Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: അഹ്ഖാഫ്   ആയത്ത്:
وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِیْنَ ۟
46.6. அவை உலகில் பலனளிக்காமல் இருப்பதோடு மறுமை நாளில் ஒன்றுதிரட்டப்படும்போது தம்மை வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை எதிரிகளாகிவிடும்; அவர்களை விட்டு அவை விலகிவிடும். அவர்கள் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததே தமக்குத் தெரியாது என மறுத்துவிடும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ— هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ؕ
46.7. நாம் நம் தூதர் மீது இறக்கிய வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால், நிராகரிப்பாளர்கள், தூதரின் மூலம் தங்களிடம் வந்த குர்ஆனைப் பார்த்துக் கூறுகிறார்கள்: “இது தெளிவான சூனியமாகும். இது அல்லாஹ்விடமிருந்து வந்த வஹி அல்ல.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِیْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— هُوَ اَعْلَمُ بِمَا تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— كَفٰی بِهٖ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ— وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
46.8. இந்த இணைவைப்பாளர்கள், “நிச்சயமாக முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து அதனை அல்லாஹ்வின்பால் இணைத்துள்ளார்” என்று கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “நான் அதனை சுயமாகப் புனைந்துகொண்டால் உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து என்னைச் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. எனவே எவ்வாறு நான் அவன் மீது இட்டுக்கட்டி என்னை நான் வேதனையில் ஆழ்த்திக் கொள்வேன்? அவனுடைய குர்ஆனில் நீங்கள் செய்யும் ஆட்சேபனைகளையும் என்னை வசைபாடுவதையும் அல்லாஹ் நன்கறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சிகூற அல்லாஹ்வே போதுமானவன். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِیْ مَا یُفْعَلُ بِیْ وَلَا بِكُمْ ؕ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
46.9. -தூதரே!- உமது நபித்துவத்தை பொய்ப்பிக்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “உங்களுக்கான எனது அழைப்பை நீங்கள் அபூர்வமாகக் கருதுவதற்கு, நான் அல்லாஹ் அனுப்பிய தூதர்களில் முதலாமவன் அல்ல. எனக்கு முன்னர் பல தூதர்கள் கடந்து சென்றுள்ளார்கள். உலகில் அல்லாஹ் என்னுடன் எவ்வாறு நடந்துகொள்வான் என்றோ உங்களுடன் எவ்வாறு நடந்துகொள்வான் என்றோ எனக்குத் தெரியாது. அவன் எனக்கு வஹியாக அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் கூறுவதும் செயல்படுவதும் அவன் எனக்கு வஹி அறிவிப்பதன் அடிப்படையில்தான். நான் உங்களை அல்லாஹ்வின் வேதனையை விட்டும் தெளிவாக எச்சரிப்பவனே.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
46.10. -தூதரே!- பொய்ப்பிக்கும் இவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் எனக்குக் கூறுங்கள், இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து அதற்காக இஸ்ராயீலின் மக்களில் ஒருவர் அது சம்பந்தமாக தவ்ராத்தில் இடம்பெற்றதன் படி அது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என சாட்சி கூறி அதன்மீது நம்பிக்கைகொண்டிருந்தும் நீங்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொண்டு அதனை நிராகரித்தால் அப்போது நீங்கள் அநியாயக்காரர்கள் இல்லையா? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்ட மாட்டான்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَیْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَیْهِ ؕ— وَاِذْ لَمْ یَهْتَدُوْا بِهٖ فَسَیَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِیْمٌ ۟
46.11. குர்ஆனையும் தங்களின் தூதர் தங்களிடம் கொண்டுவந்தவற்றையும் நிராகரித்தவர்கள் நம்பிக்கைகொண்டவர்களைப் பார்த்துக் கூறினார்கள்: “முஹம்மது கொண்டுவந்துள்ளது நன்மையின்பால் வழிகாட்டும் சத்தியமாக இருந்திருந்தால் இந்த அடிமைகளும் ஏழைகளும் பலவீனர்களும் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்.” நிச்சயமாக அவர்கள் தங்களின் தூதர் தம்மிடம் கொண்டுவந்ததன் மூலம் நேர்வழியடையவில்லை என்பதனால் அவர்கள் கூறுவார்கள்: “நம்மிடம் வந்துள்ளது பழமையான பொய்தான். நாங்கள் பொய்யைப் பின்பற்ற மாட்டோம்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ— وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟
46.12. இந்த குர்ஆனுக்கு முன்னர் அல்லாஹ் மூஸாவின் மீது இறக்கிய வேதமான தவ்ராத் சத்தியத்தின்பால் வழிகாட்டக்கூடியதாகவும் நம்பிக்கைகொண்டு இஸ்ராயீலின் மக்களில் அதனைப் பின்பற்றியவர்களுக்கு அருட்கொடையாகவும் இருந்தது. முஹம்மது மீது இறக்கப்பட்ட அரபி மொழியிலான இந்த குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாகவும் இணைவைத்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களை எச்சரிக்கை செய்யக்கூடியதாகவும் படைப்பாளனுடனும் அவனுடைய படைப்புகளுடனும் நல்ல முறையில் தொடர்பு வைத்துக்கொண்டவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கின்றது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
46.13. நிச்சயமாக யார் அல்லாஹ்தான் எங்களின் இறைவன். அவனைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் இல்லை’ என்று கூறி பின்னர் நம்பிக்கைகொண்டு நற்செயல்களில் ஈடுபட்டு அதில் உறுதியாக இருக்கின்றார்களோ அவர்கள் மறுமையில் தாம் முன்னோக்கக்கூடியதை எண்ணி அச்சம்கொள்ள மாட்டார்கள். தமக்குத் தவறிய உலக பாக்கியங்களுக்காகவும் தமக்குப் பின் விட்டுச்செல்பவைக்காகவும் கவலைப்பட மாட்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
46.14. இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சுவனவாசிகளாவர். உலகில் அவர்கள் முற்படுத்தி வைத்த நற்செயல்களுக்குக் கூலியாக அதில் என்றென்றும் அவர்கள் நிலைத்திருப்பார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• كل من عُبِد من دون الله ينكر على من عبده من الكافرين.
1. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் தங்களை வணங்கிய நிராகரிப்பாளர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும்.

• عدم معرفة النبي صلى الله عليه وسلم بالغيب إلا ما أطلعه الله عليه منه.
2. அல்லாஹ் தன்னிடமிருந்து அறிவித்ததைத் தவிர நபியவர்களுக்கு மறைவான விஷயங்கள் எதுவும் தெரியாது.

• وجود ما يثبت نبوّة نبينا صلى الله عليه وسلم في الكتب السابقة.
3. முன்னைய வேதங்களில் முஹம்மது ஸல் அவர்களின் நபித்துவத்தை நிரூபிக்கும் தகவல்கள் உள்ளன.

• بيان فضل الاستقامة وجزاء أصحابها.
4. உறுதியாக இருப்பதன் சிறப்பும் உறுதியாளர்களுக்கான கூலியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: അഹ്ഖാഫ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക