पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद श्लोक: (77) सूरः: सूरतुन्निसा
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ— وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ— لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ— قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ— وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫— وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟
4.77. தூதரே! உம்மிடம், “எங்கள்மீது போர் கடமையாக்கப்படக்கூடாதா” என்று கேட்ட உமது சில தோழர்களைக் குறித்து உமக்குத் தெரியுமா? அவர்களிடம் கூறப்பட்டது: “போர் புரியாமல் கைகளைத் தடுத்துக் கொள்ளுங்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள், ஸகாத்தை வழங்கி வாருங்கள்.” இது போர் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் உள்ள நிலமையாகும். அதன் பின் மதீனாவை நோக்கி புலம்பெயர்ந்து இஸ்லாத்திற்கு பலம் கிடைத்தவுடன், போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலருக்கு அது சிரமமாகத் தோன்றியது. அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதுபோன்று அல்லது அதைவிட அதிகமாக மக்களுக்கு அஞ்சுவோராக மாறிவிட்டனர். அவர்கள் கூறினார்கள், எங்கள் இறைவா! எங்கள்மீது ஏன் போரைக் கடமையாக்கினாய்? நாங்கள் இவ்வுலகில் அனுபவிக்கும்வரை இன்னும் சிறிதுகாலம் அதனைத் தாமதப்படுத்தியிருக்கக்கூடாதா?” தூதரே! அவர்களிடம் நீர் கூறுவீராக: எவ்வளவுதான் இவ்வுலக இன்பங்கள் இருந்தாலும் அவைகள் அழியக்கூடிய அற்ப இன்பங்களேயாகும். அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நிலையான இன்பங்களே சிறந்ததாகும். உங்களின் நன்மைகளில் எதுவும் குறைக்கப்படாது. அது பேரீச்சங்கொட்டையின் நூலளவாக இருந்தாலும் சரியே.”
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• وجوب القتال لإعلاء كلمة الله ونصرة المستضعفين، وذم الخوف والجبن والاعتراض على أحكام الله.
1. அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனர்களுக்கு உதவிசெய்வதற்காகவும் போர்செய்வது கடமையாகும். பயம், கோழைத்தனம், அல்லாஹ்வின் சட்டங்களை ஆட்சேபித்தல் ஆகிய பண்புகள் இகழப்பட்டுள்ளன.

• الدار الآخرة خير من الدنيا وما فيها من متاع وشهوات لمن اتقى الله تعالى وعمل بطاعته.
2. அல்லாஹ்வை அஞ்சி, அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்போருக்கு இந்த உலகம் மற்றும் அதிலுள்ள இன்பங்கள் அனைத்தைக்காட்டிலும் மறுமையின் இன்பங்களே சிறந்தவையாகும்.

• الخير والشر كله بقدر الله، وقد يبتلي الله عباده ببعض السوء في الدنيا لأسباب، منها: ذنوبهم ومعاصيهم.
3.அனைத்து நலவுகளும் தீமைகளும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கின்றன. பாவங்கள் போன்ற சில காரணங்களினால் சில துன்பங்களைக்கொண்டு தனது அடியார்களை அல்லாஹ் இவ்வுலகில் சோதிப்பான்.

 
अर्थको अनुवाद श्लोक: (77) सूरः: सूरतुन्निसा
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - अनुवादहरूको सूची

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

बन्द गर्नुस्