വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
11 : 48

سَیَقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَتْنَاۤ اَمْوَالُنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَنَا ۚ— یَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ— قُلْ فَمَنْ یَّمْلِكُ لَكُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ؕ— بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

கிராம அரபிகளில் (போருக்கு வராமல்) பின் தங்கியவர்கள் உமக்கு கூறுவார்கள்: “எங்களை எங்கள் செல்வங்களும் எங்கள் குடும்பங்களும் ஈடுபடுத்தின. (எனவேதான் ஜிஹாதில் நாங்கள் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லை.) ஆகவே, நீர் எங்களுக்காக (உமது இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோருவீராக!” அவர்கள் தங்கள் நாவுகளினால் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக! அல்லாஹ் உங்களுக்கு ஏதும் தீங்கை நாடினால், அல்லது உங்களுக்கு ஏதும் நன்மையை நாடினால் அல்லாஹ்விடம் உங்களுக்காக (அதில்) எதற்கும் யார் உரிமை பெறுவார்? மாறாக, அல்லாஹ் நீங்கள் செய்வதை (எல்லாம்) ஆழ்ந்தறிபவனாக இருக்கின்றான். info
التفاسير: