Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഫത്ഹ്   ആയത്ത്:
وَهُوَ الَّذِیْ كَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ وَاَیْدِیَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَیْهِمْ ؕ— وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرًا ۟
48.24. ஹுதைபிய்யாவில் இணைவைப்பாளர்களில் எண்பதுக்கு அதிகமானவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடியவர்களாக வந்த போது அல்லாஹ்வே அவர்களின் கரங்களை உங்களைவிட்டும் தடுத்தான். உங்களின் கரங்களை அவர்களைவிட்டும் தடுத்தான். நீங்கள் அவர்களுடன் போரிடவோ, நோவினையோ அளிக்கவில்லை. மாறாக நீங்கள் அவர்களைக் கைது செய்ய சக்தி பெற்றிருந்தும் அவர்களை விட்டுவிட்டீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
هُمُ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْیَ مَعْكُوْفًا اَنْ یَّبْلُغَ مَحِلَّهٗ ؕ— وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِیْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ بِغَیْرِ عِلْمٍ ۚ— لِیُدْخِلَ اللّٰهُ فِیْ رَحْمَتِهٖ مَنْ یَّشَآءُ ۚ— لَوْ تَزَیَّلُوْا لَعَذَّبْنَا الَّذِیْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟
48.25. அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் விட்டும் உங்களைத் தடுத்து, பலிப்பிராணியை அதன் பலிபீடமான ஹரம் எல்லையை அடைய விடாமல் தடுத்தனர். உங்களுக்குத் தெரியாத அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்ட ஆண்களையும் பெண்களையும் நிராகரிப்பாளர்களுடன் சேர்த்து நீங்கள் கொன்று, உங்களை அறியாமலே உங்கள் மீது பாவமும் தண்டப்பணமும் விதியாகும் என்றில்லாவிட்டால், மக்காவை வெற்றி கொள்வதற்கு அவன் உங்களுக்கு அனுமதியளித்திருப்பான். இது மக்காவில் உள்ள நம்பிக்கையாளர்களைப் போன்ற அல்லாஹ் நாடியவர்களை தன் அருளில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். மக்காவில் நம்பிக்கையாளர்களைவிட்டும் நிராகரிப்பாளர்கள் தனித்திருந்தால் நாம் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களை வேதனைமிக்க தண்டனையால் தண்டித்திருப்போம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِذْ جَعَلَ الَّذِیْنَ كَفَرُوْا فِیْ قُلُوْبِهِمُ الْحَمِیَّةَ حَمِیَّةَ الْجَاهِلِیَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِیْنَتَهٗ عَلٰی رَسُوْلِهٖ وَعَلَی الْمُؤْمِنِیْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰی وَكَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا ؕ— وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟۠
48.26. அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நிராகரித்தவர்கள் தமது உள்ளங்களில் அறியாமைக்கால வைராக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அது சத்தியத்திற்காக இயங்கக்கூடியது அல்ல. மன இச்சையின்படி இயங்கக்கூடியது. எனவேதான் தூதர் தங்களை மிகைத்துவிட்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டியேற்படும் என்ற அச்சத்தில் ஹுதைபிய்யா உடன்படிக்கை நிகழ்ந்த வருடம் அல்லாஹ்வின் தூதரை மக்காவில் நுழைவதை வெறுத்தார்கள். அல்லாஹ் தன் தூதரின்மீதும் நம்பிக்கையாளர்களின்மீதும் நிம்மதியை இறக்கினான். கோபத்தினால் இணைவைப்பாளர்களை அவர்களின் செயலைப்போன்று எதிர்கொள்ள நம்பிக்கையாளர்கள் செல்லவில்லை. அல்லாஹ் நம்பிக்கையாளர்களை ”அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை” என்ற சத்திய வார்த்தையில் உறுதிப்படுத்தி அதற்குரிய கடமையை நிலைநாட்ட வைத்தான். அவர்கள் அதனை நிலைநாட்டினார்கள். மற்றவர்களைவிட இந்த வார்த்தைக்கு நம்பிக்கையாளர்களே அதிக உரிமையுடையவர்களாவர். அவர்களின் உள்ளங்களில் நன்மை இருக்கின்றது என்பதை அல்லாஹ் அறிந்துள்ளதனால் அவர்களே அதற்குத் தகுதியானவர்களாக இருக்கின்றார்கள். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْیَا بِالْحَقِّ ۚ— لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِیْنَ ۙ— مُحَلِّقِیْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِیْنَ ۙ— لَا تَخَافُوْنَ ؕ— فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِیْبًا ۟
48.27. அல்லாஹ் தன் தூதரின் உறக்கத்தில் கனவைக் காட்டி தனது தூதருக்கு அதில் உண்மையையே கூறினான். தூதரும் அதனைத் தன் தோழர்களுக்கு அறிவித்தார். நிச்சயமாக அவரும் அவருடைய தோழர்களும் அல்லாஹ்வின் புனித இல்லத்தில் எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் நுழைவார்கள். கிரிகைகளை பூர்த்திசெய்ததன் அடையாளமாக அவர்களில் சிலர் தலைமுடியை மழித்தவர்களாவும் சிலர் குறைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்பதே அக்கனவாகும். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களுக்குத் தெரியாத உங்கள் நலவுகளையும் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் அந்த வருடமே மக்காவில் நுழைந்து, கனவு நிறைவேறாமல் இருந்ததன் மூலம் அவசரமான ஒரு வெற்றியை அளித்தான். அதுதான் அல்லாஹ் நிகழவைத்த ஹுதைபிய்யா உடன்படிக்கையும், அதனைத் தொடர்ந்து ஹுதைபிய்யாவில் கலந்துகொண்ட நம்பிக்கையாளர்களுக்குக் கிடைத்த கைபர் வெற்றியுமாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
هُوَ الَّذِیْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰی وَدِیْنِ الْحَقِّ لِیُظْهِرَهٗ عَلَی الدِّیْنِ كُلِّهٖ ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ
48.28. அல்லாஹ்வே தன் தூதர் முஹம்மதை தெளிவான விளக்கத்துடனும் இஸ்லாம் என்னும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அதற்கு முரணான அனைத்து மார்க்கங்களையும் விட அதனை மேலோங்கச் செய்வதற்காகத்தான் அல்லாஹ்வே இதற்கு சாட்சி கூறுகிறான். சாட்சியாளனாக இருப்பதற்கு அவனே போதுமானவனாவான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الصد عن سبيل الله جريمة يستحق أصحابها العذاب الأليم.
1. அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுப்பது குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் வேதனைமிக்க தண்டனைக்கு உரியவர்களாவர்.

• تدبير الله لمصالح عباده فوق مستوى علمهم المحدود.
2. தன் அடியார்களின் நலன்களை அல்லாஹ் திட்டமிடுவது அவர்களின் வரையறுக்கப்பட்ட அறிவுத் தரத்தைவிட மேலானது.

• التحذير من استبدال رابطة الدين بحمية النسب أو الجاهلية.
3. மதத் தொடர்பை வம்சவாதம் மற்றும் அறியாமையினால் மாற்றிக்கொள்வதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

• ظهور دين الإسلام سُنَّة ووعد إلهي تحقق.
4.இஸ்லாமிய மார்க்கம் மேலோங்குவது நடைபெற்றுமுடிந்த இறைவாக்குறுதியும் வழிமுறையுமாகும்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഫത്ഹ്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക