Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ബഖറഃ   ആയത്ത്:
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓىِٕكَةِ اِنِّیْ جَاعِلٌ فِی الْاَرْضِ خَلِیْفَةً ؕ— قَالُوْۤا اَتَجْعَلُ فِیْهَا مَنْ یُّفْسِدُ فِیْهَا وَیَسْفِكُ الدِّمَآءَ ۚ— وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ؕ— قَالَ اِنِّیْۤ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ ۟
2.30. வானவர்களிடம் பின்வருமாறு உரையாடியதை அல்லாஹ் அறிவிக்கிறான்: நான் பூமியில் மனிதர்களை ஏற்படுத்தப் போகின்றேன். அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து பூமியை வாளப்படுத்துவதற்கு அவர்கள் தங்களுக்குள் தொன்றுதொட்டு உருவாகும் தலைமுறைகளாக இருப்பார்கள்.வானவர்கள் தங்கள் இறைவனிடம், பூமியில் ஆதமுடைய மக்களை வழித்தோன்றல்களாக ஆக்குவதின் காரணம் என்ன? அவர்கள் பூமியில் குழப்பம் விளைவித்து அநியாயமாக இரத்தம் சிந்துவார்களே? என்று அறியாதவர்களாக, தெளிவடைய வேண்டி கேட்ட அவர்கள், நாங்கள் உனக்குக் கீழ்ப்படிகின்றோம்; உனது தூய்மையைப் பறைசாற்றி உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம். இதில் நாங்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம்; உனது கண்ணியத்தையும், பரிபூரணத்தையும் ஏற்றுக் கொள்கின்றோம் என்றும் கூறினார்கள். அதற்கு அல்லாஹ், அவர்களைப் படைப்பதன், வழித்தோன்றல்களாக ஆக்குவதன் நோக்கங்கள் குறித்து நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று கூறினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَعَلَّمَ اٰدَمَ الْاَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَی الْمَلٰٓىِٕكَةِ فَقَالَ اَنْۢبِـُٔوْنِیْ بِاَسْمَآءِ هٰۤؤُلَآءِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
2.31. ஆதமின் அந்தஸ்தை தெளிவுபடுத்துவதற்காக அவருக்கு உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்தின் பெயா்களையும், வார்த்தைகளையும், விளக்கங்களையும் அல்லாஹ் கற்றுக்கொடுத்தான். பின்னர் வானவர்களிடம் அப்பெயர்குறிக்கப்பட்ட பொருட்களை முன்வைத்து, இந்த படைப்பைவிட நீங்கள்தாம் கண்ணியமானவா்கள் என்ற உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمْتَنَا ؕ— اِنَّكَ اَنْتَ الْعَلِیْمُ الْحَكِیْمُ ۟
2.32. அவர்கள் தங்களின் தவறை ஒத்துக்கொண்டவர்களாகவும் அருளுக்குரியவன் அல்லாஹ் என்பதை ஏற்றவர்களாகவும், எங்கள் இறைவா, உன்னுடைய கட்டளைகளில் ஆட்சேபனை எழுப்புவதை விட்டுவிட்டு உன் தூய்மையை நாங்கள் பறைசாற்றுகின்றோம். நீ எங்களுக்குக் கற்றுத்தந்ததைத்தவிர நாங்கள் எதையும் அறியமாட்டோம். நிச்சயமாக நீ நன்கறிந்தவன். எதுவுமே உன்னை விட்டு மறைவாக இல்லை. நீ ஏற்படுத்தும் விதிகளிலும் கட்டளைகளிலும் ஞானம்மிக்கவன் என்று கூறினார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالَ یٰۤاٰدَمُ اَنْۢبِئْهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۚ— فَلَمَّاۤ اَنْۢبَاَهُمْ بِاَسْمَآىِٕهِمْ ۙ— قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْ اِنِّیْۤ اَعْلَمُ غَیْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۙ— وَاَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟
2.33. அப்போது அல்லாஹ் ஆதமிடம், இப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக என்று கூறினான். தம் இறைவன் கற்றுத் தந்தவாறு அவர் அறிவித்தபோது, அல்லாஹ் வானவர்களிடம் கூறினான்,நான் உங்களிடம் கூறவில்லையா? வானங்களிலும் பூமியிலும் மறைவாக உள்ளவற்றை நான் நன்கறிவேன், நீங்கள் வெளிப்படுத்துபவற்றையும் உள்ளத்தில் மறைப்பவற்றையும் நான் நன்கறிவேன் என்று.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— اَبٰی وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
