വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക


പരിഭാഷ ആയത്ത്: (31) അദ്ധ്യായം: സൂറത്തുത്തൗബഃ
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِیْحَ ابْنَ مَرْیَمَ ۚ— وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ— لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— سُبْحٰنَهٗ عَمَّا یُشْرِكُوْنَ ۟
9.31. யூதர்கள் தங்களின் அறிஞர்களையும் கிறிஸ்தவர்கள் தங்களின் சந்நியாசிகளையும் அல்லாஹ்வைத் தவிரவுள்ள கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் அல்லாஹ் தடைசெய்ததை அவர்களுக்கு அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்ததை அவர்கள் மீது தடைசெய்கிறார்கள். கிருஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈஸா மஸீஹை அல்லாஹ்வுடன் இறைவனாக்கிக் கொண்டார்கள். யூத அறிஞர்களுக்கும் கிருஸ்தவ துறவிகளுக்கும் உசைருக்கும் மர்யமின் மகன் ஈஸாவுக்கும் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குமாறு அவன் கட்டளையிட்டான். அல்லாஹ்வே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன். இணைவைப்பாளர்கள் கூறுவது போல அவனுக்கு இணைகள் இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.
അറബി ഖുർആൻ വിവരണങ്ങൾ:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• في الآيات دليل على أن تعلق القلب بأسباب الرزق جائز، ولا ينافي التوكل.
1. வாழ்வாதாரத்தின் காரணிகளோடு உள்ளம் சம்பந்தப்படுவது ஆகுமானதே, இது அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருப்பதற்கு எதிரானதுமல்ல என்பதற்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாகும்.

• في الآيات دليل على أن الرزق ليس بالاجتهاد، وإنما هو فضل من الله تعالى تولى قسمته.
2. வாழ்வாதாரம் நம்முடைய முயற்சியைக் கொண்டு கிடைப்பதல்ல. அது அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவனே அதனைப் பங்கிடுகிறான் என்பதற்கு மேலுள்ள வசனங்கள் ஆதாரமாகும்.

• الجزية واحد من خيارات ثلاثة يعرضها الإسلام على الأعداء، يقصد منها أن يكون الأمر كله للمسلمين بنزع شوكة الكافرين.
3. எதிரிகளுக்கு முன்னால் வைக்கப்படும் மூன்று விஷயங்களில் ஜிஸ்யாவும் ஒன்றாகும். இதன் நோக்கம் நிராகரிப்பாளர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு அதிகாரம் முழுவதும் முஸ்லிம்களிடமே இருக்கின்றது என்ற விஷயம் உறுதிப்படுத்தப்படுகிறது.

• في اليهود من الخبث والشر ما أوصلهم إلى أن تجرؤوا على الله، وتنقَّصوا من عظمته سبحانه.
4. யூதர்களிடமுள்ள தீயகுணம், அல்லாஹ்வின் மீதே துணிவு கொண்டு அவனது மகிமைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுமளவுக்கு அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது.

 
പരിഭാഷ ആയത്ത്: (31) അദ്ധ്യായം: സൂറത്തുത്തൗബഃ
സൂറത്തുകളുടെ സൂചിക പേജ് നമ്പർ
 
വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - വിവർത്തനങ്ങളുടെ സൂചിക

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

അടക്കുക