വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
13 : 67

وَاَسِرُّوْا قَوْلَكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

உங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள் அல்லது அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
14 : 67

اَلَا یَعْلَمُ مَنْ خَلَقَ ؕ— وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟۠

எவன் படைத்தானோ அவன் அறியமாட்டானா? அவன்தான் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
15 : 67

هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِیْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ ؕ— وَاِلَیْهِ النُّشُوْرُ ۟

அவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் பயன்படுத்துவதற்கு) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவனுடைய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் உங்களை) எழுப்பப்படுதல் இருக்கிறது. info
التفاسير: |

external-link copy
16 : 67

ءَاَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِیَ تَمُوْرُ ۟ۙ

வானத்தின் மேல் உள்ளவன் உங்களை பூமியில் சொருகிவிடுவதை நீங்கள் பயமற்று இருக்கின்றீர்களா? அப்போது அது (-பூமி) குலுங்கும். info
التفاسير: |

external-link copy
17 : 67

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یُّرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ؕ— فَسَتَعْلَمُوْنَ كَیْفَ نَذِیْرِ ۟

அல்லது வானத்தின் மேல் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை பயமற்று இருக்கின்றீர்களா? (நீங்கள் எனது வேதனையை கண் கூடாக பார்க்கும் போது) என் எச்சரிக்கை(யின் முடிவு) எப்படி இருக்கும் என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்! info
التفاسير: |

external-link copy
18 : 67

وَلَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟

இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் திட்டவட்டமாக பொய்ப்பித்தனர். எனது மறுப்பு(ம் மாற்றமும்) எப்படி இருந்தது? (என்று சிந்தித்து பாருங்கள்! info
التفاسير: |

external-link copy
19 : 67

اَوَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّیَقْبِضْنَ ؕۘؔ— مَا یُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ ؕ— اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ بَصِیْرٌ ۟

அவர்கள் தங்களுக்கு மேல் (இறக்கைகளை) விரித்தவைகளாகவும் (சில நேரம் அவற்றை தம் விலாக்களுடன்) மடக்கியவைகளாகவும் பறக்கின்ற பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? (அவை கீழே விழாமல் ஆகாயத்தில்) அவற்றை ரஹ்மானைத் தவிர (வேறு யாரும்) தடுக்கமுடியாது. நிச்சயமாக அவன் எல்லாப் பொருளையும் உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
20 : 67

اَمَّنْ هٰذَا الَّذِیْ هُوَ جُنْدٌ لَّكُمْ یَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ ؕ— اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِیْ غُرُوْرٍ ۟ۚ

மாறாக, ரஹ்மானை அன்றி உங்களுக்கு உதவுகின்ற உங்கள் ராணுவமாக உள்ள இவர்கள் யார்? (நீங்கள் யாரை நம்பி இருக்கின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு அறவே உதவமுடியாது.) நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்தில் தவிர இல்லை. info
التفاسير: |

external-link copy
21 : 67

اَمَّنْ هٰذَا الَّذِیْ یَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ— بَلْ لَّجُّوْا فِیْ عُتُوٍّ وَّنُفُوْرٍ ۟

மாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கின்ற இவர்கள் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு அப்படி யாரும் இருக்கின்றார்களா?) மாறாக, அவர்கள் வரம்பு மீறுவதிலும் விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர். info
التفاسير: |

external-link copy
22 : 67

اَفَمَنْ یَّمْشِیْ مُكِبًّا عَلٰی وَجْهِهٖۤ اَهْدٰۤی اَمَّنْ یَّمْشِیْ سَوِیًّا عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

தனது முகத்தின் மீது கவிழ்ந்தவனாக நடக்கின்றவன் நேர்வழி பெற்றவனா? (-அவன் தன் இலக்கை நோக்கி சென்று சேர முடியுமா?) அல்லது நேரான பாதையில் சரியாக நடக்கின்றவனா? info
التفاسير: |

external-link copy
23 : 67

قُلْ هُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ— قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை உருவாக்கினான். இன்னும் உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்! info
التفاسير: |

external-link copy
24 : 67

قُلْ هُوَ الَّذِیْ ذَرَاَكُمْ فِی الْاَرْضِ وَاِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை பூமியில் (பல ஊர்களில், பல நாடுகளில்) பரத்தினான். அவன் பக்கமே நீங்கள் (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவீர்கள். info
التفاسير: |

external-link copy
25 : 67

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

“(நபியே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (மறுமையில் அல்லாஹ்விடம் நாங்கள் எழுப்பப்படுவோம் என்ற) இந்த வாக்கு எப்பொழுது நிகழும்” (என்று எங்களுக்கு அறிவியுங்கள்!”) என அவர்கள் கூறுகின்றனர். info
التفاسير: |

external-link copy
26 : 67

قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۪— وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟

(நபியே!) கூறுவீராக! (அது பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது. நான் எல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான். info
التفاسير: |