2.34. ஆதமுக்கும் கண்ணியமளிக்கும் விதமாக சிரம்பணியுங்கள் என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டதை தெளிவுபடுத்துகின்றான். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை விரைந்து நிறைவேற்றினார்கள். ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸைத் தவிர. கர்வத்தினால் ஆதமுக்கு சிரம்பணிய வேண்டுமென்ற அல்லாஹ்வின் கட்டளையை ஆட்சேபித்து அவன் சிரம்பணிய மறுத்தான். அதனால் அவன் அல்லாஹ்வை நிராகரித்தவர்களில் ஒருவனாகிவிட்டான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَقُلْنَا یٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَیْثُ شِئْتُمَا ۪— وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِیْنَ ۟
2.35. நாம் கூறினோம்: ஆதமே, நீரும் உம் மனைவி ஹவ்வாவும் சொர்க்கத்தில் வசியுங்கள். அங்கிருந்து நீங்கள் விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள். ஆனால் நான் தடுத்த இந்த மரத்தை மட்டும் நெருங்காதீர்கள். என்னுடைய கட்டளையை மீறி நெருங்கினால் அநியாயக்காரர்களாகி விடுவீர்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاَزَلَّهُمَا الشَّیْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِیْهِ ۪— وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ— وَلَكُمْ فِی الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیْنٍ ۟
2.36. ஷைத்தான் அவ்விருவருக்கும் தொடர்ந்து ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, தடைசெய்யப்பட்ட அந்த விஷயத்தை அலங்கரித்துக் காட்டினான். எந்த அளவுக்கெனில், அல்லாஹ் அவர்களுக்குத் தடைசெய்த மரத்திலிருந்து உண்டு பாவத்தில் வீழ்ந்துவிட்டார்கள். அதற்குத் தண்டனையாக அவ்விருவரும் இருந்த சொர்க்கத்திலிருந்து அல்லாஹ் அவர்களை வெளியேற்றினான். அப்போது அவர்களிடமும் ஷைத்தானிடமும் பின்வருமாறு கூறினான்: பூமியில் இறங்கிவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருப்பீர்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து மறுமை நிகழ முன் பூமியில் உங்களுக்குத் தங்குமிடமும் வாழ்க்கையும் உண்டு. அதிலுள்ள வளங்களை அனுபவித்துக்கொள்ளவும் முடியும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَتَلَقّٰۤی اٰدَمُ مِنْ رَّبِّهٖ كَلِمٰتٍ فَتَابَ عَلَیْهِ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟
2.37. உள்ளுதிப்பின் மூலம் அல்லாஹ் ஆதமுக்குக் கற்றுத்தந்த பிரார்த்தனையைக் கொண்டு ஆதம் அவனிடம் பிரார்த்தனை செய்தார். அதுதான் பின்வரும் பிரார்த்தனையாகும். எங்கள் இறைவா, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, எங்கள்மீது கருணை காட்டவில்லையெனில் நாங்கள் இழப்படைந்தவர்களாகி விடுவோம். (7:23) அல்லாஹ் அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்தான். அல்லாஹ், தன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவனாக, அவர்களின் விஷயத்தில் கருணைமிக்கவனாக இருக்கின்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الواجب على المؤمن إذا خفيت عليه حكمة الله في بعض خلقه وأَمْرِهِ أن يسلِّم لله في خلقه وأَمْرِهِ.
1. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர் அவனுடைய படைப்புகளில், கட்டளைகளில் சிலவற்றின் நோக்கத்தை அறியாமல் இருந்தாலும் அவற்றில் அவனுக்கு முழுமையாகக் கட்டுப்படுவது கட்டாயமாகும்.

• رَفَعَ القرآن الكريم منزلة العلم، وجعله سببًا للتفضيل بين الخلق.
2. குர்ஆன் கல்வியின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. அதனை படைப்பினங்களுக்கு இடையிலுள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணியாக ஆக்கியுள்ளது.

• الكِبْرُ هو رأس المعاصي، وأساس كل بلاء ينزل بالخلق، وهو أول معصية عُصِيَ الله بها.
3. கர்வம் பாவங்களில் தலையாயதாகும். படைப்புகளுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு கர்வமே அடிப்படையாக இருக்கின்றது. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செய்யப்பட்ட முதல் பாவம் இதுதான்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ബഖറഃ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക