Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ഇൻസാൻ   ആയത്ത്:

அல்இன்ஸான்

സൂറത്തിൻ്റെ ഉദ്ദേശ്യങ്ങളിൽ പെട്ടതാണ്:
تذكير الإنسان بأصل خلقه، ومصيره، وبيان ما أعد الله في الجنة لأوليائه.
மனிதனின் உருவாக்கத்தின் மூலத்தையும் அவனது இறுதி முடிவையும் அவனுக்கு ஞாபகமூட்டலும், சுவனத்தில் தனது நேசர்களுக்கு அல்லாஹ் தயார்செய்துவைத்துள்ளவற்றைத் தெளிவுபடுத்தலும்

هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟
76.1. குறிப்பிட முடியாத இல்லாமையாக இருந்த ஒரு நீண்ட காலகட்டம் மனிதனின் மீது கடந்துவிட்டது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ— نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟ۚ
76.2. நிச்சயமாக நாம் மனிதனை ஆண் மற்றும் பெண்ணின் கலப்பு விந்திலிருந்து படைத்தோம். நாம் அவன் மீது கடமையாக்கிய பொறுப்புகளைக் கொண்டு அவனைச் சோதிக்கின்றோம். அவன் மார்க்கத்தின் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டு அவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟
76.3. நிச்சயமாக நாம் தூதர்களின் மூலம் நேரான வழியைத் தெளிவுபடுத்திவிட்டோம். அதன் மூலம் தவறான வழியும் அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அவன் அதற்குப் பிறகு நேரான வழியை அடைந்து நம்பிக்கைகொண்ட, அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்தும் அடியானாக ஆகலாம். அல்லது வழிகெட்டு நிராகரித்த, அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்த அடியானாக ஆகலாம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟
76.4. நிச்சயமாக நாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு நரகில் அவர்களை இழுத்துவரப் பயன்படும் சங்கிலிகளையும் அதில் அவர்கள் கட்டப்படும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும் தயார்படுத்தி வைத்துள்ளோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ
76.5. நிச்சயமாக நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுபவர்கள் மறுமை நாளில் நல்ல வாசனையுடைய கற்பூரம் கலந்து நிரப்பப்பட்ட மதுக் கிண்ணத்திலிருந்து அருந்துவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• خطر حب الدنيا والإعراض عن الآخرة.
1. உலகின்மீது மோகம்கொண்டு மறுமையைப் புறக்கணிப்பதன் விபரீதம்.

• ثبوت الاختيار للإنسان، وهذا من تكريم الله له.
2. மனிதனுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இது அல்லாஹ் மனிதனுக்கு அளித்த கண்ணியமாகும்.

• النظر لوجه الله الكريم من أعظم النعيم.
3. அல்லாஹ்வின் திருமுகத்தைப் பார்ப்பது மிகப் பெரும் இன்பங்களில் ஒன்றாகும்.

عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟
76.6. கட்டுப்படக்கூடியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த பானம் இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியுமான, தீர்ந்துவிடாதளவு ஏராளமான நீருடைய ஊற்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் அடியார்கள் அதிலிருந்து அருந்துவார்கள். அவர்கள் விரும்புகின்ற இடத்தில் அதனை ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟
76.7. அந்த ஊற்றிலிருந்து பருகக்கூடிய அடியார்களின் பண்புகள், அவர்கள் தங்கள்மீது கடமையாக்கிக் கொண்ட நன்மையான விஷயங்களை நிறைவேற்றுவதும் தீங்கு பரவியிருக்கும் மறுமை நாளைக் குறித்து அஞ்சுவதுமாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟
76.8. அவர்களுக்கு உணவின் மீது தேவையும் விருப்பமும் உள்ள நிலையிலும் அதனை ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் வழங்குவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟
76.9. அல்லாஹ்வின் திருப்தியை நாடியே அவர்களுக்கு உணவளிப்பதாக அவர்கள் தங்கள் மனதிற்குள் நினைத்துக்கொள்வார்கள். அவர்களிடம் உணவளித்ததற்கு கூலியையோ, புகழையோ அவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟
76.10. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமிருந்து கொடூரம் மற்றும் கடுமையினால் துர்பாக்கியசாலிகளின் முகங்கள் கடுகடுத்துவிடும் அந்த நாளைக் குறித்து அஞ்சுகிறோம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ
76.11. அல்லாஹ் தன் அருளால் அந்த மாபெரும் நாளின் தீங்கினை விட்டும் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். அவர்களைக் கண்ணியப்படுத்தி, அவர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களின் முகங்களில் பொலிவையும் பிரகாசத்தையும் வழங்கினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ
76.12. -அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதிலும் பாவங்களை விட்டுத் தவிர்ந்திருப்பதிலும் அவனது விதியை ஏற்றுக்கொள்வதிலும் பொறுமையைக் கடைப்பிடித்ததனால்- அவன் அவர்களுக்கு இன்பமிக்க சுவனத்தையும் அணிவதற்கு பட்டாடைகளையும் வழங்கி கூலி கொடுப்பான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ— لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ
76.13. அங்கு அவர்கள் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் சாய்ந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்குத் நோவினையளிக்கும் கதிர்களுடைய சூரியனையோ, கடும் குளிரையோ அவர்கள் காண மாட்டார்கள். மாறாக அவர்கள் வெப்பமும் குளிர்ச்சியும் அற்ற நிரந்தரமான நிழலில் இருப்பார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟
76.14. அதன் நிழல் அவர்களுக்கு அருகிலிருக்கும். அதன் பழங்கள் பறிப்பவர்களுக்கு வசப்பட்டவையாக இருக்கும். சாய்ந்திருப்பவரும் அமர்ந்திருப்பவரும் எழுந்திருப்பவரும் அவற்றை இலகுவாகப் பறிக்க முடியும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَ ۟ۙ
76.15. வெள்ளிப் பாத்திரங்களுடனும் அவர்கள் பருக விரும்பும் போது தூய்மையான நிறமுடைய கிண்ணங்களுடனும் பணியாளர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَوَارِیْرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟
76.16. அந்தக் கிண்ணங்கள் வெள்ளியாக இருந்தபோதும் அவற்றின் நிறம் கண்ணாடியைப்போன்று தூய்மையானதாக இருக்கும். அவை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும். அதில் எவ்வித கூடுதலும் குறைவும் இருக்காது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ
76.17. இவ்வாறு கண்ணியப்படுத்தப்பட்ட இவர்களுக்கு இஞ்சி கலந்த மதுபான கிண்ணம் புகட்டப்படும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟
76.18. அவர்கள் சுவனத்தில் ‘ஸல்ஸபீல்’ என்று சொல்லப்படக்கூடிய ஊற்றிலிருந்து அருந்துவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ— اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟
76.19. சுவனத்தில் என்றும் இளமையாக இருக்கக்கூடிய சிறுவர்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் அவர்கள் முகப்பொலிவுடனும் அழகிய நிறத்துடனும் ஏராளமான எண்ணிக்கையில் பிரிந்துகிடப்பதால் சிதறிய முத்துக்கள் என்று நீர் எண்ணி விடுவீர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟
76.20. நீர் சுவனத்தில் பார்த்தால் அங்கு வர்ணிக்க முடியாத அருட்கொடைகளையும் ஈடிணையற்ற மாபெரும் அரசாட்சியையும் நீர் காண்பீர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ— وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ— وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟
76.21. அவர்கள் பகட்டான மெல்லிய பச்சை நிற பட்டாடைகளையும் கனமான பச்சை நிற பட்டாடைகளையும் தங்கள் உடலில் அணிந்திருப்பார்கள். அங்கு அவர்களுக்கு வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படும். அல்லாஹ் எவ்வித கலப்படமுமற்ற தூய்மையான பானத்தை அவர்களுக்குப் புகட்டுவான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠
76.22. அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அருட்கொடை நீங்கள் செய்த நற்செயல்களுக்கு வழங்கப்படும் கூலியாகும். உங்களின் செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ
76.23. -தூதரே!- நிச்சயமாக நாம் உம்மீது குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியுள்ளோம். நாம் அதனை உம்மீது ஒரேயடியாக இறக்கவில்லை.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ
76.24. அல்லாஹ் நிர்ணயித்த விதியையும் விதித்த சட்டதிட்டங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. பாவத்தின்பால் அழைக்கும் பாவிக்கும் நிராகரிப்பின்பால் அழைக்கும் நிராகரிப்பாளனுக்கும் கட்டுப்படாதீர்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ
76.25. பகலின் ஆரம்பத்தில் ஃபஜ்ர் தொழுகையின் மூலமும் அதன் முடிவில் லுஹர் மற்றும் அஸர் தொழுகையின் மூலம் உம் இறைவனை நினைவுகூர்வீராக.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الوفاء بالنذر وإطعام المحتاج، والإخلاص في العمل، والخوف من الله: أسباب للنجاة من النار، ولدخول الجنة.
1. நேர்ச்சைகளை நிறைவேற்றுவது, தேவையுடையோருக்கு உணவளிப்பது, உளத்தூய்மையுடன் செயல்படுவது, அல்லாஹ்வுக்கு அஞ்சுவது ஆகியவை நரகத்திலிருந்து விடுதலையளித்து சுவனத்தின் பக்கம் இட்டுச் செல்லும் காரணிகளாக இருக்கின்றன.

