Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ദ്ദുഖാൻ   ആയത്ത്:
وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَی اللّٰهِ ؕ— اِنِّیْۤ اٰتِیْكُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۚ
44.19. அல்லாஹ்வை வணங்காமலும், அவனுடைய அடியார்கள் மீது உங்களை உயர்த்திக்கொண்டும் அவனிடம் கர்வம் காட்டாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவந்துள்ளேன்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِنِّیْ عُذْتُ بِرَبِّیْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۟ۚ
44.20. நீங்கள் என்னைக் கல்லெறிந்து கொல்வதை விட்டும் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِیْ فَاعْتَزِلُوْنِ ۟
44.21. நீங்கள் நான் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தவில்லையெனில் என்னைவிட்டு விலகிவிடுங்கள். தீங்கு செய்யும் நோக்குடன் என்னை நெருங்காதீர்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ ۟
44.22. மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்: “இந்த மக்கள் -ஃபிர்அவ்னும் அவன் சமூகத்து தலைவர்களும்- குற்றம் செய்யும் மக்களாக, விரைவாகத் தண்டிக்கப்படத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاَسْرِ بِعِبَادِیْ لَیْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟ۙ
44.23. அவரது சமூகத்தினரை இரவோடு இரவாக அழைத்துச் செல்லும்படி அல்லாஹ் மூஸாவுக்குக் கட்டளையிட்டான். ஃபிர்அவ்னும் அவனது சமூகத்தினரும் நிச்சயமாக அவர்களைப் பின்தொடர்வார்கள் என்பதையும் அவன் அறிவித்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ؕ— اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ ۟
44.24. அவரும் இஸ்ராயீலின் மக்களும் கடலைக் கடக்கும்போது அது எவ்வாறு அசையாமல் இருந்ததோ அப்படியே விட்டுவிடுமாறும் அவன் கட்டளையிட்டான். நிச்சயமாக ஃபிர்அவ்னும் அவனுடைய படையினரும் கடலில் மூழ்கி அழிவோரே.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
44.25. ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் தங்களுக்குப் பின்னால் எத்தனையோ தோட்டங்களையும் ஓடக்கூடிய நீருற்றுகளையும் விட்டுச் சென்றார்கள்!
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
44.26. எத்தனையோ வயல்களையும் அழகிய அவைகளையும் அவர்களுக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள்!
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَّنَعْمَةٍ كَانُوْا فِیْهَا فٰكِهِیْنَ ۟ۙ
44.27. அவர்கள் அனுபவித்த எத்தனையோ சுக இன்பங்களையும் அவர்கள் தங்களுக்குப் பின்னால் விட்டுச் சென்றார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
كَذٰلِكَ ۫— وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟
44.28. இவ்வாறு நாம் உங்களுக்கு வர்ணித்தவாறே அவர்களுக்கு நிகழ்ந்தது. அவர்களின் தோட்டங்களையும் நீருற்றுகளையும் வயல்களையும் இடங்களையும் வேறொரு சமூகத்தினரான இஸ்ராயீலின் மக்களுக்கு சொந்தமாக்கினோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَمَا بَكَتْ عَلَیْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِیْنَ ۟۠
44.29. பிர்அவ்னும் அவனது சமூகமும் மூழ்கியபோது அவர்களுக்காக வானமும் அழவில்லை; பூமியும் அழவில்லை. அவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்கு அவகாசமும் அளிக்கப்படவில்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَقَدْ نَجَّیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنَ الْعَذَابِ الْمُهِیْنِ ۟ۙ
44.30. நாம் இஸ்ராயீலின் மக்களை இழிவுமிக்க வேதனையிலிருந்து காப்பாற்றினோம். ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் அவர்களின் ஆண்மக்களை கொலைசெய்தும் பெண்மக்களை உயிருடன் விட்டுவைத்துக்கொண்டும் இருந்தார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
مِنْ فِرْعَوْنَ ؕ— اِنَّهٗ كَانَ عَالِیًا مِّنَ الْمُسْرِفِیْنَ ۟
