்.
Tafsyrai arabų kalba:
اِنَّمَا یَعْمُرُ مَسٰجِدَ اللّٰهِ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَی الزَّكٰوةَ وَلَمْ یَخْشَ اِلَّا اللّٰهَ ۫— فَعَسٰۤی اُولٰٓىِٕكَ اَنْ یَّكُوْنُوْا مِنَ الْمُهْتَدِیْنَ ۟
9.18. அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் ஆக்காமல் அவன் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து தங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கி அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்கள்தாம் அவனுடைய ஆலயங்களைப் பராமரிக்கத் தகுதியானவர்கள். ஏனெனில் இவர்கள்தாம் நேரான வழியில் இருக்கக்கூடியவர்கள். இணைவைப்பாளர்களோ நேர்வழியை விட்டும் வெகுதூரமானவர்கள்.
Tafsyrai arabų kalba:
اَجَعَلْتُمْ سِقَایَةَ الْحَآجِّ وَعِمَارَةَ الْمَسْجِدِ الْحَرَامِ كَمَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَجٰهَدَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— لَا یَسْتَوٗنَ عِنْدَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۘ
9.19. -இணைவைப்பாளர்களே!- ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டி, மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பவர்களை, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவன் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு தம் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்து நிராகரிப்பாளர்களின் வார்த்தையை தாழ்த்துவதற்காக ஜிஹாது செய்யக்கூடியவர்களுக்கு சமமாக்கி விட்டீர்களா? அல்லாஹ்விடம் சிறப்பைப் பெறுவதில் அவர்களனைவரையும் சமமாக்கிவிட்டீர்களா? அவர்கள் அல்லாஹ்விடத்தில் ஒருபோதும் சமமாக மாட்டார்கள். ஷிர்க்கின் மூலம் அநீதியிழைக்கும் அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான். அவர்கள் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவது போன்ற நற்செயல்களைச் செய்தாலும் சரியே.
Tafsyrai arabų kalba:
اَلَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ۙ— اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ ؕ— وَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
9.20. நம்பிக்கை கொண்டு நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயர்ந்து, செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது போன்றவற்றை ஒருசேர செய்பவர்கள் மற்றவர்களைவிட அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சுவனத்தைப் பெறுபவர்கள்.
Tafsyrai arabų kalba:
Šiame puslapyje pateiktų ajų nauda:
• في الآيات دلالة على محبة الله لعباده المؤمنين واعتنائه بأحوالهم، حتى إنه جعل من جملة المقاصد الشرعية شفاء ما في صدورهم وذهاب غيظهم.
1. அல்லாஹ் நம்பிக்கை கொண்ட தன் அடியார்கள் மீது கொண்ட அன்புக்கும், அவர்களின் நிலமைகளில் காட்டும் கரிசனத்துக்கும் இவ்வசனங்கள் ஆதாரமாகும். அதனால்தான் அவர்களின் உள்ளங்களில் உள்ள ஆத்திரம் ஆறுவதையும் கோபம் நீங்குவதையும் அவன் ஷரீஅத்தின் நோக்கங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளான்.

• شرع الله الجهاد ليحصل به هذا المقصود الأعظم، وهو أن يتميز الصادقون الذين لا يتحيزون إلا لدين الله من الكاذبين الذين يزعمون الإيمان.
2. அல்லாஹ்வின் மார்க்கத்தையே சார்ந்திருக்கும் உண்மையாளர்களையும் பொய்யாக நம்பிக்கைகொண்டதாக வாதிடுவோரையும் வேறுபடுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவே அல்லாஹ் ஜிஹாதைக் கடமையாக்கியுள்ளான்.

• عُمَّار المساجد الحقيقيون هم من وُصِفوا بالإيمان الصادق، وبالقيام بالأعمال الصالحة التي أُمُّها الصلاة والزكاة، وبخشية الله التي هي أصل كل خير.
3. உண்மையாகவே நம்பிக்கை, தொழுகை, ஸகாத் போன்ற பிரதான நற்செயல்கள் புரிதல், அனைத்து நலவுகளின் அடிப்படையான இறை அச்சம் ஆகியவற்றைப் பண்பாகப் பெற்றவர்களே உண்மையில் இறையில்லங்களைப் பராமரிப்போராவர்.

• الجهاد والإيمان بالله أفضل من سقاية الحاج وعمارة المسجد الحرام بدرجات كثيرة؛ لأن الإيمان أصل الدين، وأما الجهاد في سبيل الله فهو ذروة سنام الدين.
4. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுதலும், ஜிஹாதும் ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுதல், மற்றும் மஸ்ஜிதுல் ஹராமைப் பராமரிப்பதை விடவும் பல மடங்கு சிறந்ததாகும். ஏனெனில் ஈமான் மார்க்கத்தின் அடிப்படையாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வது மார்க்கத்தின் உச்சியாகும்.

 
Reikšmių vertimas Sūra: At-Taubah
Sūrų turinys Puslapio numeris
 
Kilniojo Korano reikšmių vertimas - Kilniojo Korano sutrumpinto aiškinimo vertimas į tamilų k. - Vertimų turinys

Išleido Korano studijų interpretavimo centras.

Uždaryti