വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
89 : 10

قَالَ قَدْ اُجِیْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِیْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیْلَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟

“(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள்; அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்” என்று (அல்லாஹ்) கூறினான். info
التفاسير:

external-link copy
90 : 10

وَجٰوَزْنَا بِبَنِیْۤ اِسْرَآءِیْلَ الْبَحْرَ فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْیًا وَّعَدْوًا ؕ— حَتّٰۤی اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِیْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِیْلَ وَاَنَا مِنَ الْمُسْلِمِیْنَ ۟

இஸ்ராயீலின் சந்ததிகளை கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் வரம்பு மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இறுதியாக, மூழ்குதல் அவனை பிடித்தபோது, அவன் “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டவனைத் தவிர வேறு இறைவன் அறவே இல்லை என்று நம்பிக்கை கொண்டேன்; நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று கூறினான். info
التفاسير:

external-link copy
91 : 10

آٰلْـٰٔنَ وَقَدْ عَصَیْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِیْنَ ۟

இப்போது தானா (நம்பிக்கை கொள்கிறாய்? இதற்கு) முன்னரோ மாறு செய்துவிட்டாய்; இன்னும் நீ விஷமிகளில் (ஒருவனாக) இருந்தாய். info
التفاسير:

external-link copy
92 : 10

فَالْیَوْمَ نُنَجِّیْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰیَةً ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰیٰتِنَا لَغٰفِلُوْنَ ۟۠

உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன் உடலை நாம் உயர(மான இட)த்தில் வைப்போம். நிச்சயமாக மக்களில் அதிகமானவர் நம் அத்தாட்சிகளை அலட்சியம் செய்பவர்கள்தான். info
التفاسير:

external-link copy
93 : 10

وَلَقَدْ بَوَّاْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ ۚ— فَمَا اخْتَلَفُوْا حَتّٰی جَآءَهُمُ الْعِلْمُ ؕ— اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

திட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு மிக நல்ல இடத்தை அமைத்தோம்; நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு வழங்கினோம். (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் மாறுபடவில்லை. எதில் அவர்கள் மாறுபடுகின்றனரோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான். info
التفاسير:

external-link copy
94 : 10

فَاِنْ كُنْتَ فِیْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ فَسْـَٔلِ الَّذِیْنَ یَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ— لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟ۙ

(நபியே!) நாம் உமக்கு இறக்கியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்! info
التفاسير:

external-link copy
95 : 10

وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِیْنَ ۟

அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களில் அறவே நீர் ஆகிவிடாதீர்! நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர். info
التفاسير:

external-link copy
96 : 10

اِنَّ الَّذِیْنَ حَقَّتْ عَلَیْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ

நிச்சயமாக எவர்கள் மீது உம் இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
97 : 10

وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰیَةٍ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟

துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்கள் காணும் வரை, அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம் வந்தாலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்). info
التفاسير: