Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद सूरः: वाकियह   श्लोक:
اِنَّهٗ لَقُرْاٰنٌ كَرِیْمٌ ۟ۙ
56.77. -மனிதர்களே!- நிச்சயமாக உங்களிடம் எடுத்துரைக்கப்படும் இந்தக் குர்ஆன் தன்னுள் உள்ளடக்கியுள்ள பெரும் நன்மைகளினால் கண்ணியமிக்க குர்ஆனாகும்.
अरबी व्याख्याहरू:
فِیْ كِتٰبٍ مَّكْنُوْنٍ ۟ۙ
56.78. அது மக்களின் பார்வையைவிட்டும் பாதுகாப்பட்ட லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் ஏட்டில் உள்ளது.
अरबी व्याख्याहरू:
لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ ۟ؕ
56.79. பாவங்கள் மற்றும் குறைகளைவிட்டும் தூய்மையான வானவர்கள்தாம் அதனைத் தொடுவார்கள்.
अरबी व्याख्याहरू:
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
56.80. அது படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவனிடமிருந்து அவனுடைய நபி முஹம்மதுமீது இறக்கப்பட்டதாகும்.
अरबी व्याख्याहरू:
اَفَبِهٰذَا الْحَدِیْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَ ۟ۙ
56.81. -இணைவைப்பாளர்களே!- இந்த செய்தியையா நீங்கள் உண்மைப்படுத்தாமல் பொய்யெனக் கூறுகிறீர்கள்?
अरबी व्याख्याहरू:
وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ ۟
56.82. அல்லாஹ்வை பொய்ப்பிப்பதுதான் உங்களுக்கு அவன் வழங்கிய அருட்கொடைகளுக்காக நீங்கள் நன்றி செலுத்தும் முறையா? எனவேதான் “இன்னஇன்ன நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது” என்று மழையை நட்சத்திரங்களின்பால் இணைத்துக் கூறுகிறீர்களா?
अरबी व्याख्याहरू:
فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُلْقُوْمَ ۟ۙ
56.83. உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டால்
अरबी व्याख्याहरू:
وَاَنْتُمْ حِیْنَىِٕذٍ تَنْظُرُوْنَ ۟ۙ
56.84. அப்போது நீங்கள் மரண மயக்கத்தில் கிடப்பவனை உங்களுக்கு முன்னால் காண்பீர்கள்.
अरबी व्याख्याहरू:
وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْكُمْ وَلٰكِنْ لَّا تُبْصِرُوْنَ ۟
56.85. நமது அறிவு, ஆற்றல், வானவர்கள் சகிதம் உங்களைவிட மரணிப்பவருக்கு அருகில் நாமிருப்போம். ஆயினும் உங்களால் இந்த வானவர்களைக் காண முடியாது.
अरबी व्याख्याहरू:
فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَیْرَ مَدِیْنِیْنَ ۟ۙ
56.86. -நீங்கள் எண்ணுவதுபோல உங்களின் செயல்களுக்குக் கூலி வழங்கப்படுவதற்காக நீங்கள் மீண்டும் எழுப்பப்படாதவர்களாக- இருந்திருக்கலாமே!
अरबी व्याख्याहरू:
تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
56.87,88. அந்தக் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களில் இறப்பவரிடமிருந்து வெளிப்படும் இந்த ஆன்மாவை உங்களால் ஏன் திரும்பக் கொண்டுவர முடிவதில்லை? நீங்கள் ஒருபோதும் அதற்கு சக்திபெற மாட்டீர்கள்.
अरबी व्याख्याहरू:
فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
56.88. இறப்பவர் நன்மைகளின்பால் முந்திக் கொண்டு செயல்படக்கூடியவராக இருந்தால்.
अरबी व्याख्याहरू:
فَرَوْحٌ وَّرَیْحَانٌ ۙ۬— وَّجَنَّتُ نَعِیْمٍ ۟
56.89. அவருக்கு ஓய்வு கிடைக்கும். அதன் பின்னர் அவர் களைப்படைய மாட்டார். நல்ல வாழ்வாதாரமும் அருளும் மனம் விரும்பியதை அனுபவிக்கும் சுவனமும் அவருக்கு உண்டு.
अरबी व्याख्याहरू:
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟ۙ
56.90. இறப்பவர் வலப்புறத்தில் உள்ளவராக இருந்தால் அவர்களின் விடயங்களை குறித்து நீர் கவலைப்படாதீர். அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் உண்டு.
अरबी व्याख्याहरू:
فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْیَمِیْنِ ۟
56.91. இறப்பவர் வலப்புறத்தில் உள்ளவராக இருந்தால் அவர்களின் விடயங்களை குறித்து நீர் கவலைப்படாதீர். அவர்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் உண்டு.
अरबी व्याख्याहरू:
وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِیْنَ الضَّآلِّیْنَ ۟ۙ
56.92. இறப்பவர் தூதர் கொண்டுவந்ததை பொய்ப்பிப்பவர்களில், நேரான வழியைவிட்டும் தவறியவர்களில் உள்ளவராக இருந்தால்
अरबी व्याख्याहरू:
فَنُزُلٌ مِّنْ حَمِیْمٍ ۟ۙ
56.93. அவரை வரவேற்கும் விருந்து கடும் சூடான கொதி நீராகும்.
अरबी व्याख्याहरू:
وَّتَصْلِیَةُ جَحِیْمٍ ۟
56.94. அவரை நரக நெருப்பு எரிக்கும்.
अरबी व्याख्याहरू:
اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْیَقِیْنِ ۟ۚ
56.95. -தூதரே!- நாம் உமக்கு எடுத்துரைத்த இவைகளே சந்தேகமற்ற உறுதியான உண்மையாகும்.
अरबी व्याख्याहरू:
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
56.96. மகத்தான உம் இறைவனின் பெயரைத் தூய்மைப்படுத்துவீராக. குறைகளைவிட்டும் அதனைத் தூய்மைப்படுத்துவீராக.
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• شدة سكرات الموت وعجز الإنسان عن دفعها.
1. மரண வேதனையின் கடினமும் அதனைத் தடுக்க முடியாத மனிதனின் இயலாமையும்.

• الأصل أن البشر لا يرون الملائكة إلا إن أراد الله لحكمة.
2. நிச்சயமாக மனிதர்களால் வானவர்களைப் பார்க்க முடியாது என்பதே அடிப்படையாகும். ஆயினும் ஒரு நோக்கத்திற்காக அல்லாஹ் நாடினாலே தவிர.

• أسماء الله (الأول، الآخر، الظاهر، الباطن) تقتضي تعظيم الله ومراقبته في الأعمال الظاهرة والباطنة.
3. (ஆரம்பமானவன், இறுதியானவன், வெளிரங்கமானவன், உள்ரங்கமானவன் ஆகிய) அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லாஹ்வை மதித்து வெளிரங்கமான உள்ரங்கமான செயல்களில் அவனது கண்காணிப்பை நினைவில் கொள்ளவேண்டும் என்பதை வேண்டிநிற்கின்றன.

 
अर्थको अनुवाद सूरः: वाकियह
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । - अनुवादहरूको सूची

मर्क्ज तफ्सीर लिद्दिरासात अल-कुर्आनियह द्वारा प्रकाशित ।

बन्द गर्नुस्