വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
96 : 7

وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰۤی اٰمَنُوْا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَیْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ இறைத் தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (வேதனையால்) அவர்களைப் பிடித்தோம். info
التفاسير:

external-link copy
97 : 7

اَفَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا بَیَاتًا وَّهُمْ نَآىِٕمُوْنَ ۟ؕ

ஊர்வாசிகள் அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும் போது நம் வேதனை அவர்களுக்கு இரவில் வருவதை அவர்கள் அச்சமற்றார்களா? info
التفاسير:

external-link copy
98 : 7

اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰۤی اَنْ یَّاْتِیَهُمْ بَاْسُنَا ضُحًی وَّهُمْ یَلْعَبُوْنَ ۟

அல்லது ஊர்வாசிகள் அவர்கள் விளையாடும் போது நம் வேதனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை அச்சமற்றார்களா? info
التفاسير:

external-link copy
99 : 7

اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ— فَلَا یَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ ۟۠

அல்லாஹ்வின் சூழ்ச்சியை (அவர்கள்) அச்சமற்றார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
100 : 7

اَوَلَمْ یَهْدِ لِلَّذِیْنَ یَرِثُوْنَ الْاَرْضَ مِنْ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ— وَنَطْبَعُ عَلٰی قُلُوْبِهِمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟

பூமிக்கு அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையைக் கொண்டு) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
101 : 7

تِلْكَ الْقُرٰی نَقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآىِٕهَا ۚ— وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ۚ— فَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ— كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰی قُلُوْبِ الْكٰفِرِیْنَ ۟

(நபியே!) அந்த ஊர்கள் அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (ஓதி) விவரிக்கிறோம். அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். எனினும், முன்னர் அவர்கள் பொய்ப்பித்து விட்டதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான். info
التفاسير:

external-link copy
102 : 7

وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍ ۚ— وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِیْنَ ۟

அவர்களில் அதிகமானவர்களுக்கு எந்த வாக்குறுதியையும் (பேணும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை. நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்களை பாவிகளாகவே கண்டோம். info
التفاسير:

external-link copy
103 : 7

ثُمَّ بَعَثْنَا مِنْ بَعْدِهِمْ مُّوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَظَلَمُوْا بِهَا ۚ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟

அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய (அவைத்) தலைவர்களிடம் அனுப்பினோம். (அவர்கள்) அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக. info
التفاسير:

external-link copy
104 : 7

وَقَالَ مُوْسٰی یٰفِرْعَوْنُ اِنِّیْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

“ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்” என்று மூஸா கூறினார். info
التفاسير: