पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

رقم الصفحة:close

external-link copy
53 : 3

رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟

"எங்கள் இறைவா! நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டோம். தூதரை பின்பற்றினோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை பதிவு செய்!" (என்று பிரார்த்தித்தனர்). info
التفاسير:

external-link copy
54 : 3

وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ— وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠

(யூதர்கள்) சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலானவன். info
التفاسير:

external-link copy
55 : 3

اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ— ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟

அல்லாஹ் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக! "ஈஸாவே நிச்சயமாக நான் உம்மை (பூமியிலிருந்து) கைப்பற்றுவேன்; உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; நிராகரிப்பாளர்களிலிருந்து உம்மைப் பரிசுத்தப்படுத்துவேன்; உம்மைப் பின்பற்றுபவர்களை இறுதிநாள் வரை நிராகரிப்பவர்களுக்கு மேலாக ஆக்குவேன்."(நிராகரிப்பாளர்களே) பிறகு என் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். info
التفاسير:

external-link copy
56 : 3

فَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ— وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கடினமான வேதனையால் வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை. info
التفاسير:

external-link copy
57 : 3

وَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟

ஆக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களின் (நற்)கூலிகளை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான். info
التفاسير:

external-link copy
58 : 3

ذٰلِكَ نَتْلُوْهُ عَلَیْكَ مِنَ الْاٰیٰتِ وَالذِّكْرِ الْحَكِیْمِ ۟

(நபியே!) இது, (இறை) வசனங்களிலிருந்தும் ஞானமிகுந்த உபதேசத்திலிருந்தும் உம்மீது இதை ஓதுகிறோம். info
التفاسير:

external-link copy
59 : 3

اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ— خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவின் உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றாகும் அவரை மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ‘ஆகு' என்று அவருக்கு கூறினான். (உடனே மனிதனாக) ஆகிவிட்டார். info
التفاسير:

external-link copy
60 : 3

اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟

(நபியே! இந்த) உண்மை உம் இறைவனிடமிருந்துள்ளதாகும். ஆகவே, சந்தேகிப்பவர்களில் ஆகிவிடாதீர். info
التفاسير:

external-link copy
61 : 3

فَمَنْ حَآجَّكَ فِیْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ۫— ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَی الْكٰذِبِیْنَ ۟

ஆகவே, (நபியே! இதைப்பற்றிய) கல்வி உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது உம்மிடம் தர்க்கித்தால், கூறுவீராக: "வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். (அனைவரும் ஒன்றுகூடி) பிறகு, பிரார்த்திப்போம்: பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை ஆக்குவோம்." info
التفاسير: