Check out the new design

पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । * - अनुवादहरूको सूची


अर्थको अनुवाद सूरः: मअारिज   श्लोक:

அல்மஆரிஜ்

सूरहका अभिप्रायहरूमध्ये:
بيان حال وجزاء الخلق يوم القيامة.
மறுமையில் படைப்பினங்களின் நிலையையும், அவர்களுக்கான கூலியையும் தெளிவுபடுத்தல்

سَاَلَ سَآىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۟ۙ
70.1. இணைவைப்பாளர்களில் ஒருவன் இந்த வேதனை சாத்தியமென்றால் தனக்கு எதிராகவும் தன் சமூகத்திற்கு எதிராகவும் வேதனையைக் கொண்டுவரும்படி பிரார்த்தித்துவிட்டான். அவன் அதனைப் பரிகாசம் செய்கிறான். ஆனால் அது மறுமை நாளில் நிகழக்கூடியதாகும்.
अरबी व्याख्याहरू:
لِّلْكٰفِرِیْنَ لَیْسَ لَهٗ دَافِعٌ ۟ۙ
70.2. அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு இந்த வேதனையைத் தடுப்பவர் யாரும் இல்லை.
अरबी व्याख्याहरू:
مِّنَ اللّٰهِ ذِی الْمَعَارِجِ ۟ؕ
70.3. அது உயர்வும் அந்தஸ்துகளும் அருட்கொடைகளையும் உடைய அல்லாஹ்விடமிருந்து உள்ளதாகும்.
अरबी व्याख्याहरू:
تَعْرُجُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِیْنَ اَلْفَ سَنَةٍ ۟ۚ
70.4. வானவர்களும் ஜிப்ரீலும் மறுமை நாளில் அவன் பக்கம் அந்த ஏணிகளில் மறுமை நாளில் ஏறிச் செல்வார்கள். அது ஜம்பதாயிரம் ஆண்டுகள் அளவைக்கொண்ட நீண்ட நாளாகும்.
अरबी व्याख्याहरू:
فَاصْبِرْ صَبْرًا جَمِیْلًا ۟
70.5. -தூதரே!- பதற்றமோ, முறையீடோ அற்ற பொறுமையைக் கடைபிடிப்பீராக.
अरबी व्याख्याहरू:
اِنَّهُمْ یَرَوْنَهٗ بَعِیْدًا ۟ۙ
70.6. நிச்சயமாக அவர்கள் அந்த வேதனை நிகழ்வதை சாத்தியமற்றதாகவே கருதுகிறார்கள்.
अरबी व्याख्याहरू:
وَّنَرٰىهُ قَرِیْبًا ۟ؕ
70.7. நாம் அதனை அண்மையில் சந்தேகமின்றி நிகழக்கூடியதாகக் காண்கிறோம்.
अरबी व्याख्याहरू:
یَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِ ۟ۙ
70.8. வானம் உருக்கப்பட்ட செம்பு, தங்கம் போன்ற ஒன்றைப்போன்று இருக்கும் நாளில்.
अरबी व्याख्याहरू:
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ ۟ۙ
70.9. மலைகள் (கம்பளி) பஞ்சைப் போன்று பாரமற்றதாக ஆகிவிடும் (நாளில்)
अरबी व्याख्याहरू:
وَلَا یَسْـَٔلُ حَمِیْمٌ حَمِیْمًا ۟ۚۖ
70.10. எந்த நெருங்கிய நண்பனும் தனக்கு நெருங்கிய நண்பனின் நிலைமையை பற்றிக் கேட்க மாட்டான். ஏனெனில் நிச்சயமாக ஒவ்வொருவனும் தன்னைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருப்பான்.
अरबी व्याख्याहरू:
यस पृष्ठको अायतहरूका लाभहरूमध्येबाट:
• تنزيه القرآن عن الشعر والكهانة.
1. கவிதை, ஜோதிடம் ஆகியவற்றைவிட்டும் குர்ஆன் தூய்மையானது.

• خطر التَّقَوُّل على الله والافتراء عليه سبحانه.
2. அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிக் கூறுவதன் விபரீதம்.

• الصبر الجميل الذي يحتسب فيه الأجر من الله ولا يُشكى لغيره.
3. அழகான பொறுமை என்பது அல்லாஹ்விடமிருந்து கூலியை எதிர்பார்த்து ஏனையவர்களிடம் முறையீடு செய்யாமல் இருப்பதாகும்.

 
अर्थको अनुवाद सूरः: मअारिज
अध्यायहरूको (सूरःहरूको) सूची رقم الصفحة
 
पवित्र कुरअानको अर्थको अनुवाद - पवित्र कुर्आनको संक्षिप्त व्याख्याको तमिल भाषामा अनुवाद । - अनुवादहरूको सूची

मर्क्ज तफ्सीर लिद्दिरासात अल-कुर्आनियह द्वारा प्रकाशित ।

बन्द गर्नुस्