पवित्र कुरअानको अर्थको अनुवाद - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

رقم الصفحة:close

external-link copy
45 : 4

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآىِٕكُمْ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَلِیًّا ؗۗ— وَّكَفٰی بِاللّٰهِ نَصِیْرًا ۟

உங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்தான் போதுமானவன். info
التفاسير:

external-link copy
46 : 4

مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ— وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ— وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟

யூதர்களில் (சிலர்) வசனங்களை அதன் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். "(நபியே!) செவியுற்றோம். (எனினும்) (அதற்கு) மாறு செய்தோம். (நீர்) கேட்கப்படாதவராக கேட்பீராக. இன்னும் தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) ராயினா என்று கூறுகின்றனர். செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்றும் ‘இஸ்மஃÕ, (கேட்பீராக) ‘உன்ளுர்னாÕ (எங்களைப் பார்ப்பீராக) என்றும் நிச்சயமாக அவர்கள் கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
47 : 4

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰۤی اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ ؕ— وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟

வேதம் கொடுக்கப்பட்டவர்களே! முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர் அல்லது சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் கட்டளையிட்டது நிறைவேற்றப்பட்டே ஆகும். info
التفاسير:

external-link copy
48 : 4

اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ۚ— وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا ۟

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர உள்ளதை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ (அவர்) திட்டமாக பெரும் பாவத்தை புனைந்துவிட்டார். info
التفاسير:

external-link copy
49 : 4

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ— بَلِ اللّٰهُ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟

(நபியே!) தங்களை (தாமே) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? மாறாக, அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) (பேரீத்தங்கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
50 : 4

اُنْظُرْ كَیْفَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ— وَكَفٰی بِهٖۤ اِثْمًا مُّبِیْنًا ۟۠

(நபியே!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யைக் கற்பனை செய்கின்றனர். பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமாகும். info
التفاسير:

external-link copy
51 : 4

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَیَقُوْلُوْنَ لِلَّذِیْنَ كَفَرُوْا هٰۤؤُلَآءِ اَهْدٰی مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا سَبِیْلًا ۟

(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலையையும் நம்பிக்கை கொள்கின்றனர். நிராகரிப்பாளர்களை நோக்கி "இவர்கள்தான் நம்பிக்கையாளர்களை விட பாதையால் (மார்க்கத்தால்) மிக நேர்வழியாளர்கள்” என்று கூறுகின்றனர். info
التفاسير: