വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
19 : 13

اَفَمَنْ یَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰی ؕ— اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟ۙ

உம் இறைவனால் உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிகின்றவர் குருடரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் அறிவுடையவர்கள்தான். info
التفاسير:

external-link copy
20 : 13

الَّذِیْنَ یُوْفُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَلَا یَنْقُضُوْنَ الْمِیْثَاقَ ۟ۙ

(அந்த அறிவாளிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
21 : 13

وَالَّذِیْنَ یَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیَخْشَوْنَ رَبَّهُمْ وَیَخَافُوْنَ سُوْٓءَ الْحِسَابِ ۟ؕ

(அந்த அறிவாளிகள்) அல்லாஹ் சேர்க்கப்பட வேண்டும் என ஏவிய (சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள்; தங்கள் இறைவனைப் பற்றி அச்சம் கொள்வார்கள்; கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
22 : 13

وَالَّذِیْنَ صَبَرُوا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً وَّیَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّیِّئَةَ اُولٰٓىِٕكَ لَهُمْ عُقْبَی الدَّارِ ۟ۙ

(அந்த அறிவாளிகள்) தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறு(த்திரு)ப் பவர்கள்; தொழுகையை நிலைநிறுத்து பவர்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிபவர்கள்; நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பவர்கள். இ(த்தகைய)வர்கள் இவர்களுக்குத்தான் மறுமையின் (நல்ல, அழகிய) முடிவுண்டு. info
التفاسير:

external-link copy
23 : 13

جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ وَالْمَلٰٓىِٕكَةُ یَدْخُلُوْنَ عَلَیْهِمْ مِّنْ كُلِّ بَابٍ ۟ۚ

(நல்ல முடிவு என்பது) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் நுழைவார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் நுழைவார்கள். info
التفاسير:

external-link copy
24 : 13

سَلٰمٌ عَلَیْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَی الدَّارِ ۟ؕ

“நீங்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! (உங்களுக்கு அமைந்த இந்த சொர்க்கலோக) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று” (என்று கூறுவார்கள்). info
التفاسير:

external-link copy
25 : 13

وَالَّذِیْنَ یَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِیْثَاقِهٖ وَیَقْطَعُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ یُّوْصَلَ وَیُفْسِدُوْنَ فِی الْاَرْضِ ۙ— اُولٰٓىِٕكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟

அல்லாஹ்வின் வாக்குறுதியை அது உறுதியான பின்னர் முறிப்பவர்கள், சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவிய (சொந்த பந்தத்)தை துண்டிப்பவர்கள், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம்) செய்பவர்கள் ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும் இவர்களுக்கு (நரகலோகத்தில்) மிகக் கெட்ட வீடு உண்டு. info
التفاسير:

external-link copy
26 : 13

اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— وَفَرِحُوْا بِالْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَا فِی الْاٰخِرَةِ اِلَّا مَتَاعٌ ۟۠

அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்க்கை வசதியை விரிவுபடுத்துகிறான். (தான் நாடுகின்றவர்களுக்கு அதை) சுருக்குகிறான். (நிராகரிப்பவர்கள்) உலக வாழ்வைக் கொண்டு மகிழ்கின்றனர். உலக வாழ்வு மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும் போது) ஒரு (சொற்ப) சுகமே தவிர வேறில்லை. info
التفاسير:

external-link copy
27 : 13

وَیَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قُلْ اِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ اَنَابَ ۟ۖۚ

நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். தன் பக்கம் திரும்பியவர்களை நேர்வழி செலுத்துகிறான். info
التفاسير:

external-link copy
28 : 13

اَلَّذِیْنَ اٰمَنُوْا وَتَطْمَىِٕنُّ قُلُوْبُهُمْ بِذِكْرِ اللّٰهِ ؕ— اَلَا بِذِكْرِ اللّٰهِ تَطْمَىِٕنُّ الْقُلُوْبُ ۟ؕ

(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அல்லாஹ்வின் நினைவைக் கொண்டே உள்ளங்கள் நிம்மதியடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير: