വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
20 : 26

قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیْنَ ۟ؕ

அவர் (-மூஸா) கூறினார்: அதை நான் செய்தேன், அப்போது, நானோ அறியாதவர்களில் இருந்தேன். info
التفاسير:

external-link copy
21 : 26

فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِیْ رَبِّیْ حُكْمًا وَّجَعَلَنِیْ مِنَ الْمُرْسَلِیْنَ ۟

உங்களை நான் பயந்தபோது உங்களைவிட்டு ஓடிவிட்டேன். ஆகவே, அவன் எனக்கு தூதுவத்தை (நபித்துவத்தை) வழங்கினான். இன்னும், என்னை தூதர்களில் ஒருவராக ஆக்கினான். info
التفاسير:

external-link copy
22 : 26

وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَیَّ اَنْ عَبَّدْتَّ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ

அது (-என்னை நீ வளர்த்தது) நீ என் மீது சொல்லிக் காட்டுகின்ற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய். info
التفاسير:

external-link copy
23 : 26

قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِیْنَ ۟

ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?” info
التفاسير:

external-link copy
24 : 26

قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ— اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟

மூஸா கூறினார்: வானங்கள் இன்னும் பூமி இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் (அகிலங்களின் இறைவன்) நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால் (நீங்கள் பார்க்கும் அனைத்து படைப்புகளுக்கும் அவன்தான் இறைவன் என்பதையும் உறுதி கொள்ளுங்கள்). info
التفاسير:

external-link copy
25 : 26

قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ ۟

அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: நீங்கள் (இவர் கூறுவதை) செவிமடுக்கிறீர்களா? info
التفاسير:

external-link copy
26 : 26

قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟

அவர் கூறினார்: (அவன்தான்) உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான். info
التفاسير:

external-link copy
27 : 26

قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِیْۤ اُرْسِلَ اِلَیْكُمْ لَمَجْنُوْنٌ ۟

அவன் கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.” info
التفاسير:

external-link copy
28 : 26

قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَیْنَهُمَا ؕ— اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟

அவர் கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (சூரியன் மறைகின்ற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளுக்கும்) இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிவீர்கள். எனவே சிந்தியுங்கள்!) info
التفاسير:

external-link copy
29 : 26

قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَیْرِیْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِیْنَ ۟

அவன் (மிரட்டிக்) கூறினான்: நீர் என்னை அன்றி வேறு ஒரு கடவுளை எடுத்துக் கொண்டால் சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன். info
التفاسير:

external-link copy
30 : 26

قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَیْءٍ مُّبِیْنٍ ۟ۚ

அவர் கூறினார்: நான் (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் கொண்டு வந்தாலுமா? (என்னை நீ நம்ப மறுப்பாய்!) info
التفاسير:

external-link copy
31 : 26

قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

அவன் கூறினான்: நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் அதைக் கொண்டு வாரீர். info
التفاسير:

external-link copy
32 : 26

فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ

ஆகவே, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) மலைப் பாம்பாக ஆகிவிட்டது. info
التفاسير:

external-link copy
33 : 26

وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠

அவர் தனது கையை (சட்டை பையிலிருந்து) வெளியே எடுக்க, அது உடனே பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையாக ஆகிவிட்டது. info
التفاسير:

external-link copy
34 : 26

قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ

அவன் தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: நிச்சயமாக இவர் நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான். info
التفاسير:

external-link copy
35 : 26

یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ۖۗ— فَمَاذَا تَاْمُرُوْنَ ۟

அவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது சூனியத்தால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? info
التفاسير:

external-link copy
36 : 26

قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ

அவர்கள் கூறினர்: அவருக்கும் அவரது சகோதரருக்கும் அவகாசம் அளி! நகரங்களில் (சூனியக்காரர்களை) அழைத்து வருபவர்களை அனுப்பு! info
التفاسير:

external-link copy
37 : 26

یَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیْمٍ ۟

(சூனியத்தை) கற்றறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் கொண்டு வருவார்கள். info
التفاسير:

external-link copy
38 : 26

فَجُمِعَ السَّحَرَةُ لِمِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۙ

அறியப்பட்ட ஒரு நாளின் குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர். info
التفاسير:

external-link copy
39 : 26

وَّقِیْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۟ۙ

மக்களுக்கு (அறிவிப்பு) கூறப்பட்டது: “நீங்கள் (இரு சாராரும் போட்டி போடும் போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) ஒன்று சேருவீர்களா?” info
التفاسير: