Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद सूरः: कहफ   श्लोक:
وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَیْهِمْ لِیَعْلَمُوْۤا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَیْبَ فِیْهَا ۚۗ— اِذْ یَتَنَازَعُوْنَ بَیْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَیْهِمْ بُنْیَانًا ؕ— رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْ ؕ— قَالَ الَّذِیْنَ غَلَبُوْا عَلٰۤی اَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَیْهِمْ مَّسْجِدًا ۟
18.21. அவர்களைப் பல வருடங்கள் தூங்க வைத்து பின்னர் எழுப்பி எங்களுடைய வல்லமையை அறிவிக்கக்கூடிய நாம் செய்த வியக்கத்தக்க செயல்களைப்போல அந்த நகர மக்களுக்கும் அவர்களைக் குறித்து அறிவித்தோம். அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்வதாகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதாகவும் அல்லாஹ் வழங்கிய வாக்குறுதி உண்மையே என்பதையும் சந்தேகமின்றி மறுமை நாள் வந்தே தீரும் எனவும் அவர்கள் அறிந்துகொள்வதற்காகவேயாகும். குகைவாசிகளின் விஷயம் வெளிப்பட்டு, அவர்கள் இறந்துவிட்ட பின் அவர்களுடைய விடயத்தையறிந்த மக்கள் அவர்களின் விஷயத்தில் என்ன செய்வது என கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் கூறினார்கள்: “அவர்கள் தங்கியிருந்த குகை வாயிலில் அவர்களைக் காக்கும் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள். இறைவனே அவர்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவர்களின் நிலை அவனிடத்தில் அவர்களுக்கு சிறப்பு இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. அவர்களில் அறிவும் சரியான பிரச்சாரமும் அற்ற செல்வாக்கு உடையவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவர்கள் தங்கியிருந்த இடத்தை நினைவுபடுத்தும் பொருட்டு அதன் மீது ஒரு வணக்கஸ்தலத்தை அமைப்போம்.”
अरबी व्याख्याहरू:
سَیَقُوْلُوْنَ ثَلٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ ۚ— وَیَقُوْلُوْنَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًا بِالْغَیْبِ ۚ— وَیَقُوْلُوْنَ سَبْعَةٌ وَّثَامِنُهُمْ كَلْبُهُمْ ؕ— قُلْ رَّبِّیْۤ اَعْلَمُ بِعِدَّتِهِمْ مَّا یَعْلَمُهُمْ اِلَّا قَلِیْلٌ ۫۬— فَلَا تُمَارِ فِیْهِمْ اِلَّا مِرَآءً ظَاهِرًا ۪— وَّلَا تَسْتَفْتِ فِیْهِمْ مِّنْهُمْ اَحَدًا ۟۠
18.22. அவர்களின் சம்பவத்தில் அவர்களின் எண்ணிக்கையைக்குறித்து யூகம் செய்து கூறுபவர்களில் சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் மூன்று பேர். நான்காவது அவர்களின் நாய் என்று.” சிலர் கூறுகிறார்கள்: “அவர்கள் ஐந்து பேர். ஆறாவது அவர்களின் நாய் என்று.” இரு பிரிவினரும் ஆதாரமின்றி அனுமானத்தின் படியே கூறுகிறார்கள். அவர்களில் சிலர், “அவர்கள் ஏழு பேர். எட்டாவது அவர்களின் நாய்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “என் இறைவனே அவர்களின் எண்ணிக்கையை நன்கறிந்தவன். அல்லாஹ் கற்றுக்கொடுத்த சிலரைத் தவிர வேறு யாரும் அவர்களின் எண்ணிக்கையை அறிய மாட்டார்கள். அவர்களின் எண்ணிக்கையைக் குறித்தோ, அவர்களது நிலைமைகளில் மற்ற விஷயங்களைக்குறித்தோ வேதக்காரர்களிடமோ அவர்களைத் தவிர மற்றவர்களிடமோ வெளிப்படையாக அன்றி ஆழமாக விவாதம் செய்யாதீர். அவர்கள் குறித்து அல்லாஹ் உமக்கு இறக்கிய வஹியை போதுமாக்கிக் கொள்வீராக. அவர்களைக் குறித்த விபரங்களை வேறு யாரிடமும் நீர் கேட்காதீர். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அதனை அறியமாட்டார்கள்.
अरबी व्याख्याहरू:
وَلَا تَقُوْلَنَّ لِشَایْءٍ اِنِّیْ فَاعِلٌ ذٰلِكَ غَدًا ۟ۙ
18.23. நபியே! நீர் நாளை செய்ய விரும்பும் எதைக் குறித்தும், “நான் இதனை நாளை செய்து விடுவேன்” என்று கூறாதீர். ஏனெனில் நீர் அதைச் செய்வீரா? அல்லது உமக்கும் அந்த விஷயத்திற்கும் மத்தியில் ஏதேனும் குறுக்கிட்டு விடுமா? என்பதைக் குறித்து நீர் அறியமாட்டீர். இது ஒவ்வொரு முஸ்லிமுக்குமான வழிகாட்டலாகும்.
अरबी व्याख्याहरू:
اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؗ— وَاذْكُرْ رَّبَّكَ اِذَا نَسِیْتَ وَقُلْ عَسٰۤی اَنْ یَّهْدِیَنِ رَبِّیْ لِاَقْرَبَ مِنْ هٰذَا رَشَدًا ۟
18.24. ஆயினும் . “அல்லாஹ் நாடினால் நாளை செய்வேன்” என்று கூறுவதன் மூலம் உம்முடைய செயலை இறைநாட்டத்தோடு இணைத்தாலே தவிர. நீர் -அவ்வாறு கூற மறந்துவிட்டால்- (இன்ஷா அல்லாஹ்) அல்லாஹ் நாடினால் என்று கூறி உம் இறைவனை நினைவுபடுத்திக் கொள்வீராக. இன்னும் “என் இறைவன் எனக்கு இதைவிட நேர்வழிக்கு அண்மையான விஷயத்தின்பால் வழிகாட்டக்கூடும்” என்று கூறுவீராக.
अरबी व्याख्याहरू:
وَلَبِثُوْا فِیْ كَهْفِهِمْ ثَلٰثَ مِائَةٍ سِنِیْنَ وَازْدَادُوْا تِسْعًا ۟
18.25. குகைவாசிகள் குகையில் முந்நூற்று ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்.
अरबी व्याख्याहरू:
قُلِ اللّٰهُ اَعْلَمُ بِمَا لَبِثُوْا ۚ— لَهٗ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَبْصِرْ بِهٖ وَاَسْمِعْ ؕ— مَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ ؗ— وَّلَا یُشْرِكُ فِیْ حُكْمِهٖۤ اَحَدًا ۟
18.26. தூதரே! நீர் கூறுவீராக: “அவர்கள் குகையில் தங்கியிருந்ததை அல்லாஹ்வே நன்கறிவான். அவர்கள் தங்கியிருந்த காலத்தை நாம் அறிவித்துவிட்டோம். அதற்குப் பிறகு எவருடைய கூற்றும் ஏற்றுக்கொள்ளப்படாது. வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவான விஷயங்களை அல்லாஹ்வே நன்கறிவான். அவன் எவ்வளவு நன்றாக பார்க்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் எவ்வளவு நன்றாக கேட்கக்கூடியவன்! அவன் அனைத்தையும் செவியேற்கிறான். அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பொறுப்பாளன் இல்லை. தனது சட்டத்தில் யாரையும் அவன் சேர்த்துக்கொள்ளமாட்டான். அவன் தனித்து சட்டம் கூறுபவன்.
अरबी व्याख्याहरू:
وَاتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنْ كِتَابِ رَبِّكَ ؕ— لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ ۫ۚ— وَلَنْ تَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟
18.27. தூதரே! அல்லாஹ் உமக்கு வஹியாக அளித்த குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவீராக. அதனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் யாரும் இல்லை. ஏனெனில் நிச்சயமாக அவை முழுக்க முழுக்க உண்மையானதாகவும் நீதியானதாகவும் இருக்கின்றது. அவனைத் தவிர உமக்கு ஒதுங்குவதற்கு அடைக்கலத்தையோ பாதுகாத்து அபயமளிப்பரையோ நீர் காணமாட்டீர்.
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• اتخاذ المساجد على القبور، والصلاة فيها، والبناء عليها؛ غير جائز في شرعنا.
1. அடக்கஸ்த்தலங்களில் பள்ளிவாயில்களை எழுப்புவது, அதில் நின்று தொழுவது, அதன் மீது கட்டடம் எழுப்புவது எமது மார்க்கத்தில் முழுக்க முழுக்க தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

• في القصة إقامة الحجة على قدرة الله على الحشر وبعث الأجساد من القبور والحساب.
2. குகைவாசிகளின் சம்பவத்தில், ஒன்று திரட்டப்படல், அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படல், கேள்வி கணக்குக் கேட்டல் ஆகியவற்றின் மீது அல்லாஹ் ஆற்றலுள்ளவனே என்பதற்கான சான்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

• دلَّت الآيات على أن المراء والجدال المحمود هو الجدال بالتي هي أحسن.
3. அழகிய முறையில் விவாதம் செய்வதே புகழப்படக்கூடிய விவாதமாகும் என்பதை மேலுள்ள வசனங்கள் குறிப்பிட்டுள்ளன.

• السُّنَّة والأدب الشرعيان يقتضيان تعليق الأمور المستقبلية بمشيئة الله تعالى.
4. எதிர்கால விஷயங்களை இறைநாட்டத்தோடு இணைத்து விடுவதே இஸ்லாம் நமக்குக் கற்றுத்தரும் ஒழுக்கமும் வழிமுறையுமாகும்.

 
अर्थको अनुवाद सूरः: कहफ
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । - अनुवादहरूको सूची

मर्क्ज तफ्सीर लिद्दिरासात अल-कुर्आनियह द्वारा प्रकाशित ।

बन्द गर्नुस्