വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
22 : 39

اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰی نُوْرٍ مِّنْ رَّبِّهٖ ؕ— فَوَیْلٌ لِّلْقٰسِیَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ ؕ— اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

அல்லாஹ் எவருடைய நெஞ்சை இஸ்லாமிற்கு விரிவாக்கி, அவர் தன் இறைவனின் வெளிச்சத்தில் இருக்கின்றாரோ அவர் உள்ளம் இறுகியவருக்கு சமமாவாரோ? அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இறுகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர். info
التفاسير:

external-link copy
23 : 39

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِیْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ ۚ— ثُمَّ تَلِیْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰی ذِكْرِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُدَی اللّٰهِ یَهْدِیْ بِهٖ مَنْ یَّشَآءُ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

அல்லாஹ் மிக அழகிய பேச்சை -பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான- ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அதை ஓதுவதன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் மென்மையாகின்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகின்றான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கின்றானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் (அவரை நல்வழிபடுத்துபவர்) யாரும் இல்லை. info
التفاسير:

external-link copy
24 : 39

اَفَمَنْ یَّتَّقِیْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— وَقِیْلَ لِلظّٰلِمِیْنَ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟

தனது முகத்தால் மறுமை நாளில் கெட்ட வேதனையை தவிர்த்துக் கொள்பவன் (கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுகின்றவனைப் போன்று ஆவாரா?) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்து வந்ததை (அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்!” info
التفاسير:

external-link copy
25 : 39

كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟

இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் உணராத விதத்தில் அவர்களுக்கு வேதனை வந்தது. info
التفاسير:

external-link copy
26 : 39

فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْیَ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ— لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையில் தண்டனையை சுவைக்க வைப்பான்.) மறுமையின் வேதனை மிகப் பெரியது அவர்கள் (இதை) அறிய வேண்டுமே! info
التفاسير:

external-link copy
27 : 39

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ۚ

இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக விவரித்தோம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக. info
التفاسير:

external-link copy
28 : 39

قُرْاٰنًا عَرَبِیًّا غَیْرَ ذِیْ عِوَجٍ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

குழப்பம், கோணல் இல்லாத அரபி மொழி குர்ஆனாக (நாம் இதை ஆக்கினோம்) அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக. info
التفاسير:

external-link copy
29 : 39

ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِیْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ— هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ— اَلْحَمْدُ لِلّٰهِ ۚ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். ஒரு மனிதன் அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கின்றனர். (இது இணைவைப்பவனின் உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர், அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இவர் நம்பிக்கையாளருக்கு ஒப்பானவர்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா? எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
30 : 39

اِنَّكَ مَیِّتٌ وَّاِنَّهُمْ مَّیِّتُوْنَ ۟ؗ

நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான். info
التفاسير:

external-link copy
31 : 39

ثُمَّ اِنَّكُمْ یَوْمَ الْقِیٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ۟۠

பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் (உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள். info
التفاسير: