വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
6 : 14

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠

மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உங்கள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான வேதனையால் உங்களுக்கு சிரமம் தந்தார்கள், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள், (கொலை செய்தார்கள்) உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை இருந்தது.” info
التفاسير:

external-link copy
7 : 14

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِیْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِیْ لَشَدِیْدٌ ۟

நீங்கள் நன்றி செலுத்தினால் (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் வேதனை கடுமையானதுதான் என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக! info
التفاسير:

external-link copy
8 : 14

وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ— فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟

மூஸா கூறினார்: “நீங்களும் பூமியிலுள்ள அனைவரும் நிராகரித்தாலும் (அவனுக்கு ஒரு குறையும் இல்லை,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன் (தேவையற்றவன்), மகா புகழாளன்” என்று கூறினார். info
التفاسير:

external-link copy
9 : 14

اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬— وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ— لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ— جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟

உங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர்களுடைய சரித்திரம் உமக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர எவரும் அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். மேலும் (தூதர்களை நோக்கி,) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
10 : 14

قَالَتْ رُسُلُهُمْ اَفِی اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَدْعُوْكُمْ لِیَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرَكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ؕ— تُرِیْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟

“வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் விஷயத்திலா சந்தேகம்? அவன் உங்களுக்கு உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்கும் ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை உங்களை (வாழ) விட்டு வைப்பதற்கும் அவன் உங்களை அழைக்கிறான்” என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். நீங்கள் எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்(?). ஆகவே, தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள் என்று (அம்மக்கள்) கூறினர். info
التفاسير: