വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

പേജ് നമ്പർ:close

external-link copy
41 : 8

وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ— اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும் (உண்மை மற்றும் பொய்யிற்கும் நடுவில்) பிரித்தறிவித்த நாளில், இரு கூட்டமும் சந்தித்த நாளில் நம் அடியார் மீது நாம் இறக்கியதையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்... நிச்சயமாக நீங்கள் வென்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒன்று அல்லாஹ்வுக்கும், தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியது. அல்லாஹ் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன். info
التفاسير:

external-link copy
42 : 8

اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ— وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ— وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬— لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ— وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ

நீங்கள் (‘பத்ரு’ போரில் மதீனாவுக்குச்) சமீபமான பள்ளத்தாக்கிலும், அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும் (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழே இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் (வந்து சேர முடியாமல்) நீங்கள் தவறிழைத்திருப்பீர்கள். எனினும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும் அழிபவன் ஆதாரத்துடன் அழிவதற்காகவும் (தப்பி உயிர்) வாழ்பவன் ஆதாரத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு உங்களை அல்லாஹ் சந்திக்க வைத்தான்). நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
43 : 8

اِذْ یُرِیْكَهُمُ اللّٰهُ فِیْ مَنَامِكَ قَلِیْلًا ؕ— وَلَوْ اَرٰىكَهُمْ كَثِیْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

(நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை உமக்கு குறைவாக காண்பித்த சமயத்தை நினைவு கூருவீராக. உமக்கு அவர்களை அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள், (போர் பற்றிய) காரியத்தில் தர்க்கித்திருப்பீர்கள். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
44 : 8

وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக நீங்கள் (அவர்களை) சந்தித்தபோது உங்கள் கண்களில் உங்களுக்கு அவர்களை குறைவாக காண்பித்து, உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாக காண்பித்தபோது (சத்தியம் வென்றது). அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படும். info
التفاسير:

external-link copy
45 : 8

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (எதிரிகளின்) ஒரு கூட்டத்தை (போரில்) சந்தித்தால், நீங்கள் வெற்றிபெறுவதற்காக (போர்க்களத்தில்) உறுதியாக இருங்கள்; அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். info
التفاسير: