Check out the new design

വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ അദ്ധ്യായം: ന്നാസിആത്ത്   ആയത്ത്:

அந்நாஸிஆத்

സൂറത്തിൻ്റെ ഉദ്ദേശ്യങ്ങളിൽ പെട്ടതാണ്:
التذكير بالله واليوم الآخر.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஞாபகமூட்டல்

وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
79.1. நிராகரிப்பாளர்களின் உயிர்களை கடுமையாகப், பலவந்தமாக பற்றியிழுக்கும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
79.2. நம்பிக்கையாளர்களின் உயிர்களை இலகுவாக, மென்மையாகக் கைப்பற்றும் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கின்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
79.3. அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு வானத்திலிருந்து பூமியை நோக்கி நீந்திச் செல்லும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
79.4. அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் தம்மில் சிலரை முந்திக்கொண்டு செயற்படும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்துள்ளான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
79.5. அடியார்களின் செயல்களுக்கு பொறுப்புச்சாட்டப்பட்ட வானவர்களைப் போன்ற அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கின்றான். விசாரணை செய்யப்படுவதற்காகவும் கூலி வழங்கப்படுவதற்காகவும் அவர்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டே தீருவார்கள் என்பதற்கே இவையனைத்தின் மீதும் அவன் சத்தியம் செய்துள்ளான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ
79.6. முதல் முறை சூர் ஊதப்படும்போது பூமி குலுங்கிவிடும் நாளில்
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ
79.7. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் சூர் ஊதப்படும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ
79.8. அந்த நாளில் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் உள்ளங்கள் பயந்து கொண்டிருக்கும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ
79.9. அவர்களின் பார்வையில் இழிவின் அடையாளம் காணப்படும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ
79.10. “நாம் இறந்தபிறகு மீண்டும் வாழ்க்கையின் பக்கம் திரும்புவோமோ? என்று கேட்பவர்களாக இருக்கிறார்கள்:
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ
79.11. நாம் உக்கிய எலும்புகளாகிவிட்டாலும் அதன்பிறகு திரும்புவோமா?”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ
79.12. அவர்கள் கூறுவார்கள்: “நாம் திரும்பினால் அந்த திரும்புதல் நஷ்டம்தான். அவ்வாறு திரும்புபவன் ஏமாற்றத்திற்குள்ளானவனாவான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
79.13. மீண்டும் எழுப்பப்படுவது இலகுவானது. நிச்சயமாக சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவரிடமிருந்து வெளிப்படும் ஒரேயொரு பெரும் சப்தம்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ
79.14. உடனே பூமியின் வயிற்றில் இறந்துகிடக்கின்ற அனைவரும் அதன் மேற்பரப்பில் உயிர்பெற்றவர்களாகி விடுவார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
79.15. -தூதரே!- தனது இறைவனுடனும் தனது எதிரியான பிர்அவ்னுடனும் மூஸாவுக்கு நடந்த சம்பவம் உம்மிடம் வந்ததா?
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ
79.16. அவரது இறைவன் அவரை துவா என்ற புனிதமான பள்ளத்தாக்கில் அழைத்தபோது
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• التقوى سبب دخول الجنة.
1. இறையச்சம் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணியாக இருக்கின்றது.

• تذكر أهوال القيامة دافع للعمل الصالح.
2. மறுமையின் பயங்கரங்களைச் சிந்திப்பது நற்காரியம் புரிவதற்குத் தூண்டக்கூடியதாகும்.

• قبض روح الكافر بشدّة وعنف، وقبض روح المؤمن برفق ولين.
3. நிராகரிப்பாளனின் ஆத்மா பலவந்தமாகவும் கடுமையாகவும் நம்பிக்கையாளனின் ஆத்மா மிருதுவாகவும் கைப்பற்றப்படும்.

اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ
79.17. அவருக்கு அல்லாஹ் மேலும் கூறினான்: “ஃபிர்அவ்னிடம் செல்வீராக. நிச்சயமாக அவன் அநியாயம் செய்வதிலும் கர்வம் கொள்வதிலும் வரம்புமீறி விட்டான்.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ
79.18. அவனிடம் கேட்பீராக: “-ஃபிர்அவ்னே!- நீ நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தூய்மையடைய விரும்புகிறாயா?”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ
79.19. நான் உன்னைப் படைத்துப் பராமரிக்கும் இறைவனின்பால் உனக்கு வழிகாட்டுகிறேன். நீ அவனை அஞ்சி அவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து அவனைக் கோபத்திலாழ்த்தும் காரியங்களை விட்டும் விலகியிரு.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ
79.20. மூஸா அவனுக்கு தாம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்பதை அறிவிக்கக்கூடிய மிகப் பெரிய சான்றினைக் காட்டினார். அது கையும் கைத்தடியுமாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ
79.21. ஆனால் ஃபிர்அவ்ன் அந்த சான்றினை பொய்ப்பித்தான். மூஸா அவனுக்குக் கட்டளையிட்டதற்கு மாறாகவே நடந்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ
பின்னர் மூஸா நபி கொண்டுவந்தவற்றை விசுவாசம்கொள்ளாமல், பாவத்திலும் சத்தியத்துக்கு மாறுசெய்வதிலும் ஈடுபட்டவனாக புறக்கணித்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَحَشَرَ ۫— فَنَادٰی ۟ؗۖ
மூஸாவை வெற்றி கொள்ள தனது கூட்டத்தையும் தன்னைப் பின்பற்றுவோரையும் ஒன்றுதிரட்டினான். பின்வருமாறு கூறி அழைப்புவிடுத்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ
79.24. “நான்தான் உங்களின் உயர்வான இறைவன். எனவே என்னைத் தவிர நீங்கள் யாருக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை.”
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ
79.25. அல்லாஹ் அவனைப் பிடித்தான். உலகில் கடலில் மூழ்கடித்தும் மறுமையில் கொடிய வேதனையில் பிரவேசிக்கச் செய்தும் அவனைத் தண்டித்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠
79.26. நிச்சயமாக நாம் ஃபிர்அவ்னை இவ்வுலகிலும் மறுவுலகிலும் தண்டித்ததில் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவனுக்கு அறிவுரை இருக்கின்றது. அவர்தாம் அறிவுரைகளைக்கொண்டு பயனடைவார்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ— بَنٰىهَا ۟۫
79.27. -மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்களே!- உங்களைப் படைப்பது அல்லாஹ்வுக்குச் சிரமமானதா? அல்லது அவன் படைத்திருக்கும் வானத்தை உருவாக்குவதா?
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ
79.28. அதன் முகட்டை உயரமாக்கி எந்தக் குறைபாடும் பிளவும் இல்லாதவாறு அதனை செவ்வையாக்கினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟
79.29. அதிலுள்ள சூரியன் மறைந்தவுடன் அதன் இரவை இருளாக்கி அது உதித்தவுடன் அதன் பிரகாசத்தை வெளிப்படுத்தினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ
79.30. அவன் வானத்தைப் படைத்த பிறகு பூமியை விரித்தான். அதில் பயன்தரக்கூடியவற்றை உண்டாக்கினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟
79.31. அதிலிருந்து அதன் நீரை ஓடும் ஊற்றுகளாக வெளிப்படுத்தினான். அதில் கால்நடைகள் மேயக்கூடிய தாவரங்களை முளைக்கச் செய்தான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ
79.32. மலைகளை பூமியின்மீது உறுதியானவையாக ஆக்கினான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
79.33. -மனிதர்களே!- இவையனைத்தும் உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கும் பொருட்டேயாகும். இவையனைத்தையும் படைத்தவன் அவர்களை மீண்டும் புதிதாக படைப்பதற்கு இயலாதவன் அல்ல.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ
79.34. அனைத்தையும் தன் பயங்கரத்தால் மூடிக்கொள்ளும் இரண்டாவது முறை சூர் ஊதப்பட்டு, மறுமை நிலைபெற்று விடும் போது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ
79.35. அது ஏற்படும் நாளில் மனிதன் தான் செய்த நற்செயல்கள், தீயசெயல்கள் அனைத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பான்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟
79.36. நரகம் கொண்டுவரப்படும். அது பார்ப்பவர்களுக்காக காணும் வகையில் வெளிப்படுத்தப்படும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاَمَّا مَنْ طَغٰی ۟ۙ
79.37. யார் வழிகேட்டில் வரம்புமீறினாரோ.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ
79.38. நிலையான மறுமை வாழ்வை விட்டுவிட்டு அழியக்கூடிய உலக வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
79.39. நிச்சயமாக நரகமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ
79.40. யார் தம் இறைவனின் முன் நிற்பதை அஞ்சி அவன் தடுத்த மன இச்சையிலிருந்து தம் மனதைத் தடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக சுவர்க்கமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
79.41. யார் தம் இறைவனின் முன் நிற்பதை அஞ்சி அவன் தடுத்த மன இச்சையிலிருந்து தம் மனதைத் தடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக சுவர்க்கமே அவர் ஒதுங்குகின்ற தங்குமிடமாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ
79.42. -தூதரே!- மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை பொய்ப்பிக்கும் இவர்கள் “மறுமை எப்போது நிகழும்” என்று உம்மிடம் கேட்கிறார்கள்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ
79.43. நீர் அவர்களுக்கு அதுகுறித்து கூறுவதற்கு உமக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. அதுகுறித்து அறிவிப்பது உம்முடைய விடயமல்ல. அதற்காக தயார்படுத்திக் கொள்வதே உமது பணியாகும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ
79.44. மறுமை குறித்த முழுமையான அறிவு உம் இறைவனிடம் மட்டுமே உள்ளது.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ
79.45. நீர் மறுமையை அஞ்சக்கூடியவருக்கு எச்சரிப்பவர் மட்டுமே ஆவீர். ஏனெனில் அவர்தான் உமது எச்சரிக்கையைக்கொண்டு பயனடைவார்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠
79.46. அவர்கள் மறுமை நாளைக் காணும் நாளில் அவர்கள் தங்களின் உலக வாழ்க்கையில் ஒருநாளின் மாலைப்பொழுதோ அல்லது காலைப்பொழுதோதான் அங்கு தங்கியிருந்ததாகத் தோன்றும்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• وجوب الرفق عند خطاب المدعوّ.
1. அழைப்பு விடுக்கப்படும் மக்களுடன் மென்மையாக நடந்துகொள்வது கட்டாயமாகும்.

• الخوف من الله وكفّ النفس عن الهوى من أسباب دخول الجنة.
2. இறையச்சம், மன இச்சையைவிட்டும் மனதை காத்துக்கொள்ளுதல் சுவனத்தின்பால் இட்டுச் செல்லும் காரணிகளாக இருக்கின்றன.

• علم الساعة من الغيب الذي لا يعلمه إلا الله.
3. மறுமையைப் பற்றிய அறிவு அல்லாஹ் மாத்திரமே அறிந்த மறைவான செய்தியாகும்.

• بيان الله لتفاصيل خلق السماء والأرض.
4. வானம், பூமியைப் படைத்தது பற்றிய விரிவான அல்லாஹ்வின் விளக்கம்.

 
പരിഭാഷ അദ്ധ്യായം: ന്നാസിആത്ത്
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - ഖുർആൻ സംക്ഷിപ്ത വിശദീകരണം - പരിഭാഷ (തമിഴ്) - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

മർക്കസ് തഫ്സീർ പ്രസിദ്ധീകരിച്ചത്.

അടക്കുക