44.31. ஃபிர்அவ்னின் வேதனையிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம். நிச்சயமாக அவன் அல்லாஹ் மற்றும் அவனது மார்க்கத்தின் கட்டளையை மீறும் பெருமைபிடித்தவனாக இருந்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰی عِلْمٍ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ
44.32. நாம் இஸ்ராயீலின் மக்களை நம்மிடமிருந்துள்ள அறிவின் பிரகாரம் அவர்களின் காலத்தில் வாழ்ந்த அனைவரைவிடவும் தேர்ந்தெடுத்தோம். ஏனெனில் அதிகமான தூதர்கள் அவர்களில் இருந்தனர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاٰتَیْنٰهُمْ مِّنَ الْاٰیٰتِ مَا فِیْهِ بَلٰٓؤٌا مُّبِیْنٌ ۟
44.33. மூஸாவைப் பலப்படுத்திய அத்தாட்சிகளையும் சான்றுகளையும் அவர்களுக்கு நாம் வழங்கினோம். மன்னு, ஸல்வா போன்ற அவை அவர்களுக்கு வெளிரங்கமான அருள்களாக இருந்தன.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ هٰۤؤُلَآءِ لَیَقُوْلُوْنَ ۟ۙ
44.34. நிச்சயமாக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுத்து பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் கூறுகிறார்கள்:
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنْ هِیَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُنْشَرِیْنَ ۟
44.35. “ஒரு முறை மாத்திரமே நாம் மரணிப்போம். அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. அந்த மரணத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاْتُوْا بِاٰبَآىِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
44.36. -முஹம்மதே!- நீரும் உம்மைப் பின்பற்றியவர்களும், ‘இறந்தவர்களை மீண்டும் விசாரணை, கூலி கொடுக்கப்படுவதற்காக அல்லாஹ் அவர்களை உயிரோடு எழுப்புவான்’ என்று கூறும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இறந்துவிட்ட எங்களின் முன்னோர்களை உயிருடன் கொண்டுவாருங்கள்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَهُمْ خَیْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍ ۙ— وَّالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— اَهْلَكْنٰهُمْ ؗ— اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِیْنَ ۟
44.37. -தூதரே!- உம்மை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்கள் பலத்தில் சிறந்தவர்களா? அல்லது துப்பவு சமூகமும் அவர்களுக்கு முன்வந்த ஆத் ஸமூத் போன்றவர்கள் சிறந்தவர்களா? நாம் அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றம் புரியும் மக்களாக இருந்தார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟
44.38. நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடையிலுள்ளவற்றையும் விளையாட்டிற்காகப் படைக்கவில்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
44.39. நாம் வானங்களையும் பூமியையும் ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகவே படைத்துள்ளோம். ஆயினும் இணைவைப்பாளர்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• وجوب لجوء المؤمن إلى ربه أن يحفظه من كيد عدوّه.
1. நம்பிக்கையாளன் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அல்லாஹ்விடமே அடைக்கலம் தேட வேண்டும்.

• مشروعية الدعاء على الكفار عندما لا يستجيبون للدعوة، وعندما يحاربون أهلها.
2. நிராகரிப்பாளர்கள் சத்தியத்திற்குப் பதிலளிக்காமல் சத்தியவாதிகளுக்கு எதிராக போரிட்டால் அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்வதற்கு அனுமதியுண்டு.

• الكون لا يحزن لموت الكافر لهوانه على الله.
3. நிராகரிப்பாளன் அல்லாஹ்வின் பார்வையில் அற்பமானவன் என்பதால் அவனது மரணத்தால் பிரபஞ்சம் கவலையடைவதில்லை.

• خلق السماوات والأرض لحكمة بالغة يجهلها الملحدون.
4. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் நாஸ்திகர்களுக்குப் புரியாத உன்னத நோக்கத்திற்காகவே படைத்துள்ளான்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ദ്ദുഖാൻ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർകസ് തഫ്സീർ പുറത്തിറക്കിയത്.

അടക്കുക