• إذا كان حال الغلمان الذين يخدمونهم في الجنة بهذا الجمال، فكيف بأهل الجنة أنفسهم؟!
சுவனவாதிகளுக்கு பணிபுரியும் சிறுவர்களே இவ்வளவு அழகென்றால் சுவனவாதிகளின் அழகு எப்படியிருக்கும்!

وَمِنَ الَّیْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا ۟
76.26. இரவு நேரத் தொழுகைகளான மஃரிப், இஷா தொழுகைகளின் மூலம் அவனை நினைவுகூர்வீராக. அது இரண்டிற்கும் பிறகு இரவில் எழுந்து தொழுவீராக.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَیَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا ۟
76.27. நிச்சயமாக இந்த இணைவைப்பாளர்கள் உலக வாழ்க்கையின் மீது மோகம் கொண்டு தங்களுக்குப் பின்னால் வரக்கூடிய மறுமை நாளை விட்டுவிடுகிறார்கள். துன்பங்களும் சோதனைகளும் அடங்கியுள்ளதனால் அது கனமான நாளாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ ۚ— وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا ۟
76.28. நாமே அவர்களைப் படைத்து அவர்களின் மூட்டுகளையும் உறுப்புகளையும் இன்ன பிறவற்றையும் பலப்படுத்தி அவர்களின் எடம்பைப் பலப்படுத்தினோம். நாம் அவர்களை அழித்து அவர்களுக்குப் பதிலாக அவர்களைப் போன்றவர்களை ஏற்படுத்த நாடினால் அவ்வாறு அழித்து அவர்களை மாற்றியிருப்போம்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ— فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
76.29. நிச்சயமாக இந்த அத்தியாயம் அறிவுரையும் நினைவூட்டலுமாகும். யார் தன் இறைவனின் திருப்தியின்பால் இட்டுச் செல்லும் வழியை தெரிவு செய்ய நாடுகிறாரோ அவர் அதனை எடுத்துக்கொள்வார்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
76.30. ஆயினும் உங்களில் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர வேறு யாராலும் அந்த வழியை தெரிவு செய்ய இயலாது. ஏனெனில் அனைத்து விவகாரங்களும் அவனிடமே உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு பயன்தரக்கூடியதையும் அவர்களுக்கு பயன்தராதவற்றையும் நன்கறிந்தவன். தன் படைப்பிலும் நிர்ணயத்திலும் சட்டங்களிலும் அவன் ஞானம் மிக்கவன்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ— وَالظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
76.31. அவன் தன் அடியார்களில் தான் நாடியோரை தன் அருளில் பிரவேசிக்கச் செய்து அவர்கள் நம்பிக்கைகொள்வதற்கும் நற்செயல் புரிவதற்கும் அருள்புரிகிறான். நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்தவர்களுக்காக அவன் மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அது நரக நெருப்பாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• خطر التعلق بالدنيا ونسيان الآخرة.
1. உலகத்தின்மீது மோகம்கொண்டு மறுமையை மறப்பதன் விளைவு.

• مشيئة العبد تابعة لمشيئة الله.
2. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும்.

• إهلاك الأمم المكذبة سُنَّة إلهية.
3. மறுக்கும் சமூகங்களை அழிப்பது இறைநியதியாகும்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ഇൻസാൻ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക